Go to full page →

மரணத்தை எதிர்பார்த்தல் LST 11

இக் காலத்தில் ஆண்டவர் என்னை மரணத்திற்கு ஆயத்தப் படுத்தும்படி நான் ஜெபிக்க ஆரம்பித்தேன். குடும்ப சந்திப்பிற்கு வரும் கிறிஸ்தவ சிநேகிதர், மரிப்பதைக் குறித்து என் தாயார் என்னிடம் பேசினதுண்டாவெ\னக் கேட்பார்கள். இவ் வார்த்தை என் செவியில் விழுந்ததினால் எனக்கு மிகுந்த ஆத்திரமுண்டாயிற்று. நான் ஓர் கிறிஸ்தவளாக விரும்பினதுமன்றி என் பாவ மன்னிப்புக்காக மிகவும் ஊக்கமாய் மன்றாடினேன். அதினால் நான் மனச் சமாதானம் பெற்று, நான் இயேசுவை நேசித்தது போல யாவரும் அவரை நேசிக்க வேண்டுமென்று விரும்பினேன். LST 11.1

நான் மெல்ல மெல்ல படிப்படியாய்ப் பெலமடைந்து என் பாலிய சிநேகிதருடன் கூடி விளையாடத் தக்கவளான பொது, ஒருவனுடைய தோற்றமே அவனுடைய கூட்டாளிகளின் கூட்டுறவை வித்தியாசப் படுத்துமென்னும் கசப்பான பாடத்தை நான் கற்றுக் கொண்டேன். எனக்கு ஆபத்து நேரிட்ட காலத்தில் என் தந்தை ஜியார்ஜியாவில் இருந்தார். அவர் திரும்பி வந்த பொது என் சகோதர சகோதரிகளை அரவணைத்து அன்பின் முத்தமிட்ட பிறகு என்னை விசாரித்தார். நான் வெட்கி சற்று பின்னிட்டு மறைந்து நிற்கையில், என் தாயார் என்னைச் சுட்டிக் காண்பித்தார். ஆனால் என் சொந்தத் தந்தையோ என்னை இனம் தெரிந்து கொள்ளவில்லை. சில மாதங்களுக்கு முன் சுகமும் சந்தோஷமுமாய் விட்டுப் போன எலன் பிள்ளை என்னும் சிறுமி நான் தான் என அறிவது என் தந்தைக்குக் கஷ்டமாயிருந்தது. இது எனக்கு மிகுந்த விசனத்தை உண்டாக்கிற்று. இருதயம் உடைவுற்றவளாய் இருந்தும் முகமலர்ச்சியாயிருக்க பிரயாசப் பட்டேன்.” LST 11.2