Go to full page →

கடைசி நாட்களில் திரும்பவும் கொடுக்கப்படுதல் LST 58

ஆனால் வேத வாக்கியங்கள் பயங்கர மார்க்க துரோகத்தை முன்னறிவிப்பது தவிர கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு சற்று முன் அனேகர் அந்தகார தப்பிதத்தின்நின்றும் அவபக்தியின்\நின்றும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவைகள் தெளிவாய் போதிக்கின்றன. இன்னும் ஓர் தரம் பூமி தேவனுடைய மகிமையினால் பிரகாசிக்கப்படவேண்டும். வேதஆகமத்தின் சுத்த கொள்கைகள் ஒளி வீச வேண்டும். யுகத்தின் அதி சீக்கிர முடிவை குறிக்க பரம வெளிச்சம் வீசி நிற்கும் இக்காலத்தில் ஆவியின் வரங்கள் திரும்பவும் மெய்யான சபையில் வெளிப்பட வேண்டும். “கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்க தரிசனம் சொல்லுவார்கள். உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள். உங்கள் மூப்பர் சொப்பனங்களை காண்பார்கள்.” “என்னுடைய ஊழியக்காரர் மேலும் ஊழியகாரிகள் மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன்., அப்போது அவர்கள் தீர்க்க தரிசனம் சொல்லுவார்கள்,” அப். 2:17,18; யோவேல்2:28,29. LST 58.5

“தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்ளுகிறவர்களும் இயேசு கிறிஸ்துவை குறித்த சாட்சியை உடையவர்களுமாகிய” கடைசி சபையை அல்லது அவளுடைய சந்ததியான “மற்றவர்களை” யோவான் தீர்க்க தரிசி வெகு தெளிவாக பேசுகிறார். வெளி. 12:17; “ஏசுவைக் குறித்த சாட்சி” என்பதின் அர்த்தம் இன்னதென்பதை இன்னொரு இடத்தில் அவரே தெளிவாக்கி இருக்கிறார். ஒரு சமயம் யோவான் தனது தரிசனத்தில் காணப்பட்ட தூதனை வணங்கும் படி அவனுடைய பாதத்தில் விழுந்த போது தூதன் அவனை நோக்கி : “இப்படி செய்யாதபடிக்கு பார்” உன்னோடும் ஏசுவைக் குறித்து சாட்சி இட்ட உன் சகோதரரோடும் கூட நானும் ஒரு ஊழியக்காரன்” என்றான். வெளி.19:1௦. LST 59.1

இன்னொரு இடத்தில எழுதப்பட்டிருக்கிறபடி அதே மாதிரியான ஒரு சந்தர்ப்பம் நேரிட்டபோது அதே தூதன் சொன்னதாவது: “இப்படி செய்யாதபடிக்கு பார்... உன் சகோதரர்களோடும் தீர்க்க தரிசிகலோடும் ...நானும் ஒரு ஊழியக்காரன்” வெளி. 22:9 LST 59.2

இவ்விரு வாக்கியங்களின் கருத்தும் ஒன்று தான், ஒரு வாக்கியத்தில் யோவானுடைய “சகோதரர்கள்” ஏசுவைக் குறித்த சாட்சியை உடையவர்களென்றும், மற்றதில் இச்“சகோதரர்கள்” “தீர்க்க தரிசிகள்” என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். LST 59.3

ஆகவே “ஏசுவைக் குறித்த சாட்சி உடையவர்கள்” “தீர்க்க தரிசிகளா” இருக்கிறார்கள். யோவானுக்கு காணப்பட்ட தூதன் தீர்க்க தரிசஈகள் அனைவருக்கும் காரியங்களை வெளிப்படுத்துகிற விசேஷ ஊழியக்காரன் என தெரிகிறது. தானியேலுக்கு கானப்பட்டாதாய் சொல்லப்பட்டிருக்கும் காபிரியேல் தூதனே அவன் என்பதற்கைபமில்லை. தானியேல் 8:16; 9:21 பார்க்க.அதே தூதன் பின்னும் யோவானை நோக்கி “இயேசுவை பற்றின சாட்சி தீர்க்க தரிசிகளின் ஆவியாய் இருக்கிறது” என்றான். வெளி. 19:1௦ LST 59.4

வெளிப்படுத்தல் 12:17இல் “தேவனுடைய கற்பனைகளை கைகொல்லுகிறவர்களும் இயேசு கிறிஸ்துவைக் குறித்த சாட்சி உடையவர்களுமாகிய . . . மற்றவர்களை” குறித்து சொல்லப்பட்டி இருக்கிறது. “இயேசுவை பற்றின சாட்சி தீர்க்க தரிசனத்தின் ஆவியாய் இருக்கிறது” என்று விஸ்தரிக்கப் பட்டிருக்கிறது. வெளி 19:1௦ ஆகவே அவளுடைய சந்ததியான மற்றவர்கள் எண்ணப்பட்ட சபையே (மீதியான சபை) தீர்க்க தரிசன ஆவியுடைய சபை எனத் தீர்மானிக்கிறோம். LST 59.5

“தீர்க்க தரிசிகளா”னவர்கள் தான் (வெளி. 22:9) :ஏசுவைப் பற்றின சாட்ச்சி உடையவர்கள்” வெளி 19:1௦ என்றும் நாம் கவனித்திருக்கிறோம். இவ்விதம் தீர்க்க தரிசி அல்லது தீர்க்க தரிசிகள் மீதியான சபையில் காணப்பட வேண்டுமெனத் தெளிவாகின்றது. LST 60.1

முடிவாகும் உலகின் சரித்திரக் காட்சிகளை குறிப்பிடும் அடையாளங்களையும் சம்பவங்களையும் குறித்து வேதாகமத்தில் முன்னுரஈக்க பட்டவைகள் எல்லாம் சடுதியாய் நிறைவேறுவதை நாம் பார்க்கும் போது பூமியின் மீதியான் சபை உண்டாயிருக்கும் நாட்களாகிய கடைசி நாட்களில் நாம் இப்பொழுது சேவித்து வருகிறோம் என்பது நிச்சயம். எனவே தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்ளுகிறவர்களும் தங்களுக்குள் ஏசுவைப் பற்றின சாட்சி அல்லது தீர்க்க தரிசன ஆவி உடயவர்களுமான ஒரு கிறிஸ்துவ ஜனக் கூட்டம் தற்போது உண்டாயிருக்க வேண்டும். LST 60.2

இக்காலத்தில் காணப்படும் பல சபைகள் சங்கங்களுக்குள் “தேவனுடைய கற்பனைகளை சீனாய் மலையிலிருந்து பத்து பிரமாணமாக அருளப்பட்டபடியே கைக்கொல்லுவோர் வெகு சொர்பமே. ஏனெனில் இக்கற்பனைகளில் நான்காம் கற்பனை ஏழாம் நாளே ஒய்வு நாளென்று தெளிவாய்க் கூறியும் பெரும்பாலோர் அந்நாளில் வேலை செய்கிறவர்களாயும் தெய்வீக உத்தரவு யாதோன்ருமின்றி தங்களுக்கு வேண்டிய விசேஷ இளைப்பாறுதல் ஆராதனையின் காலமாக வாரத்தின் முதல் நாளை தெரிந்து கொண்டவர்களாயும் இருக்கிறார்கள். LST 60.3

ஆகவே தேவனுடைய கற்பனைகள் இருக்கிற படியே தன அங்கத்தவர்கள் கைக்கொள்ள வேண்டுமென்று விசுவாசிக்கும் சில சபைகளுள் ஒன்ரில் தீர்க்க தரிசன வரம் வெளிப்படுகிறதென்பது மிகவும் விசேஷமான காரியம். இவ்விதம் தீர்க்க தரிசியான யோவானால் வெளிப்பாடுத பட்ட படி “தேவனுடைய கற்பனைகளை” கைக்கொல்லுகிறதும் “இயேசு கிறிஸ்துவைப் பற்றின சாட்சி” அல்லது தீர்க்க தரிசிகளுக்கு உரிய “தீர்க்க தரிசன ஆவி” உடைதாயிருப்பதும் மெய்யான சபைக்குரிய இரு லட்சணங்களும் இக்க்ரிச்துவர்களில் மீதமாயிருக்கும் சங்கத்தை அமைத்திருக்கின்றன. LST 60.4