Go to full page →

GOD’S LOVE TO MAN SC 1

தேவன் மனுஷரிடத்தில் வைத்திருக்கிற அன்பு. SC 1

இயற்கைப் பிரமாணம், வேதப்பிரமாணாமாகிய இரண்டும் ஒன்றுபோல் தேவன்பைக் காட்டுகின்றன. பரலோகத்திலிருக்கிற நமது பிதாவானவரே ஜீவன், ஞானம், சந்தோஷமாகிய இவைகளுக்கு மூலகர்த்தா. பிரகிருதியைச் சேர்ந்த வியப்பும் சிறப்பு மிகுந்த பொருட்களைப் பாருங்கள் மனிதருக்கு மாத்திரமல்ல, ஜீவப்பிராணிகளின் அவசியத்திற்கும், சௌக்கியத்திற்கும், இன்பத்திற்கும் ஏற்றபடி அவைகள் அமைந்திருப்பதைச் சற்றுக் கவனியுங்கள். பூமியை உயிர்ப்பித்துச் செழிப்பாக்குகிற சூரியவொளியும் மழையும், குன்றுகளும் மலைகளும், கடல்களும் சமுத்திரங்களும், வெளிகளும் மைதானங்களும், இவைகளிலுள்ள யாவும் தேவன்பை நமக்குத் தெரிவிக்கின்றன. தமது சிருஷ்டிகளனைத்திற்கும் வேண்டியவைகளை நாடோறும் அளிப்பதும் அவரே. சங்கீதக்காரன் இதைப்பற்றிச் சொல்லுகிறதாவது:- SC 1.1

“எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது: ஏற்ற வேளையிleeeலே நீர் அவைகளுக்கு ஆகாரங் கொடுக்கிறீர் - நீர் உமது கையைத்திறந்து சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.” சங். 145: 15, 16 என்பதே. SC 2.1

தேவன் மனிதனைப் பூரணபரிசுத்தமும், நிறைந்த பாக்கியமுமுள்ள நிலைமையிலே சிருஷ்டித்தார். அழகுவாய்ந்த பூமியும் சிருஷ்டிகருடைய கரத்திலிருந்து வந்தபடியே, பழுதும் கேடும், சாபத்தின் நிழலுங் கடுகளவேனுமில்லாதிருந்தது. அன்பின் பிரமாணமகிய தேவனுடைய கற்பனையை மனிதன் மீறினதினாலே பூமியில் துக்கமும் மரணமுமுண்டாயிற்று. பாவத்தின் பலனாகவந்த பாடுகளிலேயும் தேவன்பு விளங்குகிறது. மனிதன் நிமித்தம் தேவன் பூமியைச் சபித்தார். ஆதி. 3: 17 என்று வேதத்தில் வாசிக்கிறோம். மனிதனுடைய வாழ்நாட்களை பிரயாசமும் கவலையுமுள்ளதாக்குகிற முள்ளும் குருக்கும், சஷ்டங்களும் நஷ்டங்களும், பாவத்தினால் விளைந்தகேட்டிலிருந்தும் நாசத்திலிருந்தும் அவனைத் தூக்கிவிடுவதற்கேற்றவைகளாயிருக்கின்றன. ஆகவே, அவைகள் தேவனுடைய முறைப்படி அவனைப் பயிற்றுவிக்கவேண்டிய ஓர் பாகமாய், அவனது நன்மைக்கென்றே நியமிக்கப்பட்டிருக்கின்றன. உலகம் விழுந்துபோயிருந்தாலும், முழுவதும் துக்கமும் நிர்ப்பந்தமுமாயில்லை, பிரகிருதியிலே நம்பிக்கையும் ஆறுதலு முள்ள விஷயங்களுமுண்டு. குருக்குச்செடிகளிலே அழகிய மலர்களும், முட்செடிகளிலே நேர்த்தியான ரோஜாப்புஷ்பங்களும் நிறைந்திருகிறதைப் பார்க்கிறோமல்லவா? SC 2.2

“தேவன் அன்பாயிருக்கிறார்” என்கிற சத்தியத்தை ஒவ்வோரு பூமொட்டிலும், ஓங்கிவளரும் ஒவ்வொரு புல்தாளிலும் காணலாம். அழகுபொருந்திய அருமையான குருவிகள் தங்கள் இன்பக்கீதங்களைப் பாட ஆகாயம் இனிய தொனியால் நிறைகிறது. கண்ணுக்கினிய மெல்லிய புட்பங்கள் விரிந்து மலர ஆகாயம் எங்கும் பரிமளிக்கிறது. காட்டிலுமுள்ள உயர் மரங்கள் துளிர் விட்டு செழித்தோங்கி வளர்ந்து நம்முடைய தேவன் நம்மேல் பிதாவடைவான கவலையும், இரக்க உருக்கமுமுள்ள வராயிருக்கிறார் என்று வெளியிடுகின்றன. இவ்விதமாய் தேவன் தம்முடைய பிள்ளைகளைப் பிரியப்படுத்தப் பார்க்கிறார் என்று அறிகிறோம். SC 3.1

தேவனுடைய வார்த்தையாகிய வேதமும் அவருடைய திவ்ய இலக்ஷணத்தை வெளியிடுகின்றது. அவர் தாமே தமது அளவற்ற அன்பையும் இரக்கதையும் அறிவித்திருக்கிறார். மோசே கர்த்தரை நோக்கி “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்,” யாத். 33: 18 என்று விண்ணப்பம் பண்ணினான். “அதற்கு அவர்: என்னுடைய தயையையெல்லாம் நான் உனக்கு முன்பாக்க் கடந்து போகப்பண்ணுவேன்” யாத். 33: 19 என்றார். அவருடைய மகிமை இதுதான். கர்த்தர் மோசேக்கு முன்னே கடந்து போகிறபோது, “கர்த்தர், கர்த்தர், இரக்கமும் கிருபையும் நீடியசாந்தமும் மகாதயையும் சத்தியமுமுள்ள தேவன். ஆயிரந்தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர். அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர் என்று கூறினார்” யாத். 34: 6, 7. “அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால்” மீகா. 7: 18 “மிகுந்த கிருபையுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப் படுகிறவருமானவர்” யோனா. 4: 2. SC 3.2

வானத்திலும் பூமியிலுமுள்ள கணக்கற்ற அடையாளங்களினால் நம்முடைய இருதயத்தை தேவன் தம்மோடு கூட இணைத்திருக்கிறார். இயற்கைப் பொருள்களின் மூலமாயும், மனித இருதயமறியக்கூடிய இரக்க வுருக்கமான லௌகீக பாசத்தாலும், தம்மை நமக்கு வெளிப்படுத்த முயற்சிக்கிறார். ஆயினும் இவைகள் அவரது அன்பை நிறைவாய் நமக்குக் காட்டுகிறதில்லை. இந்த அத்தாக்ஷி கள் யாவும் நமக்கருளப்பட்டிருந்தாலும், அவர் கொடியவர் என்றும், மன்னிப்பருளாதவர் என்றும் எண்ணி திகிலோடே அவரை நோக்கிப்பார்க்கும்படி, நன்மைக்குச் சத்துருவாகிய பிசாசானவன் மனிதருடைய மனதை குருடாக்கிப்போடுகிறான். தேவன் பிடிவாதகுணமுள்ள நீதியதிபர், கடூரமான நியாயாதிபதி, பக்ஷாதாபமில்லாத விடாக்கடன்காரன், என்னும் லக்ஷணங்களையே மனிதர் எண்ணும்படி செய்துவிடுகிறான். மேலும் சிருஷ்டிகர்த்தாவானவர் மனிதனுடைய குற்றங்களையும் தப்பிதங்களையும் பார்த்து, அவர்கள் மேல் ஆக்கினையை யனுப்பும்படி அவர் கண்கள் மகாவிழிப்பாக யாவரையும் நோக்கிக்கொண்டிருக்கிறதென்று படங்காட்டுவதுபோல சாத்தான் மனிதருடைய மனதுக்கு காட்டிவிடுகிறான். தேவனுடைய மட்டற்ற அன்பை உலகத்துக்கு வெளிப்படுத்தவும், இந்த பயங்கர அந்தகார நோக்கத்தை நீக்கவுமே, இயேசு மனிதருக்குள்ளே வந்து மனிதனாக வாசம் பண்ணினார். SC 4.1

தேவகுமாரன் பிதாவை பூலோகத்தாருக்கு வெளிப்படுத்தவேவானுலகினின்று வந்தார். “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை. பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” யோ.1: 18. “பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறாரோ, அவனுந்தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்” மத். 11: 27. “பிதாவை எங்களுக்குக் காண்பியும்” யோ. 14: 8 என்று சீஷர்களில் ஒருவன் கிறிஸ்துவை வேண்டிக்கொண்டபோது, அவர் “பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக்கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக்காண்பியும் என்று நீ எப்படிச்சொல்லுகிறாய்,” யோ 14: 9 என்றார். SC 5.1

தாம் பூமியிலே எழுந்தருளின காரணத்தை இயேசு விவரித்துக் காட்டினபோது, கர்த்தர் “தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களை குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,” (லூக். 4: 18) வந்தேன் என்றார். இதுவே அவருடைய சிறந்த ஊழியம். அவர் நன்மை செய்கிறவராகவும், சாத்தானால் நொறுங்குண்டவர்களைச் சொஸ்தமாக்குகிறவராகவும் எங்குஞ் சுற்றித் திரிந்தார். அவர் நுழைந்த வீடுகளிலெல்லாம் பிணியால் வருந்திக்கொண்டிருந்த வியாதியஸ்தரைச் சுகப்படுத்தினபடியால் கிராமங்களிலுள்ள வீடுகளில் நோய் என்கிற பேர் கிடையாது. அவர் நடப்பித்த பரிசுத்த கிரியைகள் அவர் பெற்றிருந்த திவ்விய அபிஷேகத்துக்குப் போந்த அத்தாட்சிகளாயின. அவருடைய ஜீவியகாலத்தில் செய்த ஒவ் வொரு செய்கையிலும் அன்பு, இரக்கம், தயவு, பரிதாபமுதலிய நற்குணங்கள் வெளியாயின. தேவனுடைய பிள்ளைகளாகிய மனிதர்பேரிலுள்ள பட்சத்தினாலும் அநுதாபத்தினாலும் அவருடைய உள்ளம் உருகினது. மனிதருக்கு அவசியமானவைகளை அருளுவதற்காகவே மனுஷீக சுபாவத்தைத் தரித்துக்கொண்டார். வறுமையும் சிறுமையும் மிகுந்தவர்களுங்கூட அவரைக் கிட்டிச் சேர அஞ்சினதில்லை. சிறு பிள்ளைகளையும் அவர் கவர்ந்துகொண்டார். அவர்கள் அவருடைய பட்சம் மிகுந்த மடியிலேறி யுட்கார்ந்துகொண்டு, அன்பு நிறைந்த அவரது காருண்ணிய முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். SC 6.1

இயேசு சத்திய வார்த்தைகளில் ஒற்றையாகிலும் மனிதருக்கு மறைத்து வைக்காமல், எப்போதும் அன்போடே மொழிந்தார். அவர் ஜனங்களோடு பேசிப் பழகினபோது மிகுந்த சாமர்த்தியமும், உன்னத ஞானமும், ஒப்பற்ற பக்ஷமும் நிறைந்த சிந்தனையுமுடையவராயிருந்தார். அவர் ஒருபோதும் ஒருவரிடத்திலும் மூர்க்கமாய் இருந்தில்லை; அவசரமில்லாமல் கடூரமான வார்த்தைகளை ஒருக்காலும் பேசினதில்லை; அனாவசியமாய் ஒருவரையும் மனமடிவாக்கினதில்லை. மனுஷ பலவீனங்களைக்கண்டு குற்றஞ்சாட்டினதில்லை. எப்போதும் அன்பு நிறைந்தவராய்ச் சத்தியத்தையே பேசினார். மாய்மாலத்தையும், அவநம்பிக்கையும் அக்கிரமத்தையும் கண்டித்து வந்தார். மனவருத்தமுள்ள கண்டனங்களைச் சொல்லோடே சொல்லுவார். வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிற தன்மை ஏற்றுக்கொள்ளாததும் தாம் நேசித்த பட்டணமுமாகிய எருசலேமைப் பார்த்துக் கண்ணீர் சொரிந்தார். மீட்பராகிய அவரையோ, அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தார்கள். அவரோ, இரக்கமும் உருக்கமும் தயவுமுள்ளவராய் அவர்களை மதித்து வந்தார். அவருடைய ஜீவியம் முழுவதும் சுயவெறுப்பும், மற்றவர்களுக்காக அக்கரை யெடுக்கிறதாகவுமிருந்தது. அவருடைய பார்வையில் ஒவ்வொரு ஆத்துமாவும் விலையேறப்பெற்றதாகவேயிருந்தது. தமது உன்னத திவ்ய மகத்துவத்தினுலும், மேன்மையினுலும் நிறைந்தவராயினும், தேவனுடைய குடும்பத்தாரான மனிதரினிமித்தம் வணக்கமான நட்த்தையை அணிந்துகொண்டார். மனுக்குலத்தார் யாவரும் வழுவிப்போன ஆத்து மாவையுடையவர்களா யிருக்கிறார்களென்றறிந்து, அவர்களை இரட்சிக்கவே தீர்மானம்பண்ணி, அவர்களிருக்குமிடத்திற்குத் தேடிவந்தார். SC 7.1

இவ்வருமையான குணாதிசயங்களே கிறிஸ்துவின் ஜீவியத்தில் ஜொலித்தன. இவைகள் பிதாவாகிய தேவனுடைய லட்சணங்களேயொழிய வேறல்ல. பிதாவின் பரிசுத்த உள்ளத்திலிருந்து சுரந்து ஓடும் தெய்வீக அநுதாபமுள்ள ஊற்றுகள் கிறிஸ்துவில் வெளிப்பட்டு மனிதராகிய பிள்ளைகளுக்குப் பாய்கிறது. இரக்கமும், உருக்கமும், அநுதாபமும், பரிதாபமும், தயவும் நிறைந்த இரக்ஷண்ய நாதராகிய இயேசு “தேவனே மாம்சத்தில் வெளிப்பட்டார்.” 1 தீமோ. 3 : 16. SC 9.1

மனுக்குலத்தராகிய நன்மை ஈடேற்றுவதற்காகவே இயேசு இப்புவியில் உயிரோடிருந்து பாடனுபவித்து மரணமடைந்தார். நாம் நித்திய சந்தோஷத்தில் பங்காளிகளாவதற்காக அவர் துக்கம் நிறைந்த மனிதனானார். கிருபையும் சத்தியமும் நிறைந்த தமது அருமைக்குமாரனை தேவன் சொல்லுதற்கரிய மகிமை நிறைந்துள்ள ஜோதி லோகத்திலிருந்து பாவத்தினால் கறைப்பட்டுக் கெட்டுப்போயிருக்கிறதும், சாபம், மரணம் முதலிய அனர்த்தங்களின் நிழலினுல் அந்தகாரமானதுமான பாழுலகத்திற்கு வரும்படி இடங்கொடுத்தார். தமது அன்பு நிறைந்த பாக்கிய மடியையும், பரிசுத்த தூதருடைய கனத்தையும் விட்டு விட்டு, வெட்கம், நிந்தை, இழிவு, பகை, பாடு, மரணம் முதலியனவைகளை அடையும்படி அவருக்கு அநுமதியருளினார். “நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” ஏசா. 53 : 5. வனாந்தரத்திலேயும் கெத்செமனேயிலேயும், சிலுவை மரத்திலேயும், அவரை நோக்கிப்பார்ப்போமாக. பாவக்கறையில்லாத தேவகுமாரன் பாவபாரத்தைத் தாமே சுமந்து தீர்த்தார். தேவனோடு கூட ஒன்றாயிருந்த அவர், பாவத்தினால் தேவனுக்கும் மனிதனுக்குமுண்டான பயங்கர பிரிவினையத் தமதுள்ளத்திலே உணர்ந்தவராய் “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கை விட்டீர்” மத். 27 : 46 என்று வேதனையோடே மொழிந்தார். பாவபாரமும் அதின் அகோரத்தின் உணர்வும், அதினால் தேவனிடத்திலிருந்து பிரிந்த பிரிவினையும் அருள் நாதருடைய இரத்தாசயம் உடைவதற்குக் காரணமாயிருந்தன. பிதாவாகிய தேவனுடைய உள்ளத்திலே, மனிதர் பேரில் வைக்கும் ஒர் அன்பையாவது அவனை இரட்சிப்பதற்கு வேண்டிய ஒரு விருப்பத்தையாவது உண்டாக்கும்படி இரக்ஷணிய நாதர் இப்பெரிய பலியைச் செலுத்தினதில்லை. வாஸ்தவத்தில் இல்லை. “தேவன் தம்முடைய ஒரே பேறன குமாரனைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புக்கூர்ந்தார்” யோ. 3 : 16. ஓர் பெரிய பாவ நிவர்த்தியை உண்டுபண்ணினதினால் பிதாவானவர் நம்மிடத்தில் அன்பு கூருகிறார் என்றல்ல, நம்மிடத்தில் அவர் அன்புகூர்ந்த்தினாலேயே ஒரு பாவநிவாரணத்தையுண்டாக்கினார் என்று விசுவாசிக்கவேண்டும். பிதாவானவர் தம்முடைய மட்டற்ற அன்பை விழுந்துபோன உலகத்தாரிடத்தில் பாராட்டுவதற்காக தமது ஒரே பேறன குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை மத்தியஸ்தராக்கியிருக்கிறர். “தேவன் கிறிஸ்துவுக்குள் அவர்களை தமக்கு ஒப்புரவாக்கியிருக்கிறார்” 2 கொரி. 5 : 19. அவரும் தமது குமாரனோடு பாடனுபவிthத்தார். அளவற்ற அன்பு மிகுந்த தேவன், கெத்சமனேயின் மனவேதனை இரத்த வேர்வையின் மூலமாயும், சிலுவைப் பாடுகளின் மூலமாயும், கல்வாரியின் அருமையான மாணத்தின் மூலமாயும், நம்முடைய மீட்புக்காக ஒரு பெரிய கிரயத்தைச் செலுத்தியிருக்கிறர். SC 9.2

“நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்” யோ. 10 : 17 என்று இயேசு திரு வாய்மலர்நிதருளினார். அதாவது, “நான் உங்களை மீட்கும்படி என் ஜீவனைக்கொடுத்ததற்காக், என் பிதா என்னில் அதிகமாய் அன்பு கூருகிறதுபோல உங்களுக்குப் பிணையாளியாய், உங்கள் கடன்களையும், மீறுதல்களையும் என்பேரில் போட்டுக்கொண்டு, நானே சுமந்து தீர்த்தமையால், என் பிதாவுக்கு மகா அருமையாக விருக்கிறேன். நான் செலுத்திய என் பலியினாலே தேவ நீதிக்குத் திருப்தியாயிற்று. ஆயினும் இயேசுவில் விசுவாசம் வைக்கிறவனும் அவருக்கும் நீதி செய்கிறவனாயிருக்கிறான்” என்பதே. SC 12.1

தேவகுமாரனைத்தவிர, வேறெவரும் நம்முடைய மீட்பை நிறைவேற்ற இயலாது. ஏனெனில் பிதாவின் மடியிலிருந்தே அவரை அறிவிக்கக்கூடும். தேவ அன்பின் ஆழத்தையும் உயரத்தையும் அறிந்தவர் மாத்திரம் அதை வெளிப்படுத்த முடியும். தவறிப்போன மனிதனுக்காக கிறிஸ்து செலுத்தின மேலான பலியைத்தவிர வேறெதுவும் தேவன் மனிதர்மீது வைத்திருக்கும் அன்பை விவரிக்க முடியாது. SC 12.2

“தேவன், தம்முடைய ஒரே பேறன குமாரனைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” யோ. 3 : 16. மனிதரோடு வாசஞ்செய்வதற்காக மாத்திரமல்ல. அவர்களுடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கவும்; அவர்களுக்குப் பலியாய் மரிக்கவுமே அவரை அனுப்பினார். சோரம்போன ஜாதி யாருக்கே அவரைத்தந்தருளினார். கிறிஸ்துவும் மனிதருடைய குறைகளை நிவர்த்திசெய்து, தாம் அவர்களுக்கு உடந்தையாய் இருக்கிறதை தாமே விளங்கச்செய்தார். தேவனாகிய பிதாவோடு ஒன்றாயிருந்த அவர் ஒருபோதும் அறுந்துபோகாத கட்டுகளினால் மனிதாஜாதியாரோடு தம்மைப் பிணைத்துக்கொண்டார். இயேசு “அவர்களைச் சகோதரரென்று சொல்ல வெட்கப்படவில்லை” எபி. 2 : 11. SC 13.1

கிறிஸ்து நம்முடைய பலியாகவும், நமக்காக பரிந்துபெசுகிற வக்கீலாகவும், நம்முடைய சகோதரனாகவும், மனித சாயலைத் தரித்துக்கொண்டவராய் பிதாவின் சிம்மாசனத்திற்கு முன்னே நித்தியகாலமாய், மனிதகுமாரனாகவும் தாம் மீட்டுக்கொண்ட ஜாதியாரில் ஒருவராகவும் வீற்றிருக்கிறர். கேடும், ஈனமுமான பாவத்திலிருந்து மனுக்குலத்தார் உயர்த் தப்படுவதற்க்காகவும், தேவ அன்பை அவர்கள் பிரதிபிம்ப்பதற்காகவும், பரிசுத்த நித்திய சந்தோஷத்தில் பங்காளிகளாவதற்காகவுமே இவைகளையெல்லாம் செய்து முடித்திருக்கிறர். அப்போஸ்தலனாகிய யோவான் பரிசுத்தாவியால் ஏவப்பட்டு, அழிந்துபோகிற ஜாதியாரிடத்தில் பிதாவானவர் வைத்திருக்கிற அன்பின் உயரத்தையும் ஆழத்தையும் அகலத்தையும் பார்த்தபோது அவர் உள்ளத்தில் வணக்கமும் பக்தி விநயமும் உண்டானது. இந்த அன்பின் மேன்மையையும், அருமை பெருமையையும், இரக்க உருக்கத்தையும், விஸ்தரிப்பதற்குத் தகுந்த வார்த்தைகள் கிடையாமல், பூலோகத்தாரை அதை நோக்கிப்பார்க்கும்படி அழைக்கிறார். “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானார் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” 1. யோ. 3 : 1. இது எவ்வளவு மேலானகனத்தையும் மதிப்பையும் மனி தன்பேரில் வைத்திருக்கிறதென்று பாருங்கள். மனுப்புத்திரர் தங்கள் மீறுதல்களினாலே சாத்தானுக்கடிமைகளாகிறார்கள். ஆனாலும் ஆதாமின் புத்திரர் கிறிஸ்துவின் பாவநிவாரண பலியின்பேரில் விசுவாசம் வைப்பதினாலே தேவ புத்திரராகலாம். கிறிஸ்துவானவர் மனித தன்மையைத் தரித்துக்கொண்டதால், மனுஷீகத்தை மேன்மைப்படுத்தினார். விழுந்துபோன மனிதர் கிறிஸ்துவோடுகூட இணைக்கப்படும்போது, “தேவபுத்திரர்” என்றழைக்கப்படுகிறதற்குப்பாத்தியமுள்ளவர்களாகிறார்கள். SC 13.2

இந்த அன்புக்கு நிகரானது வேறொன்று மில்லையே. இதோ! பரம இராஜனுடைய பிள்ளைகள். இதோ! மேலான வாக்குத்தத்தம். இதோ! உள்ளான தியானத்திற்கேற்ற மேலான விஷயம். இதோ, தம்மை நேசியாத உலகத்தாருக்கு, தேவாதிதேவன் பாராட்டியிருக்கிற ஒப்புயர்வற்ற அன்பு. இப்பேரன்பை தியானிப்பது ஆத்துமாவைப் பரவசப்படுத்தும்; அது நம்முடைய மனதை தேவச்சித்தத்துக்கு இணங்கிப்போகும்படி செய்துவிடுகிறது. சிலுவையின் ஒளியிலே தெய்வ லட்சணத்தை எவ்வளவு அதிகமாய் விசாரித்தறியக் கூடியவர்களாயிருக்கிறோமோ, அவ்வளவு அதிகமாய், அவரது இரக்க உருக்கத்தையும், நீதியோடுகூடிய பாவமன்னிப்பையும் பகுத்தறியலாம். மேலும் அவ்வன்பு வழிதப்பிப்போன பிள்ளையின் பேரிலுள்ள தாயின் இரக்க உருக்கமான ஏக்கம் நிறைந்த அநுதாபத்தைப் பார்க்கி லும் மேலானதாயிருக்கிற தென்று எண்ணிறந்த அத்தாக்ஷிகளினால் அறிந்து கொள்ளலாம். SC 15.1

மனுஷகட்டு ஒவ்வொன்று மழியும்; சிநேகிதனுக்குசிநேகிதன் உண்மைத்தாழ்ச்சியுண்டு; தாய்மார் தங்கள் சிசுக்களை கைவிடுவார்கள்; வானமும் பூமியும் இறுதியில் ஒழிந்துபோம் எகோவாவின் அன்பிலோ மாறுதல் கிடையாது. SC 16.1