Go to full page →

போதகர் தன் போதனையை சாதிக்க வேண்டும் CCh 212

நீ உன் சம்பாஷணையில் எப்போதும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். நீ தேவனுடைய ஸ்தானத்திலிருந்து பாவிகள் அவரோடு ஒப்புரவாவதற்கு அவர்களோடே மன்றாட, பூமியின் மேல் நீ அவருடைய ஸ்தானாபதியாயிருக்கும்படி அவர் உன்னை அழைக்கவில்லையா? இது பக்திவினயமும், உன்னத்முமான ஓர் ஊழியம். நீ பீடத்தின் மீது பேசி முடியும்போது, அவ்வேலை அப்பொழுது தான் ஆரம்பித்திருக்கிறது. கூட்டத்தை விட்டு வெளியை வரும்போது நீ உன் உத்தரவாதத்திலிருந்து விடுதலையாகிறதில்லை. ஆனால், ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணும் ஊழியத்திற்க்காகச் செய்த உன் பிரதிஷ்டையை மென்மேலும் காத்துக்கொள்ள வேண்டும். நீ எல்லாராலும் வாசிக்கப்பட்டு, அறியப்பட்டு ஜீவனுள்ள நிருபமாக இருக்க வேண்டும். CCh 212.2

பாடின்றி இருக்க விரும்பாதே. உல்லாசம்பற்றி கிஞ்சித்தேனும் எண்ணக்கூடாது. ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதே எல்லாவற்றிலும் முக்கியமான விஷயம். இப்படிப் பட்ட வேலைக்கே கிறிஸ்துவின் சுவிசேஷ ஊழியன் அழைக்கப் பட்டிருக்கின்றான். அவன் பீடத்துக்கு வெளியே நற்கிரியைகளைக் காத்துக்கொண்டு, நல் நடக்கையினாலும், பக்திவினயமான சம்பாஷணையினாலும் தன் ஊழியத்தை அலங்கரிக்க வேண்டும். CCh 212.3

மற்றவர்களுக்கு போதிப்பதின்படி, நீ ஜீவிக்க வேண்டும். கிறிஸ்துவின் ஒவ்வொரு ஊழியன் மேல் சார்ந்திருக்கும் பாரமான பொறுப்பையும், வேலையின் பாரத்தையும், இதற்கு முன் நீ ஒருபோதும் செய்திராவண்ணம் உன் மேல் எடுத்துக் கொள்ள வேண்டும். தனித்துச் செய்யும் முயற்சியினால், பிரசங்க பீடத்தின் மேல் செய்த வேலையை ஸ்திரப்படுத்து. தேவனுக்குப் பயந்து, நீ யாரோடெல்லாம் சகவாசம் செய்கின்றாயோ, அவர்களுக்கு முக்கியமான சத்தியத்தை அனுபோக முறையில் எடுத்துக்காட்டி, அங்கு கூடியிருக்கிறவர்களின் மன நிலையை தெளிவாய் அறிந்து, நிகழ்கால சத்தியத்தைப் பற்றிய நியாயமான சம்பாஷணையில் ஈடுபடு. 2 T.705,706. CCh 213.1