Go to full page →

ஐந்தாம் அத்தியாயம்—அட்வெந்து இயக்கத்தின் மேல் விசுவாசம் ஸ்திரப்பட்டது, என் முதல் தரிசனம் LST 31

1844-ல் குறிப்பிட்ட கெடு கடந்த பிறகு சீக்கிரத்தில் எனக்கு முதல் தரிசனம் அருளப்பட்டது. நான் கிறிஸ்துவுக்குள்ளான ஓர் சகோதரியும், தந்து உள்ளம் எனதுள்ளத்தோடு ஒன்றிணைக்கப் பெற்றுமுள்ளவரான மிஸஸ் ஹெபின்ஸ் அம்மாளை போர்ட்லாந்தில் சந்திக்கப் போயிருந்தேன்; ஸ்தரீகளான நாங்கள் ஐவர் குடும்ப பீடத்தண்டை ஜெபம் செய்வதற்கு அமைதியாய் முழங்கால் படியிட்டோம், நாங்கள் ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கையில் முன் ஒரு போதும் நான் உணர்ந்திராத வண்ணம் தேவனுடைய வல்லமை என் மீதிறங்கினது. ஒளி என்னைச் சுற்றி பிரகாசிக்க இருண்ட உலகத்துக்கு மேலே நான் அதிக உயரமாய் எழும்பிப் போவதாகக் கண்டேன். LST 31.2

உலகத்திலே அட்வெந்து ஜனங்கள் எங்கே என்று பார்க்கத் திரும்பினேன், அவர்களை நான் அங்கே கண்டு பிடிக்கக்கூடாதிருந்த போது ஒரு சத்தம் என்னை நோக்கி “திரும்பவும் பார், இன்னும் சற்று உயர நோக்கிப் பார்” என்று உரைத்தது. உடனே நான் என் கண்களை மேலே ஏறெடுத்துப் பார்த்தபோது உலகத்துக்கு மேலே, சற்று உயரமாய்ப் போடப்பட்டிருந்த நேரானதும் இடுக்கமானது மானதோர் பாதையைக் கண்டேன். இப்பாதையின் மேல் அதின் அக்கரையிலிருந்த நகரத்தை நோக்கி அட்வெந்து ஜனங்கள் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னாக பாதையின் துவக்கத்தில் ஓர் வெளிச்சம் ஏற்பட்டிருந்தது. அது தான் “நடுராத்திரி சத்தம்” என்று ஒரு தூதன் எனக்குச் சொன்னான். இது அப்பாதை நெடுகப் பிரகாசமாய் அவர்கள் இடறி விழுந்து விடாதபடிக்கு அவர்கள் கால்களுக்கு வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது. LST 31.3

தங்களை நகரத்துக்கு நேராக சற்று முன்னால் வழிநடத்திச் சென்று கொண்டிருந்த இயேசுவை அவர்கள் கண்கள் நோக்கிக் கொண்டிருந்ததால் அவர்களுக்கு மோசமில்லை. ஆனால் சீக்கிரத்தில் சிலர் சோர்வடைந்து அந்த நகரம் இன்னும் வெகு தூரமிருப்பதாகவும், இதற்குள் அதில் பிரவேசித்துவிடலாம் என்று எண்ணினோமே என்பதாகவும் சொன்னார்கள். அப்பொழுது இயேசு தமது மகிமையுள்ள வலது கரத்தை உயர்த்தி அவர்களைத் தைரியப்படுத்தினார்; மேலும் அவருடைய கரத்திலிருந்து வந்த ஓர் வெளிச்சம் அட்வெந்து கூட்டத்தின் மேல் வீசினபோது அவர்கள், “அல்லேலுயா” என்று ஆர்ப்பரித்தார்கள். மற்றவர்களோ தங்களுக்குப் பின்னாக வந்த வெளிச்சத்தைத் துணிகரமாய் மருத்ததுமற்றுமின்றி, இம்மட்டும் தங்களை நடத்தி வந்தது தேவனல்ல வென்றும் சொன்னார்கள். அவர்களுக்குப் பின்னிருந்த வெளிச்சம் அணைந்து போகவே அவர்களுடைய கால்கள் பூரண இருளில் அகப்பட்டு, இடறிவிழுந்து அவர்கள் தடத்தையும் இயேசுவையும் காணமல் பாதையை விட்டு விலகி கீழே இருக்கும் இருந்ததும் பொல்லாததுமான உலகத்திற்குட் சென்றார்கள். LST 32.1

சீக்கிரத்தில் நாங்கள் பெருவெள்ளத்தின் இரைச்சலைப் போல் தேவனுடைய சத்தத்தைக் கேட்டோம்; அது இயேசு இன்ன நாளிலும் இன்ன நாளிகையிலும் வருகிறார் என்று எங்களுக்குத் தெரிவித்தது. உயிரோடிருக்கும் 144000 பரிசுத்தவான்களும் அச்சத்தத்தைக் கிரகித் தரித்துக் கொண்டார்கள்; துன்மார்க்கரோ அது இடி முழக்கமென்றும் பூகம்பமென்றும் அஞ்சினார்கள். தேவன் வேளையை வெளிப்படுத்தின போது அவர் பரிசுத்த ஆவியை எங்கள் மேல் பொழிந்தருளினார்; அப்பொழுது சீனாய் மலையிலிருந்து இறங்கி வந்த மோசேயின் முகம் பிரகாசித்தது போல எங்கள் முகங்கள் தேவ மகிமையடைந்து பிரகாசிக்க ஆரம்பித்தன. LST 32.2

144000 பெரும் முத்திரையிடப்பட்டு பூரண அன்னியோன்னிய மாயிருந்தனர். அவர்களுடைய நெற்றிகளில் “தேவன், புதிய எருசலேம்” என்று எழுதப் பட்டிருந்ததுமன்றி, இயேசுவின் புதிய நாமமுள்ள மகிமையான ஓர் நட்சத்திரமு மிருந்தது. பாக்கியமும் பரிசுத்தமுமான எங்கள் நிலைமையை துன்மார்க்கர் கண்டு மூர்க்கம் அடைந்தவர்களாய் எங்கள் மேல் கைபோட்டு எங்களைக் காவலறைக்குள் தள்ளும்படி பாய்ந்து விழுந்தபோது, நாங்கள் கர்த்தரின் நாமத்திலே கரத்தை நீட்டினோம்; அப்பொழுது அவர்கள் உதவியற்ற வர்களாய்த் தரையிலே விழுந்தார்கள். அப்பொழுது தான் ஒருவர் கால்களை ஒருவர் கழுவக் கூடியவர்களும் சகோதரரைப் பரிசுத்த முத்தத்தால் வாழ்த்தக் கூடியவர்களுமான எங்களைத் தேவன் நேசித்தாரென்று அந்தச் சாத்தானுடைய கூட்டட்ட்தர் அறிந்து எங்கள் பாதத்தண்டை விழுந்து வணங்கினார்கள். LST 32.3