Go to full page →

பதினான்காம் அத்தியாயம்—இரு விழிகள் LST 72

1856 மே 27 இல் மிசிகனில் உள்ள பற்றில் கிரேக் இல் கூடின ஓர் கூட்டத்தில் பொதுவாய் சபையைக் குறித்த சில காரியங்கள் எனக்கு தரிசனத்தில் காட்டப்பட்டன. தேவனுடைய மகிமையும் மகத்துவமும் எனக்கு முன்பாக கடந்து போகும்படி செய்யப் பட்டது. தூதன் சொன்னதாவது: “மகத்துவத்தில் அவர் பயங்கரமானவர், என்றாலும் நீங்கள் அனுதினமும் அவரை விசனப் படுத்துகிறீர்கள். இடுக்கம்ன வாசால் வழியாய் உட்ப்ரவேசிக்க பிரயாசப் படுங்கள். கடேக்கு போகிற வாசல் விரிவும் வழி விசாலமாவும் இருக்கிறது. அதன் வழியாக பிரவேசக்கிறவர்கள் அனேகர். ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாய் இருக்கிறது. அதை கண்டுபிடிக்கிரவர்ர்கள் சிலர்.” இந்த ரஸ்தாக்கள் தெளிவான வெவ்வேறு ரஸ்தாக்களும் ஒன்றுகொன்று எதிர்த்து போகிறவைகளுமானவைகள். ஒன்று நித்திய ஜீவனுக்கும் மற்றது நித்திய மரணத்துக்கும் போகிறது. நான் இந்த ரஸ்தாகளுக்குள் உள்ள வித்தியாசத்தை மாத்திரம் மற்றும் அல்ல அவற்றில் பயணிக்கும் கூட்டத்தினருக்குள்ள வித்தியாசத்தையும் கண்டேன். அந்த ராஸ்தாகள் எதிர்த்து போகின்றன. ஒன்று விசாலமும் சாமமும் ஆனது. மற்றது இடுக்கமும் கரடு முரடும் ஆனது.. ஆகவே அவைகளில் பிரயாணம் பண்ணுகிறவர்கள் குணத்திலும் ஜீவியத்திலும் உடை நடையிலும் எதிரிடை ஆனவர்கள். LST 72.3

இடுக்கமான வழியில் பிரயாணம் பண்ணுகிறவர்கள் பிரயாணத்தின் முடிவில் தாங்கள் அடையும் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் பற்றி பேசுகிறார்கள். அவர்கள் முகங்கள் அடிக்கடி வியாகூலம் அடைந்திருந்தாலும் அவைகள் அடிக்கடி பரிசுத்த சந்தோஷத்தினால் பிரகாசிக்கின்றன. விசாலமான ரஸ்தாவில் போகும் கூட்டத்தினரை போல அவர்கள் உடுத்துகிறதும் இல்லை பேசுகிறதும் இல்லை நடக்கிறதும் இல்லை. அவர்களுக்கு மாதிரி ஒன்று அளிக்கப்பட்டு இருக்கிறது. துக்கம் நிறைந்தவரும் பாடு அனுபவித்தவரும் ஆன ஒரு மனுஷன் அவர்களுக்கென்று அந்த ரஸ்தாவை திறந்து அவரே அதில் பிரயாணம் பண்ணினார். அவரைப் பின்பற்றி செல்லுகிறவர்கள்அவரது அடிச் சுவடுகளை பார்த்து ஆறுதலும் தைரியமும் அடைகிறார்கள். LST 73.1

விசாலமான ரஸ்தாவில் செல்லுகிறவர்கள் எல்லோரும் தங்களையும் தங்கள் உடையும் வழியில் உள்ள தங்கள் இன்பங்களையும் பற்றியே ஜாக்கிரதையாய் இருக்கிறார்கள். அவர்கள் உல்லாசத்திலும், களிஆட்டதிலும் சகஜமாய் தங்களை சீராட்டிக்கொண்டு தங்கள் பிரயாணத்தின் முடிவையும் பாதையின் முடிவில் இருக்கும் திட்டமான அழிவையும் பற்றி சிந்திக்காது இருக்கிறார்கள். நாள்தோறும் அவர்கள் தங்கள் அழிவை அடுத்துச் செல்கிறார்கள் என்றாலும் அவர்கள் அதி வேக வேகமாய் வெறி கொண்டவர்கள் போல பாய்கிறார்கள். ஓ எனக்கு இது எவ்வளவு பயங்கரமாய் கானப்பட்டது. LST 73.2

“உலகத்து செத்தவர்கள் எல்லா காரியங்களுக்கும் முடிவு சமீபமாய் இருக்கிறது. நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்” இன்னும் வார்த்தைகள் தங்கள் மேல் எழுதப்பட்ட அனேகர் இவ்விசாலமான ராஸ்தாவில் பிரயாணம் பண்ணுவதை நான் கண்டேன். ஆவர்கள் முகங்களில் துக்கக் குறியை கண்டேன். மற்றாபடி அவர்கள் தங்களை சுற்றிலும் உள்ள சகல வீனர்களைப் போலவே காணப்பட்டார்கள். அவர்கள் தங்களை சுற்றிலும் உள்ள யோசனை அற்ற உல்லாசப் பிரியரைப் போலவே பேசினார்கள்.ஆனால் அவர்கள் சில வேளா வேலைகலஈ தங்கள் வஸ்திரத்தின் மேல் உள்ள எழுத்துகளை சந்தோஷமாய் குறிப்பிட்டுக் காட்டிக் கொண்டு மற்றவகளும் அதே எழுத்துகளை தங்கள் வஸ்திரங்களில் பெற்றுக் கொள்ள சொன்னார்கள்.அவர்கள் விசாலமான வழியில் இருந்தார்கள், என்றாலும் தாங்கள் இடுக்கமான் வழியில் பிரயாணம் பண்ணுகிறவர்களை சேர்ந்தவார்கள் என்று அவர்கள் சொல்லிக் கொண்டார்கள். அவர்களைச் சுற்றி இருந்தவர்கள் ” உங்களஊக்கும் எங்களுக்கும் யாதொரு வித்தியாசம் இல்லையே. நாம் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிறோம். நாம் எல்லோரும் ஒரே மாதிரி உடுத்துகிறோம். பேசுகிறோம்,செய்கிறோம்” என்று சொன்னார்கள். LST 73.3

இக்கடைசி நாட்களுக்கு உரிய சத்தியத்தை விச்வாசிக்ரதாக சொல்லி கொண்ட அனேகர் இஸ்ரவேல் புத்திரர் பிரயாணத்தில் முரு முருததயும் தேவன் அவர்களை அற்புதாமாய் நடத்திக் கொண்டு வந்தும் அவரர் அவர்களுக்காக செய்தவைகளை எல்லாம் மறந்து அவ்வளவு தூரம் அவர்கள் நன்றி கேட்டுப் போனதையும் குறித்து ஆச்சரியப் படுகிறதை நான் கண்டேன். தூதன் சொன்னதாவது, நீங்கள் அவர்களை பார்க்கிலும் அதிகம் கேடாய் செய்திருக்கிறீர்கள். மறுத்துப் பேசக் கூடாதா அவ்வளவு சுத்தமும் தெளிவும் உள்ள சத்தியத்தை தேவன் தமது ஊழியக்காரருக்கு கொடுதிருக்கிரதாக நான் கண்டேன். அவர்கள் எங்கு செண்டாலும் நிச்சயாமாய் ஜெயம் பெறுகிறார்கள்.எதிர்த்து பேசக் கூடாத சதியத்தண்டை அவர்கள் சத்ருக்கள் நெருங்கி போக முடியாது. தேவனுடைய ஊழியக்காரர்கள் எவ்விடத்திலும் எழும்பி நின்று சத்தியத்தை தெளிவாயும் கோர்வையையும் கூறி அதை ஜெபம் பெறச் செய்யத் தக்கதாக ஒளி அவ்வளவு பிரகாசமாக வீசி இருக்கிறது இப்பெரிய ஆசிர்வாதத்தை அவர்கள் நன்கு மதியாமலும் அல்லத்ஹு உணராமலும் இருக்கிறார்கள். LST 74.1