Go to full page →

ஏழாம் பிரிவு—மீதியான சபையோரின் கடைசி வெற்றி LST 184

புனிதமான ஓர் பொறுப்பு LST 184

பூமியில் ஓர் வெளிச்சமாக நிற்கும்படி, தேவன் பூர்வ இஸ்ரவேலை அழைத்தது போல இக் காலத்தில் அவர் தமது பைசயை அழைத்திருக்கிறார். முதலாம், இரண்டாம், மூன்றாம் தூதர்களின் தூதுகளாகிய சத்தியத்தின் பலத்த கத்தியினால் அவர் அவர்களை சபைகளினின்றும் உலகத்தினின்றும் பிரித்து தம்மிடம் கொண்டு வந்திருக்கிறார். அவர் அவர்களைத் தமது வேதத்துக்கு உத்திரவாதிகளாக்கி இக்காலத்திற்குரிய தீர்க்கதரிசனத்தின் பெரிய சத்தியங்களை அவர்களிடம் ஒப்புவித்திருக்கிறார். பரிசுத்த வாக்கியங்கள் பூர்வ இஸ்ரவேலிடத்தில் ஒப்புவித்திருக்கிறார். பரிசுத்த வாக்கியங்கள் பூர்வ இஸ்ரவேலிடத்தில் கொடுக்கப்பட வேண்டிய ஓர் பரிசுத்த பொறுப்பாயிருக்கின்றன. LST 184.1

வெளிப்படுத்தல் 14-ல் சொல்லப்பட்டிருக்கிற அந்த மூன்று தூதர்களும் தேவனுடைய தூதுகளின் வெளிச்சத்தை ஏற்றுக் கொண்டு அவருடைய தூதர்களாக பூமியின் நீளம் அகலம் எங்கும் போய் எச்சரிப்பைக் கூறும்படிப் புறப்பட்டுப் போகிற ஜனங்களைக் குறிக்கின்றன. கிறிஸ்து தமது பின்னடியார்களை நோக்கி, “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” என்று கூறுகிறார். கல்வாரிச் சிலுவை இயேசுவை ஏற்றுக் கொள்ளுகிற ஒவ்வொரு ஆத்துமாவையும் பார்த்து, “ஆத்துமாவின் கிரயத்தைப் பாருங்கள். ‘நீங்கள் உலகமெங்கும் பொய், சர்வ சிருஷ்டிக்கும் சுவேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்று பேசுகிறது’. மாற். 16:15. ஒன்றும் இவ்வேலையைத் தடை செய்வதற்கு இடங் கொடுக்கக் கூடாது. அதுவே காலமெல்லாம் செய்ய வேண்டிய சர்வ முக்கிய வேலையாயிருக்கிறது; அது நித்தியத்தைப் போன்று வெகு தூரம் எட்டுகிறதாயிருக்கின்றது. --- 5 T 455-6. LST 184.2