Go to full page →

தேவனைப்பற்றிய பொய்யான கோட்பாடுகள்!, மே 5 Mar 249

“அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்து.” - ரோமர் 1:21. Mar 249.1

“இயற்கை அனைத்திலும் ஊடுருவி நிறைந்திருக்கின்ற ஒரு உள்ளியல்பே தேவன்” என்ற கொள்கையானது, சாத்தானின் மிகப் பயங்கரமான உபாய தந்திரங்களுக்குள் ஒன்றாகும். அது தேவனை தவறாகச் சுட்டிக்காட்டுகிறது; எனவே அது அவரது மகா மேன்மைக்கும், இராஜரீகத்திற்கும் ஒரு அவமதிப்பாகும். Mar 249.2

இந்த அண்டசராசரம் முழுவதுமே, “அப்படியே தேவன்” என்று கொள்ளப்படவேண்டும் என்ற அது சம்பந்தப்பட்ட அனைத்துக் கொள்கைகளும், தேவனுடைய வார்த்தையின் ஆதரவைப் பெறவில்லை. அவரது சத்தியத்தின் வெளிச்சமானது, இந்தக் கொள்கைகளையெல்லாம், ஆத்துமாவை அழிக்கின்ற செயல்துணைகள் என்று காட்டுகிறது. இருள்தான் அந்தக் கொள்கைகளின் செயற்களம். சிற்றின்பமே அவைகளின் செயல்களுமாகும்; இவைகள் இயல்பான இருதயத்தைத் திருப்திசெய்கின்றன. விருப்பப்படிக் காரியங்களைச்செய்ய முழு உரிமையையும் கொடுக்கின்றன. தேவனைவிட்டு விலகிச்செல்வதே, இந்தக் கொள்கைகளை எற்றுக்கொள்வதினால் ஏற்படும் விளைவாகும்.. Mar 249.3

மனிதரின் இதயத்தைப் பற்றிப்பிடித்திருக்கும் தீமையை உடைத்தெறியத்தக்க வல்லமை ஒன்றிருக்கிறது. அது இயேசு கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய வல்லமையாகும். சிலுவையில் அறையப்பட்ட அந்த ஒருவரது இரத்தத்தின்மூலமே, பாவத்தினின்று சுத்திகரிப்பு ஏற்படமுடியும். நமது விழுந்துபோன தன்மையின் போக்குகளை எதிர்த்து அடக்கியாள, அவரது கிருபை மாத்திரமே நமக்குப் பெலனளிக்கமுடியும் . தேவனுடைய இயல்பைப்பற்றி, ஆவிமார்க்கக் கொள்கைகள், இந்த வல்லமையின் பெலனை மறுதலிக்கின்றன. அனைத்து இயற்கையையும் ஊடுருவிச் செல்லும் ஒரு உள்ளியல்பாக தேவன் இருப்பாரானால், அவர் எல்லா மனிதரிலும் வாசஞ்செய்கிறார் என்று கொள்ளவேண்டும். பரிசுத்தத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, மனிதன் தன்னிலுள்ள வல்லமையை முன்னேற்றுவித்தால்மட்டும் போதும். இந்தக் கோட்பாடுகள் அதின் தர்க்கரீதியான முடிவின்படி பின்பற்றப்படும் பொழுது, கிறிஸ்தவ நடைமுறை ஆட்சியை முற்றிலுமாக அடித்துக் கொண்டுபோய்விடுகின்றது. பாவநிவாரணஞ் செய்யப்படவேண்டும் என்ற தேவையையே இல்லாமல் ஆக்கிவிடுகின்றது. மனிதன் தன்னைத்தானே இரட்சிக்ககூடியவன் என்பதாகக் காட்டுகிறது. தேவனைப்பற்றிய இந்தக் கொள்கைகள், அவரது வார்த்தையை பயனற்றதாக ஆக்கிவிடுகிறது. இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்பவர்கள் முழு வேதாகமத்தையும் ஒரு கட்டுக்கதையென நோக்கிப்பார்க்கக்கூடிய நிலைக்கு இறுதியிலே வழிநடத்தப்படக் கூடிய பேராபத்திலிருக்கிறார்கள். அவர்கள் தீயொழுக்கத்தைவிட, ஒழுக்கம் மேலானது என்று மதிப்பீடு செய்யலாம். தேவன் அவரது இறையாண்மை நிலையினின்றி மேற்கூறியவாறு அகற்றப்பட்டிருக்கிறதினால், மானிட வல்லமையின்மீதி அவர்கள் சார்ந்திருக் கிறார்கள். தேவன் இல்லாவிடில், இந்த மானிட வல்லமை மதிப்பற்றுப்போகிறது. உதவியற்ற மானிடச் சித்தத்திற்கு தீமையை எதிர்த்து மேற்கொள்ளத்தக்கதான அந்த மெய்யான வல்லமை கிடையாது. ஆத்துமாவின் அரண்கள் நொறுக்கப்பட்டுத் தள்ளப் பட்டிருக்கின்றன. பாவத்திற்கு எதிரான தடைவேலி மனிதனுக்கு இல்லை. தேவனுடைய வார்த்தை, அவரது ஆவியானவரால் கிடைக்கின்ற கட்டுப்பாடுகள் ஒருமுறை ஒதுக்கித்தள்ளப்ப்படும்போழுது, எந்த ஆழத்திற்கு ஒருவர் அமிழ்ந்துபோய்விடுவார் என்பதையும் நம்மால் அறிய முடிகிறது. Mar 249.4

இந்த ஆவிமார்க்கக் கோட்பாடுகளைத் தொடர்ந்து பின்பற்றிக்கொண்டிருப்பவர்கள், அவர்களது கிறிஸ்தவ அனுபவத்தை நிச்சயமாகவே இழந்துவிடுவார்கள். தேவனோடு அவர்கள் கொண்டுள்ள தொடர்பை அறுத்துப்போட்டு, நித்திய வாழ்வையும் இழந்துவிடுகிறார்கள்.⋆ Mar 250.1

வாக்குத்தத்த வசனம்: Mar 250.2

“நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதிக்கப்பட்டிருக்கிறது,” - சங்கீதம் 97:11. Mar 250.3