Go to full page →

ஏன் இத்தனை சோம்பேறிகள்? , ஏப்ரல் 25 Mar 229

“பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என்றார். — அப்போஸ்தலர் 1:8. Mar 229.1

முதல் சீடர்களின் குழுவிற்குக் கொடுக்கப்பட்ட அந்தப் பொறுப்பிலே, ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த விசுவாசிகள் பங்கு பெற்றிருக்கிறார்கள். சுவிசேஷத்தைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் உலகிற்கு வழங்குவதற்காக ஒரு பரிசுத்த சத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. தேவனுடைய உத்தமமான மக்கள் எப்பொழுதுமே வலிமைவாய்ந்த, உயிர்த்துடிப்போடுகூடிய இறைப்பணியாளராக இருந்திருக்கிறார்கள். அவரது நாமத்தின் மேன்மைக்காக, வளவாய்ப்புகளை அர்பணித்து, அவரது சேவைக்காக அவர்களது தாலந்துகளை ஞானமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். Mar 229.2

தேவனுடைய சபையின் அங்கத்தினர்கள் நற்கிரியைகளைக் செய்வதில் பற்றார்வமுடையவர்களாக , உலகப்பிரகாரமான பேரார்வங்களினின்று தங்களை விலக்கிக்கொண்டு, நன்மைசெய்கிறவராகச் சுற்றித்திரிந்த அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். இதயங்களில் இரக்கமும் பரிவும் நிறைந்தவர்களாக, யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ, அவர்களுக்காக ஊழியஞ் செய்து, மீட்பரின் அன்பைப்பற்றிய அறிவை பாவிக்கு எடுத்துச் செல்லவேண்டும். இத்தகைய பணிக்கு கடின உழைப்போடுகூடிய முயற்சி தேவைப்படுகிறது; ஏனெனில் , அது பெரும் வளம்சார்ந்த ஒரு வெகுமதியைக் கொண்டுவரும். நோக்கத்தில் நேர்மையோடு, இத்தகைய ஊழியத்தில் ஈடுபடுகிறவர்கள் மீட்பருக்காக ஆத்தும ஆதாயஞ்செய்வதைக் காண்பார்கள்… Mar 229.3

“ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக” — வெளி 22:17 இந்த அழைப்பைக் கொடுக்கக் கூடிய பொறுப்பு சபைமுழுவதையும் சார்ந்திருக்கிறது. இந்த அழைப்பைக்கேட்ட ஒவ்வொருவரும் மலையினின்றும், பள்ளத்தாக்கினின்றும், “வாருஙக்ள்” என்று கூறி , இந்தத் தூதை எதிரொலிக்கச் செய்யவேண்டும்… Mar 229.4

இந்த இரட்சிப்பின் செய்தியைக்கேட்ட நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்கள் ஏதாவது ஒரு துறையில் சுறுசுறுப்பான சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, சந்தை வெளியிலே இன்னும் வீண் அலுவற்காரராக நின்றுகொண்டிருக்கிறார்கள். இவர்களை நோக்கி: ” நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன” என்று கிறிஸ்து வினவுகிறார். மேலும் அவர்களை நோக்கி : நீங்களும் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்” என்று கூறுகிறார் — மத் 20:6,7. ஏன் அநேகர் அழைப்பிற்குச் செவிசாய்க்கிறதில்லை. தாங்கள் பிரசங்க மேடைக்கு முன்பாக நிற்காததினால், தாங்கள் அந்தக் கடமையினின்று விடுவிக்கப்பட்டிருக்கிறோம் என்று தங்களைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பது என்பதுதான் காரணமா? தங்களை அர்ப்பணித்துக்கொண்ட ஆயிரக்கணக்கான சபை அங்கத்தினர்களால் பிரசங்க மேடைக்கு வெளியே செய்யப்பட வேண்டியது மாபெரும் ஊழியம் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். Mar 230.1

ஒவ்வொருவரும் அவரவருடைய திறமைக்குத்தக்கதாக ஊழியஞ்செய்வதற்கு, சேவைசெய்ய வேண்டுமென்ற ஆவலானது முழுசபையையும் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தேவன் நீண்ட நாட்களாகக் காத்துக்கொண்டிருந்துவிட்டார். சுவிசேஷக் கட்டளையின் நிறைவேறுதலாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தேவையிலிருக்கும் பணித்தளங்களிலே தேவனுடைய சபையின் அங்கத்தினர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஊழியத்தைச் செய்கிறபோது., இந்த உலகம் எச்சரிகப்பட்டுவிடும். ஆண்டவராக, இயேசு வல்லமையோடும், மகா மகிமையோடும் இந்த பூமிக்குத் திரும்ப வருவார். ” இராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குள்ள சகல ஜாதிகளுக்கும், சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”⋆ Mar 230.2

வாக்குத்தத்த வசனம்: Mar 230.3

“நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.” - 1 கொரிந்தியர் 15:57. Mar 230.4