Go to full page →

கெடு கடந்து போதல் LST 29

காத்திருந்த தேவனுடைய ஜனங்களின் சந்தோஷங்கள் இரட்சகரின் வருகையிலே பூர்த்தியாகுமென வெகு பிரியமாய் எதிர்பார்த்திருந்த கெடுவுக்கு அவர்கள் கிட்டி வந்தார்கள். ஆனால் அக்கெடுவில் இயேசு வராமலே அது மறுபடியும் கடந்து போயிற்று. ஸ்திரமான விசுவாசமும் உயரிய நம்பிக்கையுமுள்ள சிறு மந்தைக்கு அது மிகவும் கசப்பான ஏமாற்றமாயிருந்தது. ஆயினும் கர்த்தருக்குள் நாங்கள் மிகவும் சுயாதீனமுள்ளவர்களாயும் அவருடைய பலத்தினாலும் கிருபையினாலும் பழமாய்ப் பராமரிக்கப்பட்டவர்களாயும் இருந்ததைக் கண்டு வியப்படைந்தோம். LST 29.3

நாங்கள் எமாற்றமடைந்தாலும் சோர்வடையவில்லை. கர்த்தர் எங்களில் ஒட்டியிருந்த களிம்பு போகத் தக்கதாக குகையிலுள்ள பொன்னைப் போல் எங்களைப் புடமிட்டு சுத்திகரிக்கும் கடும் சோதனையைக் குறித்து நாங்கள் முறுமுறுக்கக் கூடாதெனத் தீர்மானித்துக் கொண்டோம். சுத்திகரிக்கும் சோதனையில் பொறுமையாயிருப்பதும் புடமிடப்பட்ட உத்தமமான தமது பிள்ளைகளை மீட்கும் இரட்சகருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்பதும் எங்களுக்கு அவசியமென தேவன் கண்டார். LST 30.1

திட்டமான காலத்தைக் குறித்துச் செய்த பிரசங்கம் தேவனால் ஏற்பட்டதென்று நாங்கள் உறுதியாய் நம்பினோம். இதுவே மனுஷர் வேதகாமத்தைக் கருத்தாய் ஆராய்ச்சி செய்யவும் முன் அவர்கள் கண்டுபிடியாத சத்தியங்களைக் கண்டுபிடிக்கவும் ஓர் வழியாயிருந்தது. உலகம் எங்களுடைய நம்பிக்கையைப் பற்றி அது ஒரு மாயை என்றும், நாங்கள் அடைந்த ஏமாற்றம் அதின் காரணமாய் நேர்ந்த அபஜெயமேன்றும் எண்ணிற்று. ஆனால் அக்காலத்தில் சம்பவிக்க வேண்டிய சம்பவத்தைக் குறித்து நாங்கள் தப்பிதம் செய்திருந்தாலும், தாம்திப்பதைக் காணப்பட்ட தரிசனத்தின் கணக்கில் தப்பிதமில்லை. LST 30.2

கர்த்தருடைய வருகைக்காக எதிர்பார்த்திருந்தோர் ஆறுதலடையாதிருந்ததில்லை; வசநாத்தை ஆராய்ந்து பார்த்ததில் அவர்களுக்கு விலையுயர்ந்த அறிவு கிடைத்தது. இரட்சிப்பின் ஒழுங்கை அதிகத் தெளிவாய் அறிந்து கொண்டார்கள். அனுதினமும் அப்பரிசுத்த புஸ்தகம் நூதன அழகு பொருந்தியுள்ளதாயும் அதின் ஏடுகளெல்லாம் வினோத ஒற்றுமை உள்ளதாயும், ஒரு வேத வாக்கியம் இன்னொரு வேத வாக்கியத்தைத் தெளிவாக்குகிறதாயும், ஒவ்வொரு வார்த்தையும் பிரயோஜன முள்ளதாயுமிருக்கக் கண்டார்கள். LST 30.3