Go to full page →

நழுக்கின ஓர் கடமை LST 18

இக் கால பரியந்தம் நான் கூட்டத்தில் ஒரு போதும் ஜெபித்ததில்லை, ஆனால் ஜெபக் கூட்டத்தில், சில வார்த்தைகளை மாத்திரம் பயந்து பேசினதுண்டு. நமது சிறிய அன்னியோன்னியக் கூட்டங்களில் நான் கர்த்தரைத் தேட வேண்டுமென்று இப்பொழுது வற்புறுத்தப் பட்டேன். ஆனால் ஏங்கர் நான் தடுமாற்றமடைந்து என் கருத்துக்களைச் சரியாய் வெளியிடத் தவறிப் போவேனோ என்னும் பயத்தினால் இதை செய்யத் துநியாதிருந்தேன். அக்கடமை என் மனதில் வெகு பலமாய் உறுத்திக் கொண்டிருந்தது. ஆனது பற்றி நான் அவருடைய சித்தத்திற்குக் கீழ்படியாமல் அந்தரங்கத்தில் ஜெபிக்க முயன்ற பொது தேவனைப் பரியாசம் செய்வதாகக் காணப்பட்டது. நான் நம்பிக்கையற்றுப் போனேன்; மூன்று முழு வாரங்களாக யாதொரு ஒழி ரேகையும் என்னைச் சுற்றி மூடியிருந்த இருளை ஊடுருவிச் சென்றதில்லை. LST 18.2

கொடிய மன வேதனை அடைந்தேன். சில வேளைகளில் இரவெல்லாம் என் கண்களை மூடத் துணியாமல், இரட்டைச் சகோதரி அயர்ந்த நித்திரை போகுமட்டும் காத்திருந்து, பிறகு மெதுவாய் என் படுக்கையை விட்டெழுந்து சொல்லொண்ணா மன வேதனையுடன் கீழே தரையில் முழங்காலில் னின்று அமைதியாய் ஜெபித்தேன். நித்தியமாய் எரிந்து கொண்டிருக்கும் நரகத்தைப் பற்றிய திகில்கள் எப்பொழுதும் என் முன் இருந்தன. நான் அடிக்கடி சொல்ல முடியாத துயரத்துடன் எவ்வித நம்பிக்கையுமின்றி பெருமூச்செறிந்து நாடு நடுங்கி ஏறக்குறைய இரவெல்லாம் ஜெபத்தில் திர்த்து நின்றேன். LST 18.3

“கர்த்தாவே கிருபையாயிரும்” என்பதே என் விண்ணப்பம். அவ வேளை ஆயக்காரனைப் போல் என் கண்களை வானத்திற்கு எறேடுக்கத் துணியாமல் முகங் குப்புறத் தரையில் விழுந்து கிடந்தேன். நான் அதிகமாய் இளைத்துப் பெலம் குன்றிப் போனேன். என்றாலும் என் வருத்தத்தையும் திகிலையும் எவருக்கும் வெளியிடவில்லை. LST 18.4