Go to full page →

வீட்டின் ஊழியம் LST 145

மனுக்குலம் சீர்ப்படுத்துகிறதும் ஈடேறுகிறதும் வீட்டில் ஆரம்பிக்கிறது. பெற்றோரைப் போலவே சாலவும் பிள்ளைகள் இருப்பார்கள். பெற்றோரின் தேக நிலைமைகளும், அவர்களின் மனோவிர்த்திகளும் பசித் தீபனங்களும், அவர்களுடைய சன்மார்க்க நடைகளும் ஓர் பட்சம் ஏற்றமாகவோ அல்லது குறைவாகவோ அவர்களுடையகளிடத்தில் திரும்பவும் உற்பத்தியாக்கப் படுகின்றன.பிள்ளை பிறப்பதற்கு முன்னுங் கூட அது ஜெயம் பெற தீமையோடெ திர்த்துப் போராட த்தக்க ஆயத்தங்கள் படவேண்டும். LST 145.3

பெற்றோர் தங்கள் பிள்ளைகள் சுகமாயும் பாக்கியமாயும் வாழ்வதற்கான அஸ்திபாரம் போடலாம். சோதனையோடெதிர்த்துநிற்கத்தக்க உத்தம பாத்திரங்களாயும், வாழ்கையின் பிரச்சினைகளோடு ஜெயம் பெறப் போராடுவதற்கேற்ற தைரியமும் பெலமுமுடையவர்களாயும் அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே அனுப்பலாம். தேவனுக்கு மகிமையாயும் உலகத்திற்கு ஆசீர்வாதமாயும் ஜீவிப்பதற்கான நோக்கத்தை அவர்கள் அவர்க ளிடத்தில் தூண்டிவிடுவதோடு அதற்குரிய சக்தியையும் அவர்கள் பெலப்படுத்தலாம். சந்தோஷ சஞ்சலங்களின் வழியாய் அவர்கள் மகிமையான உன்னதங்களுக்கு நேரே செல்லும் பொருட்டு அவர்கள் கால்களுக்கு நேரான பாதைகளை அவர்கள் உண்டாக்கலாம். LST 145.4

பிள்ளையின் வாழ்வு தாயின் பழக்க வழக்கங்களினால் பாதிக்கப்படும் அவளுடைய பகித் தீபனங்கள், ஆசை விருப்பங்களெல்லாம் சத்திய ஒழுங்கின்படி ட்டுப்படுத்தப்படவேண்டும். தேவன் தனக்குஓர் குழைந்தையைக் கொடுத்ததில் அவள் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுகிற பட்சத்தில் அவள் வெறுக்கவேண்டியதும் விரோதித்துச் செய்ய வேண்டியதுமான சில காரியங்களுண்டு, தாயானவள் நீதி நெறிகளைத் தவறாமல் கைக்கொண்டு நடந்தால், அவள் இச்சையடக்கமும் சுய வெறுப்புமுள்ளவளாயிருந்தால், அவள் இவ்வருமையான குண லட்சணங்களை தன் பிள்ளைக்குக் கொடுக்கலாம். இக்காலத்தில் அவள் ஆகாரத்திலும் மற்றேந்த வகையிலும் தேக பெலத்தையோ அல்லது மனேபேலத்தையோ குறைக்கக் கூடியதெல்லாவற்றையும் நீக்கிப் போட வேண்டும். தேவ கட்டளையின்படிஅவள் தன்ன்டக்கத்தை அப்பியாகிக்கும்படிக்கான மிகுந்த பக்தி விநய கடமைக்குட்பட்டிருக்கிறாள். LST 146.1