Go to full page →

விசுவாசத்தைத் தவிர்க்கும் சாத்தானுடைய முயற்சிகள் LST 193

உலகத்தில் சீக்கிரம் பெரிய மாறுதல்கள் நடைபெற வேண்டும், ஒவ்வொருவருக்கும் தேவ விஷயங்களைப் பற்றி அனுபோகமான ஓர் அறிவு வேண்டும். தேவனுடைய ஜனங்களை அதைரியப்படுத்தி அவர்களுடைய விசுவாசத்தைத் தொலைத்துப் போடா வேண்டுமென்பதே சாத்தானுடைய வேலை. தேவன் சுமத்தின விசேஷித்த வேலையை பார்க்கிறவர்கள் அவ் வேலையை வைராக்கியமாய் செய்கிறவர்களுமான மனுஷர்களுடைய அந்தஸ்தையும், விசுவாசத்தையும் வழிகளையும் குறித்து அவன் எப்படியும் சந்தேகங்களை எழுப்பி கேள்விகள் கேட்க பிரயாசப்படுகிறான். அவன் பல தடவைகளில் தோற்கடிக்கப் பட்ட போதிலும், தாழ்மையுள்ளவர்கள் என்றும் தேவனுக்குப் பயப் படுகிறவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகிறவர்கள் மூலமாயும், நிகழ்கால சத்தியத்தில் பிரியமுள்ளவர்களாக அல்லது விசுவாசிகளாகக் காணப்படுகிறவர்கள் மூலமாயும் அவன் திரும்பவும் கிரியை செய்து அவர்களைத் தாக்குகிறான். சத்தியத்தைப் பிரஸ்தாபிக்கிறவர்கள் பயங்கரமான கொடிய விரோதங்களை பிரபலமான தங்கள் சத்துருக்களிடமிருந்து எதிர் பார்க்கிறான்; ஆனால் தேவ ஊழியர்கள் செய்யுங் காரியங்களைப் பற்றிக் கேள்வி கேட்டு குற்றங் கண்டு பிடிக்கத் தங்களுக்குச் சுயாதீனமுண்டென்று எண்ணுகிறவர்களால் வெளியிடப்படுகிற அந்தரங்க சந்தேககங்களை விட இது அவ்வளவு மோசகரமானதல்ல. இவர்கள் மனத்தாழ்மையுள்ள மனுஷர் போற் காணப்படலாம்; ஆனால் அவர்கள் தங்களைத் தாங்களே வஞ்சித்துக் கொண்டும் மற்றவர்களையும் வஞ்சிக்கிறார்கள். அவர்களுடைய இருதயங்களில் பகையும் கெட்ட எண்ணங்களும் குடிகொண்டிருக்கின்றன. தேவன் தமது வேலையைச் செய்யும்படி தெரிந்து கொண்டவர்கள் எவர்களோ அவர்களை நம்பும் ஜனங்களுடைய விசுவாசத்தை அவர்கள் தொலைத்துப் போடுகிறார்கள். அச் செய்கைக்காக அவர்களைக் கண்டித்தால் அவர்கள் தங்களை அவமானப்படுத்தினதாகச் சொல்லுகிறார்கள். தேவனுடைய வேலையைச் செய்கிறதாக அவர்கள் சொல்லுகிறார்கள், ஆனால், உண்மையில் அவர்கள் சத்துருவுக்கு உதவி புரிகிறவர்களாயிருக்கிறார்கள். LST 193.3