Go to full page →

விலையுயர்ந்த காணிக்கை LST 148

நாம் நமது முர்கோப ஆவியையும் வார்தைகளையும் அடக்கி ஆள வேண்டும்; அதினால் நாம் பெரிய வெற்றிகள் அடைவோம். நாம் நமது வார்த்தைகளையும் முற்கோபத்தையும் அடக்காவிட்டால் நாம் சாத்தானின் அடிமைகளாவோம். நாம் அவனுக்குக் கீழ்பட்டிருக்கிறோம். அவன் நம்மைச் சிறைகளாக்கிக் கொள்ளுகிறான். LST 148.4

சகல பிதற்றுதலும் , வெறுப்பும், பதற்றமும், எரிச்சலுமுள்ள வார்த்தைகளும் சாத்தானுடைய மகத்துவத்துக்குப் படைக்கப்படுகிற காணிக்கையாயிருக்கின்றன. அது விலையேறப் பெற்ற ஓர் காணிக்கை நாம் தேவனுக்குச் செலுத்தும் எந்தப் பலியையும் விடா அது அதிக விலையேறப்பெற்றது; ஏனெனில் அது குடும்பங்களின் சமாதானத்தையும் சந்தோஷத்தையு மாத்திரமல்ல, சுகத்தையும் கெடுத்துப்போடுகிறது. முடிவிலே நித்திய ஜீவ சந்தோஷத்தையும் இழப்பதற்கான முகாந்தரமாகிறது. LST 149.1

நமது சொந்த நன்மைக்காகவே தேவ வார்த்தை நம்மைக் கட்டுப்படுத்துகிறது, அது நமது விருப்பத்தைச் செம்மைப்படுத்துகிறது, நமது புத்தியையும் பரிசுத்தமாக்குகிறது, மனதுக்குச் சமாதானத்தை அளிக்கிறது, இறுதியில் நித்திய ஜீவனையும் கொண்டுவருகிறது. பரிசுத்தமான இக்கட்டுப்பாட்டின் கீழ் நாம் கிருபையிலும் மனத் தாழ்மையிலும் விருத்தியடைவதுமன்றி நீதியைப் பேசுவதற்கு நமக்கு இலகுவுண்டாகிறது. இயற்கையான இச்சையின் சுபாவம் கீழ்ப்படுத்தப்படும். நம்மில் வாசமாயிருக்கும் இரட்சகர் ஒவ்வொரு நேரமும் நம்மை பெலப்படுத்துவார். பணிவிடை செய்யும் தூதர்கள் நமது வாசஸ்தலங்களில் தரித்திருந்து நாம் செய்யும் தெய்வீக ஜீவியத்தைப் பற்றிய முன்னேற்றமான செய்திகளைச் சந்தோஷத்துடன் பரலோகம் கொண்டு போகிறார்கள். கணக்கெடுக்கும் தூதன் சந்தோஷகரமான நல்ல கணக்கெடுப்பான்.---1 T 310. LST 149.2

பூமியின் குடும்பங்கள் பரலோகக் குடும்பத்திற் கடையாளமாயிருக்க வேண்டு மென்பது தேவ நோக்கம். தேவ ஏற்பாட்டுக்கிணங்க ஸ்தாபிக்கப்பட்டு நடத்தப்படும் கிறிஸ்தவ வீடுகள், கிறிஸ்தவ குணம் கட்டப்படுவதற்கும் அவருடைய வேலை முன்னேற்றமடைவதற்கும் மிக்க வல்லமையான வழிகளாக கையாளப்படுகின்றன.---6 T 430. LST 149.3