Go to full page →

தீர்மானமெடுக்கவேண்டிய நேரம்! , ஏப்ரல் 10 Mar 199

“… யாரைச் சேவிப்பீரக்ள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள் ….” - யோசுவா 24:15 Mar 199.1

இந்த உலகம் மதிகெட்டுப்பொயிருக்கிறது. ஆண்களும் பெண்களும் பித்துப்பிடித்தவர்களைப்போன்று, நித்திய அழிவை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள். அனைத்து சிற்றின்பத் தோய்வுகளும் பரவிக்கிடக்கின்றன. மனிதர் இழிந்த பாவத்தினால் வசீகரிக்கப்பட்டவர்களாக மாறியிருக்கின்றனர். அவர்கள் எச்சரிப்புகளுக்கும் அல்லது வேண்டுகோள்களுக்கும் செவி்சாய்க்கமாட்டார்கள். Mar 199.2

“யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்” (யோசுவா 24:15) என்று பூமியின் குடிகளை நோக்கி ஆண்டவர் கேட்கிறார்; இப்பொழுது, அனைவரும் தங்களுக்கான் நித்தியத்தின் முடிவைத் தீர்மானித்துக்கொண்டிருக்கிறார்கள். மானிடருக்குக் கொடுக்கப்பட்ட தவணையின் காலம் முடிவுபெற இருக்கின்றது. அவருடைய வருகையின் நாள் சமீபித்திருக்கிறது. பயபக்தியான இந்தக் காலத்தைக்குறித்து, தெளிவாக அறிந்து கொள்ளத்தக்கதாக, மனிதரை விழிப்பூட்டவேண்டியது அவசியம். இந்த பூமியின் வரலாறு முடிவடைவதற்கு 5 ஆண்டுகளுக்கோ அல்லது 10 ஆண்டுகளுக்கோ அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்னரே தேவன் எவருக்கும் ஒரு தூதைல் கொடுக்கிறதில்லை. அவருடைய வருகையையோ அல்லது ஆயத்தத்தையோ தாமதப்படுத்துவதற்கான எந்த ஒரு சாக்குப்போக்கையும், பூமியில் வாழ்கின்ற எந்த நபருக்கும் கொடுப்பதில்லை.. “என் எஜமான் வர நாட்செல்லும்” என்று உண்மையற்ற ஒரு ஊழியக்காரன் சொன்னதுபோல, யாரும் சொல்வதை அவர் விரும்புவதில்லை. இக்காரியமானது அந்த மகா நாளிற்காக நாம் ஆயத்தப்படுவதற்கு நமக்குக் கொடுக்கப்பட்ட சிறப்புரிமைகளையும் சந்தர்ப்பங்களையும் துணிச்சலான முறையில் அலட்சியஞ்செய்வதற்கு வழிநடத்துகிறது. தேவனுடைய ஊழியக்காரன் என்று உரிமைகோரிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், வேலைசெய்கின்ற ஒவ்வொரு நாளிலும், இதுவே கடைசி நாள் என்று எண்ணுவதைப்போன்று, அவருடைய ஊழியத்தைச் செய்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார். Mar 199.3

வானத்தின் மேகங்களின்மீது வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வரவிருக்கின்ற மனுஷகுமாரனுடைய துரிதவருகையைக் குறித்துப் பேசுங்கள்; அந்த நாளைத் தள்ளிப்போடாதீர்கள்… Mar 200.1

ஒவ்வொருவரும் சுமந்துசெல்லவேண்டிய ஒரு மாபெரும் பாரம் இங்கு இருக்கிறது. என்னுடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டிருக்கின்றனவா? பாவப்பாரத்தைச் சுமக்கிறவராகிய கிறிஸ்து என்னுடைய பாவத்தை எடுத்துப்போட்டுவிட்டாரா? இயேசு கிறிஸ்துவின் நீதியினாலே தூய்மையாக்கப்பட்ட ஒரு சுத்தமான இதயம் எனக்கிருக்கிறதா? கிறிஸ்துவிலே ஒரு அடைக்கலத்தைத் தேடிக்கொண்டிராத எந்த ஆத்துமாவிற்கும் ஐயோ! ஊழியத்தினின்று எந்த ஆத்துமாவாவது குறையான விழிப்போடு இருக்கத்தக்கதாகச்செய்து, எந்தவகையிலாவது மனதை விலகச் செய்கிற அனைவருக்கும் ஐயோ!.... Mar 200.2

இந்த மாபெரும் வேலையினின்று மனமானது விலகிச் செல்லும்படி அனுமதிக்கக்கூடாது. இதைக்குறித்த காரியத்தில் தேவனுடைய பார்வையில் தனிப்பட்டவிதத்தில் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பது முக்கியமான காரியமாகும். யுகங்களின் கன்மலைமீது நமது பாதங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றனவா? ஒரே அடைக்கலமாகிய அவரில் நம்மை நாம் மறைத்துவைத்துக் கொண்டிருக்கிறோமா? இரக்கமற்ற சீற்றத்தோடு புயல்வந்து கொண்டிருக்கிறது. அதைச் சந்திக்க நாம் ஆயத்தமாயிருக்கிறோமா? கிறிஸ்து பிதாவுடன் ஒன்றாக இருக்கிறதுபோல், நாம் கிறிஸ்துவோடு ஒன்றாயிருக்கிறோமா? நாம் தேவனுடைய சுதந்திரவாளிகளும் கிறிஸ்துவிற்கு உடன் சுந்தரவாளிகளுமாக இருக்கிறோமா?.... Mar 200.3

கிறிஸ்துவின் பண்பு நலனே நம்முடைய பண்பு நலனாக இருக்கவேண்டும். நம்ம்முடைய இதயங்கள் புதுப்பிக்கப்படுகிறதினாலே நாம் மாறுதலையடைய வேண்டும். இங்குதான் நம்முடைய ஒரே பாதுகாப்பு இருக்கிறது. ஒரு உயிர்த்துடிப்புள்ள கிறிஸ்துவனை எதுவும் தேவனிடமிருந்து பிரிக்கமுடியாது.⋆ Mar 200.4

வாக்குத்தத்த வசனம்: Mar 200.5

“உங்கள் தேவனாகிய கர்த்தருக்கே பயந்து நடப்பீர்களாக; அப்பொழுது அவர் உங்கள் எல்லாச் சத்துருக்களின் கைக்கும் உங்களைத் தப்புவிப்பார்….” - 2 இராஜாக்கள் 17:39. Mar 200.6