1852 ஏப்ரல் இல் மிகுந்த அதைரியமான சந்தபங்களின் மத்தியில் நாங்கள் நியூ யார்க்கில் உள்ள ரோச்செச்டருக்கு குடி போனோம். எங்கே சென்றாலும் விசுவாசத்தோடு முன் செல்ல வேண்டியதாயிருந்தது. இன்னும் நாங்கள் வறுமைக்கு உட்பட்டவர்களாய் கண்டிப்பான செட்டிமையையும் சுயவெருப்பையும் கையாடும்படி கட்டாயப் படுத்தினோம். 1852 ஏப்ரல் இல் 16இல் சகோதரர் ஹௌலாந்து குடும்பத்திற்கு எழுதிய ஓர் நிருபத்திளிருந்து கொஞ்சத்தை இங்கு எடுத்துக் கூறுகிறேன்: LST 69.4
“இப்பொழுது தான் நாங்கள் ரோச்செச்டார் வந்து சேர்ந்திருக்கிறோம். நாங்கள் ஓர் பழைய வீட்டை வருஷம் நூற்றெழுபத்தைந்து டாலருக்கு வாடாகை பேசி இருந்தோம். வீட்டிலேயே அச்சாபீசை வைத்திருந்தோம். மற்றபடி ஆபிஸ் அறைகென்று மாத்திரம் வருஷம் ஐம்பது டாலர் செலுத்த வேண்டும். நீங்கள் எங்களையும் எங்கள் வீட்டில் உள்ள சாமான்களையும் வந்து பார்பீர்கர்ளாகீல் சிரிப்பீர்கள். கட்டில் ஒன்று 25 சதவீதம் இரண்டு பழைய கட்டில்கள் வாங்கி இருக்கிறோம். என் புருஷன் ஆறு பழைய நாற்காலிகள் கொண்டுவந்திருக்கிறார். அவைகளில் இரண்டாயினும் ஒரே தினுசில் இல்லை. ஆருக்கும் ஒரு டாலர் கொடுத்து வாங்கி இருக்கிறார். சீக்கிரத்தில் பின்னும் எனக்கு அவர் நான்கு பழைய நாற்காலிகள் இனாம் செய்திருக்கிறார். அவைகளுக்கு உட்காரும் ஆசனம் இல்லை. அறுபத்தி இரண்டு சதம் மட்டும் அவைகளின் கிரயம். சட்டங்கள் உறுதியாய் இருக்கின்றன. உட்காருவதற்காக நான் அவைகளை கட்டிக்கொண்டிருக்கிறேன். எண்ணை கிராக்கியாய் இருக்கிறதனால், நாங்கள் அதை வாங்குகிறதில்லை, உருளை கிழங்கு வாங்க இயலாது. வெண்ணைக்குப் பதிலாக ஆணத்தயும, உருளை கிழங்குக்குப் பதிலாக டர்னிப் கிழங்கையும் நாங்கள் உபயோகிக்கிறோம். இரு காலி மர பீப்பாய்கள் மேல் ஒரு பலகையை போட்டு அதன் மேல் எங்கள் முதல் போஜனத்தை வைத்து சாபிட்டோம். தேவனுடைய வேலை முன்னேறுவதற்காக நாங்கள் கஷ்ட் நஷ்டங்களை சகிக்க மனப்பூர்வமாயிருக்கிறோம். நாங்கள் இவ்விடம் வந்தது தேவ நடத்துதல் என்றே நம்புகிறோம். வேலை செய்வதற்கு இடம் விஸ்தாரமாய் உள்ளது. வேலை ஆட்களோ சொற்பம். சென்ற ஒய்வு நாளில் நமது கூட்டம் சிறப்பாய் இருந்தது. கர்த்தர் தமது பிரசன்னத்தில் எங்களை இளைப்பாற்றினார். LST 69.5