Go to full page →

நீ இயேசுவைக் கண்டடைந்தது எவ்விதம் என்று சொல் LST 168

சபை அங்கத்தினரே, உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கட்டும். இச்சையடக்க மின்மை, அஞ்ஞானம், இவ்வுலகத்தின் வினோத வேடிக்கைகள் முதலானவைகளுக்கு விநோதமாய்ச் சாட்சியிடுவதிலும் இக் காலத்திற்குரிய சத்தியத்தைக் கூறியறிவிப்பதிலும் தாழ்மையுள்ள ஜெபத்திலே உங்கள் சத்தங்கள் கேட்கப்படுவதாக. உங்கள் சக்தியும் கிரியையும், உங்கள் காலமுமாகிய இவைகள் எல்லாம் தேவன் தந்த ஈவுகள்; கிறிஸ்த்துவுக்கென்று ஆத்துமாக்களை ஆதாயப் படுத்துவதில் அவைகள் உபயோகிக்கப் பட வேண்டும். LST 168.2

உங்கள அயலகத்தினரைச் சந்தித்து, அவர்களுடைய ஆத்துமா இரட்சிப்பில் உங்களுக்குள் ஆசையைக் காண்பியுங்கள். ஆவிக்குரிய சக்திகளை எல்லாம் கிரியை செய்யும்படி எழுப்புங்க. எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று ன்று நீங்கள் சந்திக்கிறவர்களிடம் சொல்லுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர்களுடைய இருதயத்தின் கதவைத் திறந்து அவைகளை அவர்கள் மனதில் நிலை நிற்கச் செய்வார். LST 168.3

தங்கள் ஆவிக்குரிய திக்பிரமையினின்று புருஷரையும் ஸ்திரீகளையும் எழுப்பப் பிரயாசப்படுங்கள். நீங்கள் இயேசுவைக் கண்டடைந்தது எவ்விதம் என்றும் நீங்கள் அவருடைய ஊழியத்தில் ஓர் அனுபோகம் உண்டான காலமுதல் எவ்வளவாய் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கின்றீர்கள் என்றும் அவர்களுக்குச் சொல்லுங்கள். நீங்கள் அவருடைய பாதத்தண்டை உட்கார்ந்து அவருடைய வார்த்தையி னின்று அருமையான பாடங்களைக் கற்றுக் கொள்ளுகிறபோது நீங்கள் அடைகிற ஆசீர்வாத மின்னதென்று அவர்களுக்குச் சொல்லுங்கள். கிறிஸ்தவ ஜீவியத்திலிருக்கிற மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அவர்களுக்குச் சொல்லுங்கள். அனலுள்ள ஊக்கமான உங்கள் வார்த்தைகளை விலையேறப் பெற்ற அந்த முத்தை நீங்கள் கண்டடைந்து இருக்கிறீர்களென்று அவர்களுக்கு உணர்த்தக் கூடும். நீங்கள் உண்மையாகவே மேலான வழியைக் கண்டடைந்து இருக்கின்றீர்கள் என்று சந்தோஷமான தைரியமுள்ள உங்கள் வார்த்தைகள் காண்பிக்கட்டும். இது சிறந்த மிஷனரி வேலையாகும்; அப்படிச் செய்தால் சொப்பனத்திலிருந்து விழித்து எழும்புவது போல் அநேகர் விழித்தெழும்புவார்கள். LST 168.4

தங்களுடைய அனுதின வேலை ஜோலிகளில் இருக்கும்போது கூட தேவனுடைய ஜனங்கள் மற்றவர்களைக் கிறிஸ்துவண்டை வழி நடத்தக் கூடும். அவர்கள் இப்படிச் செய்கையில் இரட்சகர் தங்களருகில் இருக்கிறார் என்னும் அருமையான நிச்சயம் அவர்களுக்குண்டாகும். தங்கள் சொந்த அற்ப முயற்சிகளின் பேரில் சார்ந்திருக்கும்படி விடப்பட்டிருக்கிறதாக அவர்கள் நினைக்க வேண்டியதில்லை. அந்தக் காலத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஏழை ஆத்துமாக்களை தேற்றி ஸ்திரப்படுத்தத் தக்கதான வார்த்தைகளை கிறிஸ்து அவர்களுக்குத் தருவார். மீட்பரின் வாக்குத் தத்தம் நிறைவேருகிறதை அவர்கள் பார்க்கும்போது அவர்கள் சொந்த விசுவாசம் பெலப்படுத்தப்படும். அவர்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வதாமாய் இருக்கிறது மாத்திரமல்ல, கிறிஸ்த்துவுக்கென்று அவர்கள் செய்கிற வேலையினால் அவர்களுக்கே ஆசீர்வாதம் உண்டாகிறது. ----- 9T. 30-9. LST 169.1