Go to full page →

வரப்போகும் மகிமையின் தரிசனம் LST 104

இக்கடைசி நாட்களில் தேவ கரத்தால் வரையப்பட்ட காட்சிகளாகிய இனி வரும் மகிமையின் தரிசன்கள் வெளிபடுத்தப்பட்டிருகின்றன. இவைகள் அவருடைய சபைக்கு மிக்க அருமையாயிருக்கவேண்டும். தேவ குமாரன் காட்டிக் கொடுக்கபட்டபோதும் நியாயம் விசாரிக்கப்பட்டபோதும் அவரைத் தாங்கினதெது? அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தி யடைந்தார். நித்தியத்தின் விசாலத்தைப் பற்றிய ஓர் காட்சியை அவர் கண்டதுமன்றி தமது நிந்தையின் மூலமாய் மன்னிப்பையும் நித்திய ஜீவனையும் பெற்றுக்கொள்கிறவர்கள் அடையும் சந்தோசத்தையும் அவர் கண்டார். அவர்களுடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு அவர்களுடைய அகிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், அவர்களுக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறார்கள். மீட்கப்பட்டோரின் ஆர்ப்பரிப்பை அவர் கேட்டார். இரட்சிக்கபட்டவர்கள் மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவரின் பாட்டையும் பாடுகிறதை அவர் கேட்டார். LST 104.2

நாம் இனி நடப்பதையும் பரலோக பாக்கியத்தையும் பற்றிய ஓர் காட்சியுடையவர்களாயிருக்க வேண்டும். நித்தியத்தின் வாசற் படியிலே நின்று, கிறிஸ்துவினிமித்தம் பாடுபடுவதை ஓர் சிலாக்கியமாகவும் பாக்கியமாகவும் எண்ணி, இச்சீவியத்தில் அவருடன் உடன் ஊழியர்களாயிருக்கிறவர்களுக்கு அளிக்கப்படுகிற கிருபையுள்ள வாழ்த்துதலைக் கேள். அவர்கள் தூதர்களுடன் சேர்ந்து தங்கள் கிரீடங்களை மீட்பரின் பாதத்தண்டை வைத்து, ” அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவர்யத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரமாயிருக்கிறார். சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக” என்று சத்தமிட்டார்கள். வெளி. 5: 12,13. LST 104.3

அங்கே மீட்கப்பட்டோர் தங்களை மேலே உயர்த்தப்பட்ட இரட்சகரண்டை வழி நடத்தினவர்களை வாழ்த்துகிறார்கள். மானிடர் தேவனுடைய ஜீவனுக்குச் சரியான ஜீவனையடையும்படிக்கு மரித்தவரை அவர்கள் சேர்ந்து போற்றுங்கள். போர் முடிந்தது. சகல உபத்திரவமும் போரும் முடிவாயின. “கொலையுண்ணப் பட்டு வெற்றி வீரராகத் திரும்பவும் உயிரோடிருக்கிற ஆட்டுக் குட்டியானவர் பாத்திரராயிருக்கிறார், பாத்திரராயிருக்கிறார்” என்னும் இசையை யாவரும் இன்பமாய்ப் பாடுகிறார்கள்.” LST 105.1

“நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக் கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள் வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து சிங்காசனதிற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.” வெளி. 7:9,10 LST 105.2

“இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். அப்படியானால், இவர்கள் தேவனுடைய சிங்காசனதிற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரை சேவிக்கிரார்கள்; சிங்காசனதின் மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாக மடைவதுமில்லை. சிங்காசனதின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவதண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்.” இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை அலறுதலுமில்லை: வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்து போயின.” வெளி.7,14-17; 21:4. LST 105.3

* * * * *