கிறிஸ்து தமது சபைக்கு பரிசுத்தாவியின் வரத்தை வாக்களித்தார். அவ் வாக்குத்தத்தம் ஆதி சீஷர்களுக்கு எவ்வளவு சொந்தமாயிருந்ததோநமக்கும் அவ்வளவு சொந்தமானதே. ஆனால் மற்றெந்த வாக்குத் தத்தத்தையும் போல அது நிபந்தனைகளின் பேரில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டவரின் வாக்குத்தத்தங்களை நம்புகிறவர்களும் அவைகளைத் தங்களுக்குச் சொந்தம் பாராட்டுகிறவர்களும் அநேகருண்டு; அவர்கள் கிறிஸ்துவையும் பரிசுத்த ஆவியையுங் குறித்துப் பேசுகிறார்கள்; என்றாலும் அவர்கள் ஒரு பயனையும் அடைகிறதில்லை; ஏனெனில் அவர்கள் தெய்வ விசாரிப்புக்காரரின் நடத்துதலுக்கும் ஆளுகைக்கும் தங்கள் ஆத்துமாக்களை ஒப்புக் கொடுக்கிறதில்லை. LST 208.3
நாம் பரிசுத்த ஆவியை உபயோகிக்க இயலாது; பரிசுத்த ஆவி நம்மை உபயோகிக்க வேண்டும். பரிசுத்த ஆவியின் மூலமாய் தேவன் “தமது தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும்” தமது ஜனங்களில் நடப்பிக்கிறார். ஆனால் அநேகர் நடத்தப்பட சம்மதிக்கிறதில்லை. அவர்கள் தங்களைத் தாங்களே நடத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் பரம ஈவை அடையாமற் போகிறதின் காரணம் இதுதான். எவர்கள் தேவனுடைய நடத்துதலுக் காகவும் அவருடைய கிருபைக்காகவும் அவருக்காகப் பணிவுடன் காத்திருக்கிறார்களோ அவர்களுக்கு மாத்திரம் ஆவி அருளப்படுகிறது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இவ்வாசீர்வாதம் விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் போது அது தன்னோடு மற்ற சகல ஆசீர்வாதங்களையும் கொண்டுவருகிறது. அது கிறிஸ்துவின் கிருபையின் ஐசுவரியங்களுக்குத் தக்கதாக அருளப்படுகிறதுமன்றிஅதைப் பெற்றுக் கொள்ளும்படிக்கான திறமைக்குத் தக்கபடி ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் கொடுக்க அவர் ஆயத்தமாயிருக்கிறார். LST 208.4
ஆவியை ஈவது கிறிஸ்துவின் ஜீவியத்தை ஈவதாம். இவ்விதம் தேவனால் போதிக்கப் பெற்றவர்கள் மாத்திரம், உள்ளத்தில் ஆவியின் கிரியை செய்தலை யுடையவர்களுக்கும் தங்கள் ஜீவியத்தில் கிறிஸ்துவின் ஜீவியத்தை வெளிப்படுத்துகிறவர்களுக்கும் மாத்திரம் இரட்சகருக்கு உண்மை பிரதிநிதிகளாக நிற்கக் கூடும். LST 209.1