Go to full page →

தேவ வார்த்தை அவமாய்ப் போகிறதில்லை LST 47

இயேசு வருவாரென்று தேவனுடைய ஜனங்கள் எதிர்பார்த்திருந்த சமயத்தில் அவர்கள் அவரைக் காணமுடியாமற் போன அக்கொடிய ஏமாற்றம் எனக்குக் காண்பிக்கப்பட்டது. தீர்க்கதரிசன காலம் முடியவில்லை என்பதற்கு அவர்களுக்கு யாதொரு அத்தாட்சியும் இல்லாததினால் ஏன் தங்கள் இரட்சகர் வரவில்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை? தூதன் சொன்னதாவது : “தேவ வசனம் தவறிப் போயிற்றா? தேவன் தமது வாக்குத்தத்தங்களை “நிறைவேற்றாமலிருந்திருக்கிறாரர? இல்லை; அவர் அளித்த வாக்குத் தத்தங்களை யெல்லாம் அவர் நிறைவேற்றி இருக்கிறார். இயேசு எழுந்து பரலோக ஆலயத்திலுள்ள பரிசுத்த ஸ்தலத்தின் வாசலைப் பூட்டிவிட்டு பரிசுத்த ஸ்தலத்தை சுத்திகரிக்க மகா பரிசுத்த ஸ்தலத்தின் வாசலைத் திறந்து அதற்குள் பிரவேசித்திருக்கிறார். பொறுமையாய்க் காத்திருப்போர் அனைவரும் அந்த ரகசியத்தை அறிந்து கொள்வார்கள். மனுஷன் தவறி இருக்கின்றான். ஆனால் தேவனோ ஒருபோதும் தவறினதில்லை. தேவனுடைய வாக்குத் தத்தமெல்லாம் நிறைவேறியிருக்கின்றது, ஆனால் மனுஷன் அந்த தீர்க்கதரிசன நாட்களின் முடிவில் சுத்திகரிக்கப்பட வேண்டிய பரிசுத்த ஸ்தலம் பூமியில் தான் என்று தப்பிதமாய் எண்ணிக் கொண்டான். தேவனுடைய வாக்குத்தத்தமல்ல, மனிதனுடைய எதிர்பார்த்தலே தவறிப் போனது.” LST 47.2