இள வயதினர் தங்கள் தங்கள் மனதில் தோன்ருவதின்படி செய்வதற்கு இடம் அளிப்பதே இவ்வுலக வழக்கு. இளவயதில் மிகவும் துஷ்டத்தனமாக இருப்பவர்கள் சின்னாட்களுக்குப்புறமாக சரியாகி விடும். அதாவது பதினாறு அல்லது பதினெட்டு பிராயமாகும்போது தாங்களே சிந்திக்க ஆரம்பித்து தவறான பழக்கங்களைக் கைவிட்டு உபயோகமுள்ளவர் ஆகுவர் என்று கூறுவர். எத்தகைய தவறு இது! பல்லாண்டுகளாக இதயப் பூங்காவில் பகைஞன் ஒருவனைப் பயிர் செய்ய விட்டு, தவறான இலட்சியங்களாகிய பயிர் முதிர்ந்த பிறகும், அந்நிலத்தில் கடுமையாக உழைத்த போதிலும், அது பலன் தராது. CCh 504.1
சாத்தான் தந்திரமும் விடா முயற்சியுமுடைய அலுவல்காரனான அழிக்கும் சத்துரு ஆவான். இள வயதினருக்குக் கேடு விளையும்படி நாஸ்துதியாகவோ, பாவத்தின் மீது குறைந்த அளவில் அருவருப்பு உண்டாகுமாறு அஜாக்கிரதையாகவோ ஒரு வார்த்தை பேசப்படாலும், சாத்தான் அதைப் பயன் படுத்தி, தீமையாகிய பயிர் முளைத்து வேர் விட்டு, ஏராளமான அறுவடை தோன்றச் செய்கின்றான். பெற்றோர்களில் சிலர் பிள்ளைகளிடம் தப்பிதமான பழக்கங்கள் தோன்றுவதர்கு இடமளித்துள்ளனர். இப்பழக்கங்களினால் ஏற்பட்ட வடுக்களைப் பிள்ளைகளுடைய ஆயுசின் நாட்கள் அனைத்திலும் காணலாம். பெற்றோரின் பேரில் இந்தப் பாவம் சாரும். இந்தப் பிள்ளைகள் கிறிஸ்தவர்களென்று தங்களை அழைத்துக்கொள்ளலாம். எனினும் இருதயத்தில் விசேஷித்த அருட்கிரியை நடைபெற்று, திருந்திய சீர்திருத்தம் வாழ்வில் தோன்றினாலொழிய, அவர்களுடைய பழைய பழக்கங்கள் அவர்களுடைய அனுபவங்கள் அனைத்திலும் வெளிப்படும். எத்தகைய குணம் உருவாகுமாறு அவர்களுடைய பெற்றோர் அனுமதித்தனரோ, அத்தகைய குணத்தையே இவர்கள் வெளிப்படுத்துவார்கள். 1T 403. CCh 504.2
பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை ஆண்டும் அவர்களுடைய உணர்ச்சிகளைத் திருத்தி, அவர்களை அடக்கி வைப்பது அவசியமானது. அன்றி தெய்வம் தம்முடைய உக்கிர கோபத்தின் நாளிலே பிள்ளைகளை அழித்துப் போடுவார். பிள்ளைகளை அடக்கி வைக்காத பெற்றோர் குற்றமற்றாவர்களாக விடப்படமாட்டார்கள். குறிப்பாக தேவனுடைய ஊழியக்காரர் தங்களுடைய சொந்த குடும்பங்களை நன்றாகத் தலைமை தாங்கி நடத்தி, அவர்களை நல்ல முறைய்ல் வசமாக்கி வைத்திருக்க வேண்டும். அவர்கள் தங்கள் சொந்த வீட்டை ஆளுவதற்கு கூடாதே போனால், சபைக் காரியங்களில் தீர்ப்புக் கூறுவதற்கும், தீர்மானஞ் செய்வதற்கும் தக்கவர் ஆகார் என்று நான் கண்டேன். முதன் முதலாக அவர்கள் தங்கள் வீட்டை ஒழுங்கு படுத்த வேண்டும். அப்பொழுது அவர்களுடைய நிதான புத்திக்கும் செல்வாக்கிற்கும் சபையின் மதிப்பு உரியதாகும். 1T 119. CCh 505.1
இராப் பொழுதைப் பிள்ளைகள் வீட்டில் செலவிடாதே போனால், அவர்கள் இரவில் செய்த யாவற்றையும் குறித்து அவர்களிடம் கணக்குக் கேட்க வேண்டும். யார் யாருடனே தங்கள் பிள்ளைகள் சகவாசம் செய்கிறார்களென்றும், மாலை நேரத்தை எந்தெந்த வீடுகளில் செலவிகிறார்களென்றும் பெற்றோர் அறிந்திருக்க வேண்டும். 4T 651. CCh 505.2
மனித தத்துவமானது கடவுள் அறிந்திருப்பதைப் பார்க்கிலும் அதிகமான தொன்றையும் கண்டுபிடித்ததோ, பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதற்கு அவர் அளித்ததைக் காட்டிலும் அதிக ஞானமுள்ள திட்டத்தை கடைப்பிடித்ததோ கிடை யாது. பிள்ளைகளின் சிருஷ்டிகரைப் பார்க்கிலும், பிள்ளைகளின் தேவைகள் அனைத்தையும் அறிந்துள்ளாது யார்? தம்முடைய சொந்த இரத்தத்தினால் அவர்களைக் கிரயத்திற்குக் கொண்டவரை விடவும் அவர்களுடைய நன்மையிலே அதிக அக்கரையை யார் காட்ட முடியும்? தேவ வசனத்தை ஜாக்கிரதையுடனே கற்று, உண்மையுடனே அதர்கு கீழ்ப்படிந்தால், பொல்லாத குழந்தைகளின் மாறுபாடான நடத்தையினிமித்தம் ஏற்படுகின்ற மன வேதனை குறையும். CCh 505.3
பெற்றோர் அங்கீகரித்து, கனம் பண்ணவேண்டிய பிள்ளைகளின் உரிமைகள் இருக்கின்றன. தாங்கள் பிரயோஜன முள்ளவர்களாகவும், உடன் மனிதர்களால் நேசிக்கவும், கனம் பண்ணவும் பெற்று, வாழ்ந்து, இனித் தோன்றும் பரிசுத்தமும் தூய்மையுமான வாழ்விற்கு ஏற்ற சன்மார்க்க தகுதியையும் கல்வியையும் ஒழுக்கப் பயிற்சியையும் பெறுவதற்குப் பிள்ளைகள் உரிமை உடையவர்கள். குழந்தைப் பிராயத்திலும் இள வயதிலும் பழகும் பழக்கங்களே தங்களுடைய தற்போதைய, பிற்கால வாழ்வின் கதியைப் பெரும்பாலும் தீர்மானிக்குமென்று இள வயதினருக்குப் போதனை செய்ய வேண்டும். AH 306. CCh 506.1
வேதாகமத்தைப் பய பக்தியுடனே வாசித்து, அதின் போதனைகளைப் பின்பற்றுவதாகக் கூறும் ஆண்களும் பெண்களும் அதின் கட்டளைகளை நிறைவேற்றத் தவறுகின்றனர். தங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதில் வெளிப்படுத்தப்பட்ட தேவ சித்தத்தைப் பார்க்கிலும் மாறுபாடான தங்கள் சுபாவத்தையே பின்பற்றுகின்றனர். இக் கடமையைச் செய்வதற்கு தவறியதால் ஆயிரக் கணக்கான ஆத்துமாக்களின் ஜீவன் நஷ்டமடைய ஏதுவாகின்றது. பிள்ளைகளின் நல்லொழுக்கப் பயிற்சிக்கு வேதாகமக் கட்டளைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பெற்றோர் இவற்றின்படியே செய்தால், இன்று செயல்புரியும், வீரராகத் தோன்றும் இளைஞரைப் பார்க்கிலும் வித்தியாசமான இளைஞர் குழாம் நமக்கு முன் பாகவிருக்கும். வேத வாசகர்களும், வேதாகமத்தைப் பின்பற்றுகிறோம் என்று தங்களை அழைத்துக் கொள்ளுவோருமான பெற்றோர் வேதாகமக் கட்டளைகளுக்கு நேர்மாறாகச் செயல் புரிகின்றனர். தங்கள் பிள்ளைகள் மீது வைத்த தவறான பாசத்தினாலேயே இந்தத் துக்கமும் வேதனையும் அவர்களுக்கு வந்தது. பிள்ளைகள் கெட்டார்கள் என்று சிறிதும் உணராத பெற்றோரின் துக்கக் குரலையும் மன வேதனையையும் நாம் கேட்கின்றோம். குழந்தைகளைச் சிறு பிராயத்திலிருந்தே செவ்வையான பழக்கங்களில் ஈடுபடுத்துவதே கடவுள் அவர்களிடம் ஒப்புவித்த பொறுப்ப். அடை ஒரு உத்தரவாதமாக அவர்கள் உணருவதில்லை. 4T 313. CCh 506.2
உலகப் பிரகாரமான எந்த ஆசீர்வாதத்திற்கும் மேலானதாகத் தங்கள் பெற்றோரின் அன்பையும் அங்கீகாரத்தையும் கிறிஸ்தவப் பிள்ளைகள் உணருவார்கள். அவர்கள் தங்கள் பெற்றோரை நேசித்துக் கனம் பண்ணுவார்கள். தங்கள் பெற்றோரை எவ்வாறு மகிழ்வடையச் செய்வதென்று அவர்கள் பிரதானமாகக் கற்பர். இந்தக் கலக குணமுடைய யுகத்திலே செவ்வகையான போதனையும் நல்லொழுக்கப் பயிற்சியும் அற்ற பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குகென்று செய்ய வேண்டிய கடமைகளைக் குறித்த உணர்வு சிறிதும் இல்லாதிருக்கின்றனர். பெற்றோர் பிள்ளைகளுக்கு எவ்வளவு அதிகமாக செய்தபோதிலும், அவ்வளவிற்கு நன்றியின்மையும் மரியாதைக் குறைவுமே பிள்ளைகளிடமிருந்து வெளிப்படுகின்றன. CCh 507.1
பெரும் அளவில் பிள்ளைகளின் எதிர்கால சந்தோஷத்தை உருவாக்கும் சக்தியைத் தங்கள் கையிலேயே பெற்றோர் வைத்திருக்கின்றனர். இந்தப் பிள்ளைகளின் குணத்தை உருவாக்கும் வேலை அவர்களையே சார்ந்திருக்கின்றது. குழந்தைப் பிராயமாக இருக்கும்பொழுது அளிக்கப்படும் போதனை வாழ் நாளெல்லாம் நிலைத்திருக்கும். முளைத்து, நன்மையான பலனையோ தீமையான பலனையோ தருவதான வித்தைப் பெற்றோர் பயிரிடுகின்றனர். தங்களுடைய பிள்ளைகள் நிர்ப்பந்தராகவோ அன்றி மன மகிழ்ச்சியுடனோ வாழுவதற்கு அவர்களைத் தகுதி பெறச் செய்வதற்குப் பெற்றோரால் ஆகும். 1T 392, 393. CCh 507.2