Go to full page →

விளையாட்டு LST 163

விளையாட்டுக்கும் வினோத வேடிக்கைப் பொழுதுபோக்குக்கும் ஓர் வித்தியாசமுண்டு. விளையாட்டென்னும் பேருக்குப் பொருத்தமான விளையாட்டானது பெலப்படுத்தவும் கட்டவும் தக்க தன்மையுள்ளது. நமது சாதாரணத் தொல்லைகள் தொழில்களினின்று அது நம்மை வெளியேற்றி, மனதையும் சரீரத்தையும் இளைப்பாற்றி நமக்குப் புது உயிரேற்றி திரும்பவும் நாம் உற்சாகமாக அச் சீவிய வேலைக்குப் போகும்படிச் செய்கிறது. ஆனால் வினோத வேடிக்கையோ இன்பத்திற்கென்று மாத்திரம் தேடப்பட்டு அடிக்கடி அது மித மிஞ்சிப் போகும் படியாகிறது; பிரயோஜனமான வேலைக்கு வேண்டிய ஊக்கத்தை அது இழுத்துக்கொண்டு அவ்விதம் வாழ்வின் காரிய சித்திக்கு ஓர் இடையூறாக முடிகிறது. LST 163.3

அங்கமெல்லாம் அலுவலுக்கென்று அமைக்கப் பட்டிருக்கின்றது; சரீர சக்திகள் சுறுசுறுப்பான தேகாப்பியாசத்தினால் சுக பத்திரமாயிருந்தழொழிய மனோ சக்திகள் தங்கள் உன்னத தொழிலை வெகு காலம் செய்வதற்கியலாது. LST 163.4

சிறு பிள்ளைகள் வெகு நேரம் அறைக்குள் அடைபட்டிருக்கக் கூடாது; சரீரம் பெலப்படுவதற்கு ஸ்திரமான ஓர் அஸ்திபாரம் போடப்பட்டு மட்டும் அவர்கள் கருத்தூன்றிப் படிக்கும்படி கேட்கப் படலாகாது. ----- Ed. 207-8. LST 163.5