கர்த்தரின் பிள்ளைகள் ஜெபத்தை விசேஷமாய் அந்தரங்க ஜெபத்தை அதிகமாய் அசட்டை செய்கிறதையும் விசுவாசத்தை காண்பிக்க வேண்டியது தங்கள் ச்லாகியமும் கடமையுமாய் இருந்ததாலும் அனேகர் அதை காண்பிக்காமல் விசுவாசம் மாத்திரம் கொண்டு வராக் கூடிய அந்தஉணர்சிக்காக காதிருக்கிரதையும் நான் அடிக்கடி பார்த்தேன். உணர்ச்சி விசுவாசம் அல்ல. இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. விசுவாசம் நம்மில் விளங்க வேண்டும். அனால் சந்தோஷ உணர்ச்சியும் ஆசிர்வாதமும் தேவனால் அருளப்பட வேண்டும். தேவ கிருபை ஆனது உயிருள்ள விசுவாசத்தின் மூலமாய் ஆதுமாவிற்கு வருகிறது. அந்த விசுவாசத்தை விளங்க செய்ய வேண்டியது நமது காரியமாய் இருக்கிறது.. LST 88.1
உண்மையான விசுவாசம் வாக்கு தத்தம் பண்ணப் பட்ட ஆசிர்வாதத்தை அடைந்து அனுபவிக்கும் முன் அதை பற்றியக் கொண்டு சொந்தம் பாராட்டுகிறது. நாம் நமது விண்ணப்பங்களை விசுவாசத்துடன் இரண்டாம் திரைக்குள் அனுப்ப வேண்டும். விசுவாசமோ வாக்கு தத்தம் பண்ணப் பட்ட ஆசிர்வாதத்தை பற்றிக் கொண்டு அதை நமது சொந்தமாக்கிக் கொள்ளட்டும். நமது விசுவாசம் அதைப் பற்றிக் கொள்ளுகிற படியால் அவ்வாசிர்வாதாங்களை நாம் பெற்றுக் கொள்ளுகிறோம் என்று அப்போது நாம் விசுவாசிக்கிறோம். திரு வசனத்தின் படி அது நம்முடையதாய் இருக்கிறது “நீங்கள் ஜெபம் பண்ணும் போது எவைகளை கேட்டுக் கொள்வீர்களோ அவைகளை பெற்றுக் கொள்ளுவோம் என்றும் விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாயிருக்கும். மத. 11:24 ஆசிர்வாதத்தை நாம் அடைவதார்க்கு முன்னும் அதைப் பெற்றுக் கொள்ளுகிறோம் என்று நம்புகிற விசுவாசமே சுத்த விசுவாசமாய் விளங்குகிறது. வாக்கு தத்தம் பண்ணப் பட்ட ஆசிர்வாதத்தை அடைந்து அனுபவிக்கிற போது விசுவாசம் விழுங்கப் பட்டு போகிறது. அனால் அனேகர் பரிசுத்த ஆவியை அதிகமாய் அடைகிற போதே தங்களுக்கு அதிக விசுவாசம் கிடைக்கிறதென்றும் ஆவியின் வல்லமைய உணராவிடில் விசுவாசம் இல்லை என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் விசுவாசத்தின் மூலமாய் வரும் ஆசிர்வாதத்தை விசுவாசத்துடன் குழப்புகிறார்கள். அவையின்றி வெறுமையாய் இருக்கும் சமயத்தில் தான் விசுவாசம் விளங்க வேண்டும். அந்தக்கார இருள் நம் மந்தை மூடுவதை காணும் போது தான் உயிருள்ள விசுவாசம் இருளை ஊடுருவி சென்று மேகங்களை சிதறடிக்க வேண்டும். LST 88.2
உண்மையான விசுவாசம் தேவனுடைய வசனத்தில் அடங்கியுள்ள வாக்கு தத்தங்களை சார்ந்திருக்கிறது. அவ்வசனத்திற்கு கீழ்படிந்து நடக்கிறவர்கள் மாத்திரம் அதன் மகிமையான வாக்கு தத்தங்களை தங்களுடயதெனசொந்தம் பாராட்டக் கூடும் “நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக் கொள்ளவது எதுவோ அது உங்களுக்கு செய்யப் படும் யோவா 15:7 “அவருடைய கற்பனைகளை நாம் கைகொண்டு அவறுக்கு முன்பாக பிரியமானவைகளை செய்கிற படியினால் நாம் வேண்டிக் கொள்கிறது எதுவோ அதை அவராலே பெற்றுக் கொள்கிறோம்.” யோவா 3:22 நாம் அந்தரங்க ஜெபத்தில் அதிகமாய் தரித்திருக்க வேண்டும். கிறிஸ்து திராட்சை செடி நாமக் கொடிகள் . நாம் வளர்து விருத்தி அடைய வேண்டுமானால் உயிருள்ள திராட்சை செடியில் இருந்து நாம் பிரிந்திருக்கும் போது நமக்கு பலமில்லை. இஸ்ரவேலில் ஏன் அதிகமான விசுவாசமும் வல்லமையும் இல்லை என்று நான் தூதனை கேட்டேன். அவன் சொன்னதாவது “நீங்கள் கர்த்தரின் புயத்தை வெகு சீக்கிரம் விட்டு விடுகிறீர்கள். உங்கள் விண்ணப்பங்கள் சிங்காதனம் நேர்ருங்கும் மட்டும் பலத்த விசுவாசத்துடன் பிடித்துக் கொள்ளுங்கள். வாக்கு தத்தங்களை உறுதியானவைகள். நீங்கள் கேட்டுக் கொள்ளுகிரவைகளை பெற்றுக் கொள்ளுவோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவை உங்களுக்கு உண்டாகும்” பிறகு எனக்கு எலியாவை பிடித்துக் காட்டினான்.அவன் நம்மை போல் பாலுள்ள மனுஷனாய் இருந்தும் கருத்தாய் ஜெபித்தான்.அவன் விசுவாசம் பரீட்சைக்கு நின்றது. அவன் கர்த்தரை நோக்கி ஏழு தரம் ஜெபம் பண்ணினான். கடைசுயாக மேகம் காணப்பட்டது. நாம் உறுதியான வாக்கு தத்தங்களை சந்தேகித்து நமது விசுவாச குறைவினால் இரட்சகரை விசனபடுதினதாக நான் கண்டேன்/ “உன்னை சுற்றி ஆயுதம் தரித்துக் கொள். எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாச கேடகத்தை எடுத்துக் கொள்.ஏனெனில் அது பொல்லாங்கன் எய்யும் அக்கினி அச்த்ரங்களில் நின்று இருதயத்தையும் ஜீவனையும் காக்கும் . திடஅன்று நிற்போரின் கண்கள் இயேசுவை விட்டு தங்களையே நோக்கிக் கொண் திருக்கவும், அவர்கள் இயேசுவின் மதிப்பையும் அவருடைய அன்பையும் அவருடைய புண்ணியங்களையும் அவருடைய பெரிய இரக்கத்தையும் பற்றிச் சிந்திப்பதை விட்டு விட்டு தங்கள் சொந்த அபாதிரதையே பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கவும் சத்துரு செய்யக் கூடுமானால் அவன் அவர்கள் விசுவாசக் கேடகத்தை எடுத்துக் கொண்டு போவான். அவன் நோக்கம் நிறைவேறும். அவர்கள் அவனுடைய கொடிய சோதனைகளுக்கு உள்ளாவார்கள். ஆகையினால் பலவீனர் இயேசுவை நோக்கிக் கொண்டு அவரில் விசுவாசமுள்ளவர்கலாயிருக்க வேண்டும் அப்போது அவர்கள் விசுவாசத்தை விளங்கச் செய்கிறார்கள். ” LST 89.1
* * * * *