Go to full page →

அனுதாபமும் ஆலோசனையும் LST 22

என் துக்கங்களையும் தத்தளிப்புகளையும் இப்பொழுது நான் என் தாயாரிடம் சொன்னேன். என் தாயார் என் மேல் உருக்கமாய் அனுதாபப்பட்டு, நான் ஸ்டாக்மன் போதகரிடம் பொய் ஆலோசனை கேட்கும்படி என்னை தைரியப்படுத்தினார். ஆவர் அப்போது போர்ட்லாந்தில் அட்வெந்துக் கொள்கையைப் போதித்துக் கொண்டிருந்தார். அவர் கிறிஸ்துவின் ஓர் மெய்த் தொண்டராகையால் அவரைப் பற்றி எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையுண்டு. தேவன் பாவிகளுடைய அழிவில் பிரியப்படாமல், அவர்கள் அவரை நம்பி வரும்போது அவர்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்ளவே பிரியப்படுகிறார் என்று இந்த நல்ல மனுஷன் நெறி தவறும் பிள்ளைகளிடமிருக்கும் தேவ அன்பைக் குறித்து என்னிடம் பேசினார். கிறிஸ்துவின் பேரன்பைக் குறித்தும் மீட்பின் ஒழுங்கைக் குறித்தும் அவர் விசாரித்தார். பிறகு அவர் எனக்காக ஊக்கமாய் ஜெபித்தார், என்னுடைய தாழ்மையான விண்ணப்பங்கள் கேட்கப்படா விட்டாலும் தேவன் தம்முடைய பரிசுத்தவானின் ஜெபத்தை நிச்சயமாய்க் கேட்பாரென்று தோன்றினது, இஸ்ரவேலிலுள்ள இந்தப் போதகரின் ஞானமும் அன்புமுள்ள ஆலோசனையைக் கேட்டதும் என் மனதுக்கு மிகுந்த சமாதனமுண்டானதும் அன்றி, சந்தேகாமும் பயமுமான ஈன அடிமைத் தனமும் நீங்கிற்று. ஆறுதலும் தைரியமும் அடையப் பெற்று நான் அவரை விட்டுப் புறப்பட்டேன். LST 22.2