Go to full page →

கைத்தொழில் பயிற்சி LST 161

கைத்தொழில் பயிற்சி தற்போது அடைந்திருக்கும் கவனத்தை விட இன்னும் அதிகக் கவனம் அடைய தகுதியுள்ள தாயிருக்கிறது. மேலான மனோ சன்மார்க்கப் பயிற்சி கொடுப்பதுடன் சரீரம் பெலப் படுவதற்கும் கைத்தொழில் பயிற்சியடைவதற்கும் கூடுமான மட்டும் மிக்க மேலான வசதிகளையும் உண்டாக்கிக் கொடுக்கும் பள்ளிக் கூடங்கள் ஸ்தாபிக்கப் படவேண்டும். விவசாயத்தைப் பற்றியும் மிக்கப் பிரயோஜனமான இன்னும் அனேக கைத்தொழில்களைப் பற்றியும், அத்துடன் குடும்ப நிர்வாக சாஸ்திரம், ஆரோக்கி யமுள்ள பாக சாஸ்திரம், தையல் வேலை, சுகமுள்ள உடைகள் உண்டாக்குதல், நோயாளிகளைப் பேணுவது முதலான தோழிகளைப் பற்றியும் போதனை கொடுக்கப்பட வேண்டும். தோட்டங்கள், தொழிற்சாலைகள், சிகிச்சை அறைகள் முதலானவைகளை உண்டாக்கிக் கொடுப்பதுடன் ஒவ்வொரு வேலையும் அந்தந்த வேலையில் தேர்ந்த ஆசிரியர் பார்வையில் இருக்க வேண்டும். LST 161.3