Go to full page →

மீட்பருக்காக் காத்திருத்தல் LST 196

முன் பாவத்தையும் அந்தகார வல்லமைகளையும் எதிர்த்துப் போராடினதை விட இனி அதிகமாய் எதிர்த்துப் போராட வேண்டும். நிகழ்கால சத்தியத்தை நம்புகிறவர்களிடத்தில் ஊக்கமும் திட்டமுமான கிரியைகளைக் காலம் கேட்கிறது. நமது மீட்பரின் வருகைக்குக் காத்திருப்பது நெடுங்காலமாகத் தோன்றினால், துன்பங்களினால் தாழ்வடைந்தது உழைப்பினால் மெலிந்து போரினின்று மதிப்பாய் நீங்கிக்கொள்ள நாம் ஆத்திரப்பட்டதால், நாம் புயல்களையும் விரோதங்களையும் எதிர்க்கவும், நமது பிதாவாகிய தேவனோடும் நமது மூத்த சகோதரராகிய கிறிஸ்துவோடும் நன்றாய்ப் பழகும் பொருட்டு கிறிஸ்தவ குணத்தைப் பூரணப் படுத்தவும், கிறிஸ்துவுக் கென்று அநேக ஆத்துமாக்களை ஆதாயஞ்செய்வதில் ஆண்டவருக்காக உழைக்கவும் பூமியில் விடப்பட்டிருக்கிறோம் என்பதை நினைத்துக் கொள்வோமாக. இந்த சிந்தையானது ஒவ்வொரு முறுமறுப்பையும் தடுப்பதாக. “ஞானவான்கள் ஆகாய மண்டலத்தின் ஒளியைப் போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என் றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் பிரகாசிப்பார்கள்.” - L. S. 254. LST 196.3