Go to full page →

ஏழாம் அத்தியாயம்—பரிசுத்த ஸ்தலத்தை பற்றிய வெளிச்சம் LST 38

1844ல் அட்வெந்திஸ்தர் அடைந்த பெரிய எமாற்றத்திற்குப் பின்பு கொஞ்ச காலம் தூதை நம்பின பலருக்குக் குழப்பமும் கலக்கமும் ஏற்பட்டிருந்தது. அவர்களில் பெரும்பாலோர் தாங்கள் பழைய தீர்க்கதரிசன காலக் கணக்கைத் தள்ளிவிட்ட தினிமித்தம் அக்கனக்கின்படி ஏற்பட்ட இயக்கத்தின் திட்டமும் சரியல்லவென்று சொன்னார்கள். சிலரோ வேதகாம வாக்கியங்களைக் கொண்டும் தேவாவியனவரின் விசேஷ சாட்சியைக் கொண்டும் ஸ்திரப்படுத்தபட்ட சத்தியங்களையும் அனுபோகமாய்ப் பார்த்ஹா விஷயங்களையும் தள்ளக் கூடாதிருந்தனர். இவர்களில் உவைட் அம்மை ஒருவர். இக் கொடிய பரீட்சையின் காலத்தில் அடைந்த தமது சொந்த அனுபோகத்தைக் குறித்தும் தம்முடன் சேர்ந்து வேத வாக்கியங்களை ஆராய்ச்சி செய்தோரின் அனுபோகத்தைக் குறித்தும் அவர் எழுதினதாவது :- LST 38.1

எங்கள் விசுவாசத்தின் அஸ்திபாரம் எவ்வளவு உறுதியைப் போடப்பட்டிருக்கின்ற தென்பதை நமது ஜனங்களில் அநேகர் உணருகிறதில்லை. 1844ல் போட்ட கெடு கடந்து போன பின்பு, புதையலைத் தேடுவதுபோல், சத்தியத்தைத் தேடினவர்களுள் என் புருஷனும் ஜோசப் பேட்ஸ் போதகரும் தகப்பனார் பீயர்ஸம் எட்ஷன் பேஷக்கும் இன்னும் நுட்ப அறிவும் கண்ணியமும் உண்மையுமுள்ள பலரும் இருந்தனர். நானும் அவர்களுடன் கூடி, நாங்கள் யாவரும் ஊக்கமாய் ஆராய்ச்சி செய்து ஜெபித்தோம். அடிக்கை நாங்கள் இரவில் வெகு நேரம் வரையிலும் சில வேளைகளில் இரவெல்லாம் ஒன்று கூடி வெளிச்சத்திற்காக ஜெபித்ததும் படித்ததுமுண்டு; வேதத்தைப் படிப்பதற்கும் அதின் கருத்தை அறிந்து வல்லமையாய்ப் போதிக்க ஆயத்தப்படுவதற்கும் இச்சகோதரர்கள் திரும்பத் திரும்ப ஒன்று கூடி வந்தனர். அவர்களுடைய ஆராய்ச்சியில் “நாம் இனி அதிகமாய் ஒன்றும் செய்ய முடியாது” என்று அவர்கள் சொல்லக் கூடிய தருணங்களில், கர்த்தரின் ஆவியானவர் என் மேலிறங்குவார். நான் தரிசனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவேன்; நாங்கள் படித் துக்கொண்டிருந்த வாக்கியங்களின் தெளிவான பொருள் எனக்கு அருளப்பட்டுவதுடன் பயன் படத்தக்க விதமாய் நாங்கள் பிரயாசபட்டுப் போதிக்க வேண்டியதெப்படி என்றும் எனக்கு வெளிப்படுத்தப் படும். அவ்விதம் கிடைத்த வெளிச்சத்தினால் நாங்கள் கிறிஸ்துவின் ஊழியத்தையும் அவருடைய ஆசாரியத்துவத்தயும் பற்றிய வேத வாக்கியனகழ்க் கிரகித்துக் கொள்ள ஏதுவாயிற்று. அக்காலம் முதல் நாம் தேவனுடைய நகரம் பிரவேசிக்கும் காலம் வரை செல்லக்கூடிய கோர்வையான சத்தியங்கள் எனக்குத் தெளிவாக்கப் பட்டன. கர்த்தர் எனக்கு அருளினவைகளை நான் மற்றவர்களுக்குக் கொடுத்தேன். நான் இக்காலம் முழுவதும் சகோதரரின் தாக்கங்களை அறிந்துகொள்ளக் கூடாதிருந்தேன். என் அந்தக் கரணம் அடைபட்டாற் போலிருந்தது; நாங்கள் ஆராய்ந்து கொண்டிருந்த வேத வாக்கியங்களின் கருத்து எனக்கு விளங்காதிருந்தது தான் என் ஜீவியத்தில் எனக்கு உண்டாயிருந்த மிகப் பெரிய துக்கங்களிளெல்லாம் துக்கம். எங்கள் விசுவாசத்திற்கான விசேஷ சத்தியங்கள் எல்லாம் தேவனுடைய வார்த்தைக் கிசைவாய் எங்கள் மனதிற்கு தெளிவாக்கப்படுமட்டும் என் மனம் இதே நிலைமையிலிருந்தது. நான் தரிசனமின்றி சும்மாயிருந்தா பொது இக்காரியங்களை அறிந்து கொள்ள முடியாதென்று சகோதரர் அறிந்திருந்தனர். வெளிப்படுத்தப் பட்டவைகள் பரலோகத்திலிருந்து நேராகக் கிடைத்த வெளிச்சமாகவே அவர்களால் எண்ணப்பட்டது. LST 38.2

விஷயமா விஷயமாய் ஆராய்ச்சி செய்யப்பட்டது, இவ்வாராய்ச்சிக் கூட்டங்கள் பக்தி விநயமாய் நடைபெற்றன. பயத்துடன் வேத வாக்கிய்னகலித் திறந்தோம். சத்தியத்தை சரியாய் அறிந்து கொள்ளத் தகுதியுள்ளவர்களாகும் பொருட்டு நாங்கள் அடிக்கடி உண்ணாவிரத மிருந்ததுண்டு. ஊக்கமான ஜெபம் செய்த பின்பு ஏதாவதோர் விஷயம் விளங்காதிருந்தால் அது தாக்கித்துப் பேசப்பட்டது, ஒவ்வொருவரும் தங்கள் அபிப்பிரியாயத்தைத் தாராளமாய்ச் சொல்லிக் கொள்வார்கள்; பிறகு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்றாயிருப்பது போல் நாங்கள் யாவரும் ஒன்றாயிருக்கும் பொருட்டு தேவன் எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று நாங்கள் மறுபடியும் ஊக்கமாய் விண்ணப்பஞ் செய்வோம். LST 39.1

பூர்வீக இஸ்ரவேலருக்கு ஒப்புவிக்கப்பட்டு பரிசுத்தஸ்தலத்தையும் அதின் ஆராதனைகளையும் குறித்துப் படித்த பாடத்தினின்றும், அது கிறிஸ்து நமது பிரதான ஆச்சரியா ஊழியஞ் செய்யும் பரலோக பரிசுத்தஸ்தலத்திற்கு நிழலாயிருந்ததென்று புதியேற்பாட்டில் சொல்லியிருக்கும் வசனங்களைப் படித்ததினின்றும் இவ்வேத மாணாக்கர் தானியேல் 8:14 இன் வார்த்தைகளைப் படுத்தின தாற்பரியத்தன் தங்கள் பழைய தப்பிதத்தை அறிந்து கொள்ளும்படி ஏவப்பட்டார்கள். பரசித்த ஸ்தலத்தைப் பற்றிப் படித்த பாடத்திலிருந்தே அவர்களுக்கு சத்திய வசனங்களின் ஏக ஐக்கியம் தெளிவாய்க் காணப் பட்டது. இவ்வாராய்ச்சிகளிலும் அடைந்த முடிவான தீர்மானங்களிலும் தேவன் தங்களைத் திட்டமாய் நடத்தினாரென்று மிஸஸ் உவைட் அடிக்கடி வெளியிட்டதுண்டு. LST 39.2

மிஸஸ் உவைட் அம்மையாரும் அவருடைய கூட்டாளிகளும் தங்கள் வேத ஆராய்ச்சியில் ஒருமனப்பட்ட விஷயமாகிய பரிசுத்த ஸ்தலத்தையும் அதின் ஆராதனைகளையும் பற்றிய விசேஷ சத்தியங்களின் இரத்தினச் சுருக்காம் இங்கே அவருடைய சொந்த மொழிகளில் அருளப்பட்டிருக்கின்றது: LST 40.1

“இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும் வரைக்கும் இருக்கும்; பின்பு பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படும்” என்னும் வேதவாக்கியமே மற்றெல்லாவற்றையும் விட அட்வெந்து விசுவாசத்திற்கு அச்திபாரமும் நடுத்தூணுமாயிருந்தது. உலகத்திலுள்ள சகல கிறிஸ்தவர்களும் கொண்டிருந்த பொதுவான கொள்கைக் கேற்க, பூமி அல்லது அதில் ஏதோ ஓர் பாகம் தான் பரிசுத்த ஸ்தலமென்றும், கடைசி மகா நாளின் அக்கினியினால் பூமி சுத்திகரிக்கப் படுவதே பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்க படுவதென்றும் அட்வெந்திஸ்தரும் அக்காலம் கொண்டிருந்தார்கள். இது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் நடக்குமென்று அவர்கள் எண்ணியிருந்தனர். ஆகவே கிறிஸ்து 1844-ல் பூமிக்குத் திரும்புவார் என்பது தீர்மானம். LST 40.2

அவர்களுடைய ஆராய்ச்சியில் தேவனுடைய கட்டளைப் பிரகாரம் மோசேக்கு மலையிலே காண்பிக்கப்பட்ட மாதிரியின் படியே அவனால் கட்டப்பட்ட பூமிக்குரிய பரிசுத்தஸ்தலமானது “இக்காலத்திற்கு உதவுகிற் ஒப்பனையாயிருக்கிறது” என்றும் அதின் இரண்டு பரிசுத்தஸ்தலங்களும் “பரலோகத்தில் உள்ளவைகளுக்குச் சாயலானவைகள்” என்றும் கிறிஸ்து “பரிசுத்தஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பதட்ட மெய்யான கூடாரத்திலும் ஆச்சாரிய ஊழியஞ் செய்கிரவருமாயிருக்கிற” நமது பிரதான ஆசாரியென்றும் “மெய்யான பரிசுத்தஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல் பரலோகத்தில் தானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமூகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்” என்றும் அவர்கள் கற்றறிந்தார்கள் (எபி. 9:1,9,23; 8:2, 9:24). LST 40.3

பூமிக்குரிய ஆசரிப்பு கூடாரம், பரிசுத்தஸ்தலம் மகா பரிசுத்த ஸ்தலமென இரண்டு அறைகளுடைய தாயிருந்தது போல, பரலோகத்திலுள்ள கூடாரஸ்தலமும் இரண்டு ஸ்தலங்களுடையதா யிருக்கின்றது. கீழேயுள்ள பரிசுத்தஸ்தலத்தில் காணப்பட்ட மாதிரியான தேவனுடைய நியாயப்பிரமான மடங்கிய உடன்படிக்கைப் பெட்டியும் தூப பீடமும் மற்ற தட்டு முட்டு சாமான்களும் மேலேயுள்ள பரிசுத்தஸ்தலத்திலுமுண்டு. பரிசுத்த காட்சியில் அப்போஸ்தலனாகிய யோவான் பரலோகம் பிரவேசிக்க இடம்பெற்று, அங்கே அவன் குத்து விளக்கையும் தூப பீடத்தையும் கண்டதுமன்றி, “தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது” அவன் “அவருடைய உடன்படிக்கைப் பெட்டி”யையும் கண்டான் (வெளி. 11:19). LST 40.4

சத்தியத்தைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் பரோலோகத்தில் ஒரு பரிசுத்தஸ்தல உண்டென்பதற்கு, மறுக்க முடியாத அத்தாட்சியைக் கண்டுபிடித்தார்கள். மோசேக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின் படியே அவன் பூமிக்குரிய பரிசுத்தஸ்தலத்தை உண்டாக்கினான். மாதிரியாக் காண்பிக்கப்பட்டது பரலோகத்திலிருக்கிற பரிசுத்த ஸ்தலந்தான் என்று பவுல் கூறுகிறார்; யோவான் அதை தான் பரலோகத்தில் கண்டதாகச் சாட்சியிடுகிறார். LST 41.1