ஆதியில், மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டு ஏத்தேன் தோட்டத்தில் வைக்கப்பட்ட போது அவான் தன ஸ்ருஷ்டிகர்தாவோடும் தேவ தூதர்களோடும் முக முகமாய்ப் பேசக் கூடியவனாய் இருந்தான். பாவம் பிரவேசித்த போது இச்சிலாக்கியம் விலகி போயிற்று. மனுஷன் மரணத்திற்குள்ளாகி அதற்கப்புறம் அவன் ஒருபோதும் தேவ சமூகத்தில் பிழைத்திருக்கவோ அல்லது அவருடைய அதிசய மகிமையைத் தரிசிக்கவோ கூடாதிருந்தது. LST 54.1
ஆனால் தவறிப் போன மனுஷன் நேரில் தேவனோடு சம்பாஷிக்கக் கூடாதிருந்த போதிலும் நமது அன்புள்ள பரம பிதா தமது திருவுளச் சித்தத்தை மனுக்குலம் அறிந்து கொள்வதற்கான வழிகளை உண்டாக்கி வைத்திருக்கிறார்.புருஷர்களையும் ஸ்திரிகளையும் போல்லான்கனின் வல்லமைக்கு விலகிக் காப்பாற்றவும் அவர்கள் தமது சித்தத்திற்கு இசைவாய் நடக்கும்படி அவர்களுக்கு உதவி செய்யவும் அவர் தமது பரிசுத்த தூதர்களை அனுப்புகிறார். பரிசுத்த ஆவியின் எதுகரதினால் தேவன் மனிதருள்ளத்தில் பேசி, மகா பிரதானமான பாவியும் பாமரனும் கூட நித்திய ஜீவ வழியைக் கண்டுபிடித்துக் கொள்வதற்கும் செய்கிறார். LST 54.2
தேவன் தரிசனங்கள் சொப்பனங்கள் மூலமாய் பேசுகிற மானிட ஹேதுக்களையும் அவர் தெரிந்திருக்கிறார். அவருடைய சித்தத் தை தெரிவிக்கும் இவ்வூழியர்கள் தீர்க்கதரிசிகள் எனப்படுகிறார்கள். பரத்திலிருந்து சத்தியத்தைப் பெற்று அதை மனுக்குலதிற்குக் கொடுக்கும்படியான விசேஷ ஊழியத்திற்கென்று தேவன் அவர்களை நியமித்திருக்கிறார். “உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாய் இருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்” என்று அவர் கூறுகிறார். எண் 12:8. LST 54.3
பரிசுத்த வேதாகமம் விசேஷமாய் தீர்க்கதரிசிகளின் எழுத்துகளிலிருந்து ஏற்பட்டிருக்கிறது. இம்மனிதர் தங்கள் காலத்தில் வசித்த ஜனங்களுக்கு மாத்திரம் தேவனிடமிருந்து தூது மொழிகள் கொடுக்க வில்லை. அவர்கள் ஆவிக்குரிய சாத்தியங்களை போதித்ததுமன்றி, இனி வரும் சபைக்கான ஆலோசனைகளையும் எச்சரிப்புகளையும்கூட கொடுத்தார்கள். “தங்கள் நிமிதமல்ல, நமது நிமித்தமே... இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிற இவைகளை தெரிவித்தார்களென்று (தீர்க்கதரிசிகளுக்கு) வெளியாக்கப்பட்டது” 1 பேது. 1:10.12 LST 55.1