2300 நாட்களின் முடிவாகிய 1844ல் அநேக நூற்றாண்டுகளாய்பூமியில் யாதொரு பரிசுத்தஸ்தலமும் இருந்ததில்லை; ஆகவே, “இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும் வரைக்கும் இருக்கும்; பின்பு பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படும்” என்னும் வார்த்தைகளில் கண்டுள்ள பரிசுத்த ஸ்தலம் பரலோகத்திலுள்ள பரிசுத்த ஸ்தலமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் பரலோகத்திலுள்ள பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்பட வேண்டியதின் அவசியம் என்ன? LST 41.4
தீர்க்கதரிசன மாணாக்கர் திரும்பவும் வேத வாக்கியங்களா ஆராய்ச்சி செய்தபோது, அந்தச் சுத்திகரிப்பு இரத்தத்தைக் கொண்டு சுத்திகரிக்கப் பட வேண்டியது ஆதலால் அது பாவத்தைப் போக்குவதற்கான சுத்திகரிப்பேயன்றி மாம்ச அழுக்கை நீக்குவதற்கான சுத்திகரிப்பல்ல வென்று அவர்கள் கண்டார்கள். அப்போஸ்தலன் கூறுகிறதாவது: “ஆதலால் பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகளை இப்படிப்பட்ட பலிகளினாலே (ஆடுமாடுகளின் இரத்தம்) சுத்திகரிக்கப்பட வேண்டியாதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விஷேசித்த பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாமே (கிறிஸ்துவின் விலையேற்றப்பெற்ற ரத்தம்).” (எபி. 9:23) LST 42.1
தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிற சுத்திகரிப்பைக் குறித்து இன்னும் நன்றாய் அறிய வேண்டுமானால் பரலோக பரிசுத்தஸ்தலத்தின் ஊழியத்தை பற்றி அறிய வேண்டியதவசியம். ஏனெனில் பூமியில் செய்யப்பட்ட ஆராதனை “பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும்” ஒத்திருப்பதாகப் பவுல் சொல்லுகிறார். LST 42.2