ஆவியில் ஒழுக்கமுடைமை, உள்ளம், எண்ணம் இவற்றில் சுத்தமுமே அவசியம். சன்மார்க்க சுத்தம் சரியான சிந்தனையையும் சரியான செய்கையையும் பொறுத்திருக்கிறது. கெட்ட எண்ணங்கள் ஆன்மாவை அழித்துப் போடுகிறது, எண்ணங்களைச் சரியானபடி அடக்கி ஆளும் ஆட்சியோ ஆண்டவருக்கென்று அன்போடு உழைக்கும்படி மனத்தைப் பக்குவப்படுத்துகிறது. ஒவ்வொரு எண்ணமும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியும்படி சிறைப்படுத்தப் படவேண்டும். LST 218.2
சத்தியத்தைப் போதிக்கிறவர்கள் ஞானமுள்ள மனுஷராய் தங்கள் வார்த்தைகளிலும் கிரியைகளிலும் மிகவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். அவர்கள் தேவனுடைய மந்தைக்குக் காலத்திற்கு ஏற்ற ஆகாரத்தைக் கொடுக்கிற மனுஷர்களாயும், வாழ்வின் தாழ்ந்த திட்டங்களுக்கு அவர்கள் சற்றும் சம்மதியாதவர்களாயும், அவர்கள் அன்பினால் கிரியை செய்கிறதும் சகல மாம்ச எண்ணங்கள் ஆசைகளினின்றும் ஆத்துமாவைச் சுத்திகரிக்கிறதுமான விசுவாசத்தை உடையவர்களாயு மிருக்க வேண்டும். இத்தகைய ஊழியர்கள் உலக இன்பத்தில் கிடந்து உழல மாட்டார்கள்; அவர்கள் எந்த மனுஷருக்கும் அல்லது சாத்தானின் சோதனைகளுக்கும் அடிமையாகார்கள். அவர்கள் புருஷரைப் போல நடந்து கொள்வதுந் தவிர பலவான்களாயுமிருப்பார்கள். அவர்கள் சகல கெட்ட காரியங்களுக்கும் மேலாக எழும்பி ஆன்ம, சன்மார்க்க அசுத்தங்களுக்கெல்லாம் விலகி நீதியின் சூரியனுக்கு நேராக தங்கள் முகங்களைத் திருப்புவார்கள். LST 218.3
வேதாகம மார்க்க ஒழுங்குகளின்படி நடக்கிறவன் சன்மார்க்க வல்லமையில் பெலவீனமாய்க் காணப்படமாட்டான். மேன்மைப்படுத்தும் பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழ் விருப்பங்களும் எண்ணங்களும் சுத்தமும் பரிசுத்தமும் ஆகின்றன. கிறிஸ்து மார்க்கத்தைப் போல அவ்வளவு பலமாய் உள்ளங்களில் பற்றிக் கொள்ளக் கூடியதும், ஜீவியத்தின் மேல் அவ்வளவு வல்லமையாய்க் கிரியை செய்து குணத்திற்கு அவ்வளவு பெரிய உறுதியையும் பலத்தையும் கொடுக்கக்கூடியதும் வேறொன்றுமில்லை. அது தன்னை அடைந்துள் ளோனை மேலான நோக்கங்களினால் பரவசப்படுத்தி, ஒழுக்க முறையை அவனுக்குப் போதித்து அவனை எப்பொழுதும் பரத்திற்கு நேராக வழி நடத்துகிறது. LST 218.4
வாலிபன் எதினால் தன் பொல்லாத குணங்களை அடக்கி தன் குணத்தில் சிறந்ததையும் இன்பகரமானதையும் விருத்தி செய்வான்? “ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” என்கிற வார்த்தைகளுக்கு அவன் செவி கொடுக்கக்கடவன். எல்லா நோக்கங்களுக்கும் எண்ணங்களுக்கும் செய்கைகளுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியதோர் உண்மை இது. கெட்ட ஆசை இச்சைகள் சிலுவையில் அறையப்பட வேண்டும். அவைகளை நடப்பிக்கிறதற்காக அவைகள் கூக்குரலிடும், ஆனால் தேவன் உள்ளத்தில் உன்னதமும் பரிசுத்தமுமான நோக்கங்களையும் விருப்பங்களையும் நாட்டியிருக்கிறார். இவைகள் இழிவுறும்படிச் செய்யக்கூடாது. நாம் புத்திக்கும் மனசாட்சிக்கும் கீழ்ப்படிய மறுக்கும் போது தான் நாம் கீழே இழுத்துக் கொண்டு போகப்படுகிறோம். “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு” என்று பவுல் கூறுகிறார்.---G.W. 124-8. LST 219.1