Go to full page →

WHAT TO DO WITH DOUBT SC 184

சந்தேகத்தை நீக்குவது எவ்வாறு. SC 184

பலரும், விசேஷமாகக் கிறிஸ்தவ ஜீவியத்தில் பக்குவமாகாதவர்களும் சிற்சில வேளைகளில், சந்தேகங்கள் கொண்டும் வருந்துகிறர்கள். வேதாகமத்தில், அவர்கள் அறிந்துகொள்ள முடியாததும், இதரருக்கு விளக்கிச் சொல்லக் கூடாததுமான பல விஷயங்கள் இருக்கின்றன. சாத்தான் இவற்றைக்கொண்டு வேதமானது தேவனால் அளிக்கப்பட்டதென்று நம்புகிற அவர்களுடைய விசுவாசத்தை அசைத்துவிடும்படி பிரயாசப் படுகிறான். “சரியான வழியை நான் அறிந்துகொள்வதெப்படி? நிச்சயமாகவே வேதமானது தேவனுடைய வார்த்தையானால் இந்தச் சந்தேகங்களையும் மனக்கலக்கங்களையும் நான் விட்டோய்வது எவ்வாறு?” என்று கேட்கிறார்கள். SC 184.1

தேவன் நம்முடைய விசுவாசத்துக்கு அஸ்திபாரமாகப் போந்த அத்தாட்சி நமக்களித்தாலொழிய அவரை நாம் விசுவாசிக்கும்படி அவர் கேட்கிறதில்லை. தேவன் இருக்கிறார், அவருக்குக் குணங்கள் உண்டு. அவருடைய வார்த்தை சத்தியமானதென்ற விஷயங்கள், நியாயமென்று நமது புத்தியில் படுகிற அத்தாட்சியால் உண்மையென உறுதிப்படுத்தப் படுகின்றன, இந்த அத்தாட்சி ஏராளமாக உண்டு ஆயினும் சந்தேகங்கொள்வதற்கேற்ற காரியங்களையும் தேவன் நீக்கிவிடுகிறதுமில்லை, நம்முடைய விசுவாசத்தை உத்தேசத்தின் மேலல்ல அத்தாட்சியின் மேலே நாம் ஸ்தாபிக்கவேண்டும். சந்தேகங்கொள்ள இஷ்டப்படுகிறவர்களுக்கு அதற்கேற்ற சமயங்கிடைக்கும்; சத்தியத்தை அறிய விரும்புகிறவர்களுக்கோ அவர்களுடைய விசுவாசத்தை நிலைப்படுத்துவதற்குப் போதுமான அத்தாட்சி கிடைக்கும். SC 184.2

அற்பப் புத்தியுள்ளவர்களாகிய நாம் மட்டற்றகடவுளுடைய குணத்தையாவது கிரியைகளையாது சரிவர கிரகித்துக் கொள்வது அசாத்தியம். கூர்மையான புத்தியுள்ளவர்களுக்கும் மிகத் தேர்ந்த் கல்வி மான்களுக்கும்கூட அந்தப் பரிசுத்தர் இரகசியமாக மறைந்தே இருப்பார். “தேவனுடைய அந்தாங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வ வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ? அது வானபரியந்தம் உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது; நீர் அறியக்கூடியது என்ன?” யோபு. 11:7, 8. SC 185.1

“ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு, என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது? அவ ருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!” ரோமர் 11:33 என்று அப்போஸ்தலனகிய பவுல் கூவிச் சொல்லுகிறார். “மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருந்தாலும், நீதியும் நிபாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்” சங். 97:2. நாம் கிறிஸ்துவினுடைய அளவற்ற அன்பும் கிருபையும் அவருடைய மட்டில்லாத வல்லமையோடு இணைக்கப்பட்டிருக்கிறதை எவ்வளவாக அறிந்து கொள்ளுகிறேமோ அவ்வளவாக அவர் நம்மோடு எவ்விதமாக நடந்துகொள்ளுகிறார் என்றும் அவர் அவ்வாறு நடந்து கொள்வதற்கு இருக்கிற நோக்கங்கள் என்ன என்றும் நாம் கிரகிக்கக்கூடும் அவருடைய நோக்கங்களில் எவ்வளவை அறிவது நமக்கு நலமோ அவ்வளவுதான் அறிந்துகொள்ள முடியும், இதற்குமிஞ்சி, சர்வபராக்கிரமமுள்ள அவருடைய கரத்தையும் அன்பு நிறைந்த அவருடைய இருதயத்தையும் நாம் பூரணமாக நம்பிப்பற்றிக்கொள்ளவேண்டும். SC 185.2

தேவனுடைய குணம் எப்படியோ அப்படியே அவர் எழுதின வேதமும், சொற்பப்புத்தியுள்ள மனுஷர் சரிவரக் கிரகித்துக் கொள்ளக்கூடாத இரகசியங்களுடையதாயிருக்கிறது. உலகத்துக்குப் பாவம் வந்த விதம், கிறிஸ்துவினுடைய அவதாரம், அவருடைய உயிர்த்தெழுதல், இன்னும் வேதத்தில் கண்டிருக்கிற காரியங்களும் மனுஷர் தமது புத்தியால் அறிந்து பிறருக்கு விளக்கிச் சொல்ல முடியாத அளவு ஆழ்ந்த இரகசியங்களாயிருக்கின்றன, ஆனல் அவைகள் தெய்வத்தன்மை பொருந்தியதென்பதற்கும் போந்த அத்தாட்சியை தேவன் வேதத்தில் நமக்கு அளித்திருக்கிறார்; அவருடைய இரகசியங்களை விளங்கிக்கொள்ள நமக்குச் சக்தியில்லையானால் அவருடைய வார்த்தையைப் பொய்யென்று சொல்வதற்கு நமக்கு என்ன நியாயமுண்டு? இயற்கை உலகத்திலுங்கூட நாம் அறிந்துகொள்ள இயலாத இரகசியங்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கின்றன. இயற்கைப் பொருட்களுக்குள்ளே ஒரு பிராணி மிகவும் அற்பமாயிருந்தாலும், சாஸ்திரிகளில் பெரிய ஞானிக்குங்கூட அதை விளக்கிச் சொல்வது கடினமாயிருக்கிறது. நமது கண்களுக்குப் புலப்படாத அதிசயங்கள் நம்மைச் சுற்றிலும் நிறைந்திருக்கின்றன. ஆவிக்குறிய உலகத்திலும் அவ்வாறே நாம் கிரகிக்கக்கூடாத அதிசயங்கள் உண்டு என்றால் அது நமக்குப்புதுமையான காரியமாகுமோ? நமது புத்தியானது பலமற்றதும் விசாலமில்லாததுமாக இருக்கிறபடியால் அவற்றை விளங்கிக் கொள்வது நமக்குக் கஷ்டமாகிறது. SC 186.1

வேதாகமத்தில் “அறிகிறதற்கு அரிதானதும், கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் தங்களுக்குக் கேடு வரத்தக்கதாகப் புரட்டுகிறதுமான காரியங்கள்” 2 பேது, 3:16. இருக்கின்றன என்று அப்போஸ்தலனாகிய பேதுரு சொல்லுகிறார். நாஸ்திகர் இந்தக் காரியங்களை எடுத்து, வேதத்தைப் புர ட்டும்படி முயற்சிக்கிறார்கள். இவைகள் வேதத்துக்கு விரோதமாக அல்ல, வேதம் தேவனுடைய ஏவுதலினல் ஆனது என்பதற்குத் தகுந்த அத்தாட்சியாகின்றன. நாம் எளிதாக அறிந்துகொள்ளக்கூடிய விஷயங்கள் மாத்திரம் தேவனைப்பற்றி அதிலே வரையப்பட்டிருந்தால், அல்லது நமது அற்பப் புத்தியால் அவருடைய பெருமையையும் மகத்துவத்தையும் கிரகித்துக்கொள்ளக்கூடியதானால், வேதமானது தேவவல்லமையால் ஆனது என்ற தவறில்லாத அத்தாட்சி அதற்க்குப் பொருந்தாது. வேதத்தில் நாம் காண்கிற விஷயங்களின் சிறப்பும் புதைபொருளுமே அது தேவனுடைய வார்த்தையென்று நாம் விசுவாசிக்கும்படி நம்மை ஏவவேண்டியவைகள். SC 187.1

வேதமானது சத்தியங்கள் நமக்குத் திறந்துகாட்டுகிறது. இந்தச் சத்தியங்கள் வெகு எளிதானதும், மனுஷ இருதயத்தின் அவசரம் ஆசைகளுக்கேற்றதுமான தாயிருக்கின்றபடியால் மிகத்தேர்ந்த கல்விமான்களுடைய உள்ளத்தைக் கவர்ந்துகொள்ளுகிறதுடன் தாழ்மையுள்ளவர்களும் கல்லாதவர்களும் இரட்சிப்பின் வழியை அறிந்துகொள்ளத்தக்கதாக அவர்களுக்குப் பெலனளிக்கிறது. ஆயினும் எளிதாகச் சொல்லப்பட்டிருக்கிற இந்தச் சத்தியங்கள், உன்னதமானதும் எங்கும் செல்லக்கூடியதும் மனுஷருடைய புத்திக்கு எட்டாததுமான விஷயங்களைப்பற்றியுள்ளவைகளாதலால், தேவன் அவற்றை விளம்பியிருக்கிறார் என்ற ஒரே காரணத்தால் மாத்திரம் நாம் அவற்றை அங்கிகரித்துக்கொள்ளக்கூடியது. மீட்பின் மார்க்கம் நமக்கு முன்னாலே விரிக்கப்படுகிறது, ஆகையால் ஒவ்வொரு மனுஷனும் தேவன் குறித்த வழியிலே இரட்சிப்படைத்தக்கதாக, தேவனையடைவதற்குப் பாவ மனஸ்தாபப்பட்டு கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பற்குத் தான் என்னென்ன வழிவகைகள் செய்யவேண்டுமென்று கண்டுகொள்ளவான்; ஆயினும் எளிதாக விளங்க்க்கூடிய இந்தச் சத்தியங்களுக்குப் பின்னே, அவருடைய மகிமையை மறைகின்ற திரைபோன்ற இரகசியங்கள் இருக்கின்றன. இந்த இரகசியங்களை ஆராயும்படி எத்தனிக்கிறவனுடைய மதிமை அவைகள் மயக்கி, பயபக்தியோடும் விசுவாசத்தோடும் சத்தியத்தை உண்மையாகத் தேடுகிறவனை ஏவுகிற தூண்டுகோலாகவுமிருக்கின்றன, ஒருவன் எவ்வளவுக்கு அதிகமாக வேதத்தை ஆராய்கிறானோ அவ்வளவுக்கதிகமாக அது ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையென்று கண்டுகொள்ளுகிறான். தேவன் வெளிப்படுத்தியிருக்கிற அவருடைய வார்த்தையின் மகத்துவத்துக்கு முன்னே மனுஷனுடைய புத்தியானது தலைவணங்கித்தாழுகிறது. SC 188.1

வேதாகமத்திலுள்ள சிறந்த சத்தியங்களைச் சரிவர கிரகித்துக்கொள்ள நமக்குச் சக்தியில்லையென்று ஒத்துக்கொள்வது என்ன ஆகுமென்றால் நித்தியத்தைக் கிரகிப்பதற்கு அநித்தியமானது போதாது என்றும் சொற்ப அறிவுள்ள மனுஷன் சர்வஞானமுள்ளவருடைய நோக்கங்களை அறிந்துகொள்ளமாட்டான் என்றும் ஒப்புக்கொள்வதாகும். SC 189.1

நாஸ்திகனும் அவிசுவாசியும் தேவவார்த்தையின் இரகசியங்கள் ஆராய அசக்தராயிருக்கிறபடியால், அந்த வார்த்தையைத் தள்ளுகிறார்கள்; வேதத்தை நம்புகிறதாக நடித்தும் பேசுகிற பலர் இந்த விஷயத்தில் தவறுகிறார்கள். “சகோதரரே தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்” எபி.3:12 என்று அப்போஸ்தலன் சொல்லுகிறார். வேதத்திலுள்ள போதசங்களைக் கவலையாய்ப்படித்து, நமக்கு வெளிப்படுத்தப் பட்டிருக்கும் மட்டுமுள்ள “தேவனுடைய ஆழங்களை” 1 கொரி. 2:10 ஆராய்வது நமது கடமை. “மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்” உபா. 29:29. மனதுக்குரிய ஆராயும் சக்திகளைத் திருப்புவதேசாத்தானுடைய வேலை. வேத சத்தியத்தைச் சிந்தனைசெய்வதோடு கொஞ்சம் அகங்காரம் கலந்துவிடுவதால், மனுஷர் வேதத்தின் ஒவ்வொரு பாகத்தையும் திருப்திகரமாக விளக்கிச் சொல்லமுடியாமற் போனால் தாங்கள் தோல்வியடைந்ததாக மனச்சஞ்சலப்படுகிறார்கள். ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட வார்த்தைகளை விளங்கிக்கொள்ளத் தங்களு க்கு முடியாது என்று ஒத்துக்கொள்வது போலமானக் கேடானது அவர்களுக்கு வேறேன்று மில்லை. சத்தியத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துவது சரியென்று தேவன் காணும்வரைக்கும் பொறுமைபாய்க் காத்திருக்க அவர்களுக்குப் பிரியமில்லை. வேதத்தை அறிந்துகொள்வதற்குத் தங்கள் சொந்தஞானம் போதுமென்று நினைத்துக்கொண்டு, நினைத்தபிரகாரம் அறிந்துகொள்ளத்தவறும்பொழுது வேதம் கடவுளால் கொடுக்கப்படவில்லையென்று வற்புறுத்திச் சாதிக்கிறர்கள். வேதத்திலிருந்து வந்த்தாக அநேகர் எண்ணுகிற பலவித அபிப்பிராயங்களும் கொள்கைகளும் ஆதாரமற்றவைகளும் ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட சத்தியங்களுக்கு முற்றிலும் விரோத மானவைகளுமாயிருக்கின்றன. இவைகள் அநேகருடைய மனதில் சந்தேகத்தையும் கலக்கத்தையும் எழுப்புகின்றன. இவ்வாறு சந்தேகமும் கலக்கமும் உண்டாகுவது தேவனுடைய வார்த்தையின் தப்பிதமல்ல, மனுஷன் அதைப் புரட்டுகிறதினால் விளையும் தப்பிதமேயாகும். SC 190.1

தேவனையும் அவருடைய கிரியைகளையும் முற்றிலும் அறிந்துகொள்ளும் சக்தி சிருஷ்டிக்கு உண்டென்று வைத்துக்கொள்ளுவோம். அப்படியானால், அந்த அறிவு அடைந்தவுடனே, சத்தியத்தைக்கண்டுபிடிக்கும்படி பின்னும் முயற்சிக்கமாட்டார்கள்; அறிவில் தேர்ச்சியிருக்கது; புத்தி வளர்ச்சிகளில் ஏற்றமும் காணப்படாது. தேவன் உன்னதமான வர் என்பதற்கு வழியில்லை; மனுஷனும் கல்வி தேர்ச்சியின் கரைகண்டுவிட்ட்தால் அதற்குமேல் தேர்ச்சியின்றி நின்றுவிடுவான். இவ்வாறில்லாததற்காகத் தேவனுக்குத் தோத்திரம் செய்வோமாக. தேவன்நித்தியர்; “அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது” கொலோ. 2:3 மனுஷர் நித்தியகாலமாகப்படித்து ஆராய்ந்தபோதிலும், அவருடைய ஞானம், நன்மை, வல்லமை என்பவற்றின் ஒரு சிறிய அணுவையாவது முற்றிலும் அறிந்துகொண்டார்களென் பதற்கு மார்க்கமில்லை. SC 191.1

தேவனுடைய வார்த்தையின் சத்தியங்கள் தமது ஜனங்களுக்கு இந்த வாழ்க்கை இருக்குங்காலத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகவேண்டும் மென்பது அவருடைய விருப்பம். இந்த அறிவை நாம் அடைவதற்கு ஒரே ஒரு வழியுண்டு. தேவனுடைய வார்த்தையாரால் அளிக்கப்பட்ட்தோ அந்த ஆவியானவருடைய உதவியினாலேயே அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளும் அறிவை அடையலாம். “அந்த ஆவியானவர் எல்லாவற்றையும் தேவனுடைய ஆழங்களையும் ஆராய்கிறபடியால்,” 1 கொரி. 2:10,11. இரட்சகர் தமது அடியாருக்கு அளித்த வாக்குத்தத்மும் இதுவே: “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்... அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்” யோவான். 16:13,14. SC 192.1

மனுஷன் தனது யூகித்தறியும் சக்தியை அப்பியாசப்படுத்தவேண்டுமென்று தேவன் விரும்புகிறர்; வேதத்தைப் படிக்கும் படிப்பானது மனதுக்கு உறுதியையும் உற்சாகத்தையும் அளிப்பதுபோல வேறெந்தக் கல்வியும் கொடுப்பதில்லை. ஆயினும் யூகத்தையே சிறப்பித்து விடாதபடி எச்சரிக்கையாயிருக்கவேண்டும். ஏனெனில் இந்த யூகமானது மனுஷ பெலவீனமும் தளர்ச்சியும் பொருந்தியது. வேதமானது நமது புத்தியை மந்தப்படுத்தி, அது காரணத்தால் தெளிவான சத்தியங்களைக்கூட நாமே விளங்கிக்கொள்ள அசக்தராயில்லாதிருக்க நாம் விரும்மினால் ஒரு சிறு பிள்ளையின் கபடமின்மையும் பற்றுமுள்ளவர்களாகவும், பரிசுத்த ஆவியின் உதவிக்காக மனறாடிக்கொண்டும் இருக்கவேண்டும். தேவனுக்கு வல்லமையும் ஞானமும் உண்டென்றும், நமக்கோ அவருடைய மகிமையை அறிந்துகொள்ளவும் பெலனில்லையென்றும் நமக்குண்டாகிற உணர்ச்சி நம்மைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; பரிசுத்த பயங்கரத்துடனே நாம் அவருடைய சந்நிதானத்துக்குச் செல்லுகிறதுபோலவே அவருடைய வார்த்தையையும் திறக்கவேண்டும். வேதத்தண்டை நாம் வரும்பொழுது நமது யூகமானது அதற்குமேலான அதிகாரியொருவர் உண் டென்று அறிக்கையிடவேண்டும், நமது புத்தியும் சித்தமும் இருக்கிறேன் என்ற பெரியவருக்கு முன்பு தலைவணங்கித் தாழவேண்டும். SC 193.1

தோற்றத்தின்படி கடினமாகவோ கருகலாகவோ உள்ள அனேக காரியங்கள் உண்டு; ஆயினும் அவற்றை அறிந்துகொள்ளவேண்டுமென்று தேடுகிறவர்களுக்குத் தேவன் அவைகளைத் தெளிவாகவும் சுலபமாகவும் செய்வார். ஆனால் பரிசுத்த ஆவியானவருடைய சகாயம் இல்லாவிட்டால் வேதத்தை நாம் புரட்டியோ அல்லது பிழையான கருத்துகொண்டோ தவறிவிட ஏதுவுள்ளவர்களாயிருப்போம். யாதொரு பயனில்லாத்தும் அனேக விஷயங்களில் நிச்சயமாகவே கெடுதி விளைவிப்பதுமான அதிக வேதவாசிப்பு உண்டு. வண்க்கமும் ஜெபமுமில்லாமல் நாம் தேவ்வார்த்தையைத் திறக்கும்பொழுதும், நமது சிந்தனைகளும் நேசபாசங்களும் தேவன்மேலே இராமலும், அவருடையச் சித்தத்துக்கு இணங்காமலுமிருக்கும்பொழுதும், நம்முடைய மனமானது சந்தேகத்தால் மந்தமாகி விடுகிறது; அவ்விதமாக வேதத்தைப் படிக்கும்பொழுது நாஸ்திகம் முற்றுகிறது. சத்துருவானவன் நமது எண்ணங்களைத் தன்வசப்படுத்திக்கொண்டு, தப்பறையான தாற்பரியங்களை நமக்கு நினைப்பூட்டுகிறன். மனுஷர் தங்கள் வார்த்தையிலும் நட்த்தையிலும் தேவனோடு ஒத்துவாழும்படி தேடாதிருப்பார்களானால், அவர்கள் எவ்வளவு கற்றிருப்பினும் சரி, வேதத்தை அறிந்துகொள்வதில் தவறும் இயல்புடையுவர்களாயிருக்கிறர்கள். அவர்கள் விவரித்துச்சொல்வதை நம்பி ஏற்றுக்கொள்வது யுக்தமல்ல. பேதங்களைக் காணவிரும்பி வேதம் வாசிப்பவர்களுக்கு ஆவிக்குரிய தேர்ச்சியில்லை யெனறாகும். அவர்களுக்குமாறான பார்வையிருக்கிறதால், உண்மையாகவே தெளிவாயும் சுலபமாயுமுள்ள காரியங்களிலே சந்தேகத்துக்கும் அவிசுவாசத்துக்கும் இடமான அனேக காரணங்கள் அவர்கள் கண்களுக்குத் தென்படும். SC 194.1

மனுஷர் எவ்வளவாக மறைத்தபோதிலும் அனேக விஷயங்களில் சந்தேகத்துக்கும் நாஸ்திகத்துக்கு முள்ள முக்கிய காரணம் பாவத்தின்மேலுள்ள பிரியமாம். தேவ்வார்த்தையிலடங்கியிருக்கிற போதகங்களும் கட்டுப்பாடுகளும் கருவமுள்ளதும் பாவத்தின்மேல் பிரிமுள்ளதுமான இருதயத்துக்கு ஏற்றதாயிருக்கமாட்டாது. அது கேட்கிறதுதின்படி கீழ்ப்படிய மனமற்றவர்கள அது தேவனாலான தென்பதைப்பற்றிச் சந்தேகங்கொள்ளச் சித்தமாயிருக்கிறர்கள். சத்தியத்தண்டைபோய்ச் சேரவேண்டுமானால், சத்தியத்தை அறிந்துகொள்ளவேண்டுமென்ற நேர்மையான ஆசையும், அதற்குக் கீழ்படிவதற்கேற்ற மனவிருப்பமும் நமக்கிருக்கவேண்டும் இந்தக்குணத்தோடு வேதத்தைப் படிக்க வருகிறவர்கள் எல்லாரும் அது தேவனுடைய வார்த்தைதான் என்பதற்கு ஏராளமான அத்தாட்சி கண்டுகொள்வார்கள்; அவர்கள் அதின் சத்தியங்களை அறிந்துகொள்வார்கள் அந்த அறிவால் அவர்கள் இரட்சிப்படைவதற்கேற்ற ஞானிகளாவார்கள். SC 195.1

“அவருடைய சித்தத்தின்படி செய்யமனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசத்தை அறிந்துகொள்ளுவான்” யோவான் 7:17, என்ற கிறிஸ்து சொல்லியிருக்கிறர். உனக்கு விளங்காத்தைப்பற்றிக் கேள்விகள் கேட்டு வீண்வாதம் செய்கிறதற்குப் பதிலாக, உனக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கிற அறிவின் பிரகாரம் நடப்பாயானால் இன்னும் அதிக அறிவடைவாய். உன்னுடைய புத்திக்குத் தெளிவாகத் தோன்றுகிற ஒவ்வொரு கடமையையும் கிறிஸ்துவின் கிருபையின் உதவியால் செய்வாயானால், நீ இப்பொழுது சந்தேகிக்கிறவைகளை அறிந்து சரி வரச்செய்யும்படி உனக்கு பலனளிக்கப்படும். SC 196.1

அறக்கற்றவர்களானாலும் சரி, ஒன்றும் படியாத வர்களானாலும் சரி எல்லாருக்கும் அனுபவ அத்தாட்சியென்ற ஒரு அத்தாட்சி வெகு தெளிவாக உண்டு. தேவன், அவருடைய வார்த்தை நிசமானதென்றும் அவருடைய வாக்குத்தத்தங்கள் உண்மையானதென்றும் நாமே நமது அனுபவத்தில் அறிந்துகொள்ளும்படியாக நம்மை அழைக்கிறர். கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்காள்” என்கிறர் சங் 34:8. மற்றவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளுவதற்குப் பதிலாக நாமே ருசித்தறியவேண்டும். “கேளுங்கள், அப்பொழுது பெற்றுக்கொள்வீர்கள்” யோவா. 16:24 என்று சொல்லுகிறார். அவர் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார். அவைகள் ஒருக்காலும் தவறிப்போனதில்லை, தவறிப்போவதுமில்லை. நாம் இவேசுவண்டை நெருங்கி அவருடைய அன்பின் பெருக்கிலே சகதோஷிக்கும் பொழுது, நம்முடைய அனுமானமும் அந்தகாரமும் அவருடைய பிரசன்னத்தின் சோதியால சூரியனைக் கண்ட பனிபோல மறைந்துபோகும். SC 196.2

தேவன் “இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கித் தமது அன்பின் குமாரனுடைய ராஜயத்திற்கு உட்படுத்தியிருக்கிறர்” நொலோ. 1:13. என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறர். மரணத்திலிருந்து ஜீவனுக்குக் கரையேறின ஒவ்வொருவனும் “தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோடக் கூடியவனாயிருக்கிறான்” யோவா 3:33. பின்னும் அவன், “எனக்கு உதவி தேவையாயிருந்தது, அதை இயேசுவிலே கணடுபிடித்தேன். எனக்கு வேண்டியதெல்லாம் கொடுத்தார், என்னுடைய ஆத்துமாவின் பசியை ஆற்றினார். வேதம் இப்பொழுது எனக்கு இயேசு கிறிஸ்துவினால் வெளிப்படுத்தப்பட்ட்தா யிருக்கிறது. இயேசுவை நான் ஏன் விசுவாசிக்கிறேனென்று கேட்கிறயோ? அவர் எனக்கு தெய்வ இரட்சகர். நான் ஏன் வேதத்தை நம்புகிறேன்? அது என் ஆத்துமாவோடு பேசுகிற தேவசத்தம் என்று கண்டுகொண்டேன்” என்று சாட்சி பதரக்கூடும். வேதம சத்தியமென்றும் கிறிஸ்து தேவகுமாரனென்றும் நம்மிலேயே அத்தாட்சி இருக்கலாம். தந்திரமாகப் புனைந்த கட்டுக் கதைகளை நாம் பின்பற்றுகிறதில்லை யென்றும் நமக்குத் தெரியும். SC 197.1

“நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்” 2 பேது 3: 18 என்று பேதுரு தமது சகோதரரைத் தூண்டுகிறார். தேவனுடைய ஜனங்கள் கிருபையில் வளரும்பொழுது, அவருடைய வார்த்தைகளைப்பற்றிய தெளிந்த அறிவு அவர்களுக்கு எப்பொழுதும் உண்டாகிக்கொண்டிருக்கும். அதின் பரிசுத்த சத்தியங்களில் புதுப்பிரகாசமும் அழகும் அவர்களுக்குத் தோன்றும். எல்லா யுகங்களிலும் கிறிஸ்து சபையின் சரித்திரத்தைப் பார்த்தால் இது உண்மைதானென்று காணலாம். “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய் பிரகாசிக்கிற சூரியபிரகாசம்போலிருக்கும்” நீதி. 4: 18 SC 198.1

விசுவாசத்தினாலே இனிவரும் காலத்தை நாம் எதிர் நோக்கலாம்; அதுடன் நமது மனுஷதத்துவங்கள் தேவ தத்துவங்களோடு சேர்ந்து, ஆத்துமாவின் ஒவ்வொரு விதமான சக்தியும் ஒளிக்கு ஊற்றானவரோடு பொருந்தி, இவ்விதமாக் நமது புத்தியானது வளருமென்று தேவன் கொடுத்த வாக்கையும் பற்றிப்பிடிக்கலாம். திருவுளச் செயல்களிலே நமக்கு விளங்காமல் நமது மதியை மயக்கினவைகளெல்லாம் விசிதமாகும்; விளங்கிக்கொள்வதற்கரிதான விஷயங் களை வெகு சுலபமாக விவரிக்கலாம்; நம்முடைய மட்டுப்பட்ட புத்தி எங்கெங்கே குழப்பம் இருக்கவும் தேவ நோக்கங்கள் தொடர்ச்சியற்றதாயிருக்கவும் பார்த்த்தோ, அங்கேயெல்லாம் பூரண அழகான ஒழுங்கு பொருந்தியிருப்பதைக் காணலாம்; மேலே சொன்னவைகளைப் பார்த்துக் களிகூரலாம். “இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய் பார்க்கிறோம். அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்து கொள்வேன்.” 1 கொரி. 13: 12. SC 198.2