Go to full page →

ஜீவ விருச்ஷம் LST 34

இங்கே நாங்கள் ஜீவ விருக்ஷத்தையும் தேவனுடைய சிங்காசனத்தையும் கண்டோம். சிங்காசனத்திலிருந்து ஒரு நதி புறப்பட்டு வந்தது. அந்நதியின் இருகரைகளிலும் ஜீவ விருக்ஷமிருந்தது. நதியின் ஒரு பக்கம் விருக்ஷத்தின் ஒரு அடி மரமும் நதியின் மறு பக்கம் இன்னொரு அடி மரமும் இரண்டும் தெளிவான சுத்த சுவர்ணமாயிருந்தது. முதலில் நான் இரண்டு மரங்களைக் கண்டதாக எண்ணினேன். நான் திரும்பவும் பார்த்தபோது, அவைகள் மேலே ஒரே மரமாய் இணைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். ஆகவே ஜீவ நதியின் இரு கரைகளிலுமிருந்தது ஜீவ விருக்ஷமே. அதில் கிளைகள் நாங்கள் னின்று கொண்டிருந்த இடமட்டும் தாழ்ந்திருந்தன. அதின் கனி மகிமையாய்க் காணப்பட்டது; அது போன்னும்வேள்ளியும் கலந்திருந்தாற் போல தோன்றினது. LST 34.2

நாங்கள் எல்லோரும் அவ்விடத்தின் மகிமையைப் பார்க்கும்படி அந்த விருக்ஷத்தின் கீழே போய் உட்கார்ந்தோம்; அப்பொழுது ராஜ்யத்தின் சுவிசேஷத்தை பிரசங்கித்தவர்களை இரட்சிப்பதற் காகவே தேவனால் கல்லறையில் வைக்கப்பட்டிருந்தவர்களாகிய பிச்சும், ஸ்டாக்மனுமாகிய இரண்டு சகோதரர்களும் எங்களிடம் வந்து, தாங்கள் நித்திரை அடைந்திருந்த காலத்தில் நாங்கள் அடைந்த அனுபோகங்கள் என்னவென்று எங்களைக் கேட்டார்கள், நாங்கள் எங்களுக்கு நேரிட்ட மிகப் பெரிய உபத்திரவங்களை யெல்லாம் நினைத்துப் பார்க்கப் பிரயாசப்பட்டோம், ஆனால் அவை களையெல்லாம் நாங்கள் எங்களைச் சூழ்ந்திருந்த மிகவும் அதிகமான நித்திய கன மகிமையோடு ஒப்பிட்டு பார்த்த பொது அவைகளைப் பற்றிப் பேசுவதும் தகாதென்பது போல் அவ்வளவு அற்பமாய்த் தோன்றினது. ஆனபடியால் நாங்கள் “அல்லேலுயா! சுவர்க்க லோகம் எவ்வளவு மலிவு” என்று சத்தமிட்டதுமன்றி, எங்கள் மகிமையான சுரமண்டலங்களை வாசித்து பரலோக மண்டலங்கள் இறையும்படிச் செய்தோம். LST 34.3

தரிசனம் என்னைவிட்டு நீங்கினது வேறு மாதிரியாய்க் காணப்பட்டன. நான் ஏறெடுத்துப் பார்த்தவைகளெல்லாம் இருளால் மூடப்பட்டிருந்தன. ஆ, எவ்வளவு இருளாய் இவ்வுலகம் எனக்குக் காணப்பட்டது! நான் இங்கே இருக்கிறதாகக் கண்டபோது அழுதேன். மேலாக வீட்டைப் பற்றி ஏக்கம் உண்டாயிற்று. நான் மேலான ஓர் உலகத்தைப் பார்த்திருந்ததினால், இது எனக்குக் கெட்டுப்போனதாகத் தெரிந்தது. LST 35.1

* * * * *