Go to full page →

நிர்வாண நிலையின்மீது இச்சையுடன்கூடிய நாட்டம்!, மே 15 Mar 269

“...ஒரு ஸ்த்ரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.” - மாத்தேயு 5:28. Mar 269.1

அநேக வாலிபர்கள், புத்தகம் வாசிக்க ஆர்வதோடிருக் கின்றனர்.தங்கள் கையில் கிடைக்கும் அனைத்தையும் வாசிக் கிறார்கள். பரபரப்பூட்டும் காதல் கதைகள், தூய்மையற்ற படங்கள் ஆகியவைகளுக்குக் கேடுசெய்யும் ஒரு செல்வாக்கு இருக்கிறது. அநேகர் புதினங்களை (நாவல்களை) ஆர்வத்தோடு கவனமாக படிக்கிறார்கள். அதன் விளைவாக, அவர்களது கேடடைகிறது. நிர்வாண நிலையில் காணப்படும் பெண்களின் புகைப்படங்கள் விற்பனைக்காக கார்களிலே அடிக்கடி எடுத்துச் சென்று பரப்பப்படுகிறது. கலைத்திறனோடு செதுக்கும் சிற்ப வேளைகளிலே ஈடுபட்டிருப்பவர்கள் இருக்கின்ற இடங்களிலுள்ள சுவர்களிலே இத்தகைய அருவருப்பான படங்கள் தொங்கவிடப் பட்டிருகின்றன. எங்கணும் ஊழல் நிறைந்த - கேடுகள் நிரம்பி வழிகின்ற காலமிது.நோக்கிப்பார்பதாலும், வாசிப்பதாலும் கண்களின் இச்சைகளும் கேடான சிற்றின்ப இசைகளும் வெளிப் படுகின்றது. கீழ்த்தரமான - ஒழுக்கக்கேடான - இச்சைகளைத் தூண்டிவிடுகின்ற - காட்சிகளை ஆழ்ந்து சிந்திப்பதினால், உள்ளம் மகிழ்ச்சியடைகிறது. கேடடைந்த கற்பனாசக்தியின்மூலமாகக் காண்கின்ற இழிந்த நிலையிலுள்ள உருவச்சிலைகள் ஒழுக்கத்தைக் கெடுத்து, வஞ்சிக்கப்பட்டு மயங்கிகிடக்கின்ற மனிதரை, அடங்காத சிற்றின்ப ஆசைகளுக்கு, கட்டுக்கடங்காமல் இணங்குவதற்கு ஆயதமாக்குகிறது. அதன்பின்னர் தொடருகின்ற பாவங்களும் கடுமையான குற்றங்களும் தேவசாயலில் படைக்கப்பட்ட மனிதனை இறுதியில் அழிவிலே அமிழ்ந்துபோகத்தக்கதாக, மிருகங்களோடு வைத்து எண்ணப்படும் நிலைமைக்கு, இழுத்துக்கொண்டுபோய் விட்டுவிடுகிறது. தூய்மையற்ற சிந்தனைகளை முன்வைக்கின்ற காரியங்களை வாசிப்பதையும் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். ஒழுக்கம் மற்றும் அறிவுசார்ந்த வல்லமைகளை வளர்த்து உருவாக்க வேண்டும். இத்தகைய மென்மையான சக்திகள், கதை புத்தகங் களை மிதமிஞ்சி வாசிப்பதினால் தளர்ச்சியடைந்து, தகாத வழியில் பயன்படுத்தப்படாதிருக்கட்டும்... Mar 269.2

தேவனுடைய வார்த்தையை கவனமாகப் படிப்பதை வாலிபர்கள் துய்த்து மகிழாவிடில், அவர்கள் ஒரு ஆரோக்கியமான நயத்தோடு கூடிய மனதையும் சரியான மார்க்கசம்பந்தமான கொள்கைகளையும் உடையவர்கலாயிருப்பது கூடாத காரியமாகும். வேதாகமப் புத்தகம் ஆர்வமூட்டக்கூடிய வரலாற்றுப் பகுதியை தன்னகத்தே வைத்துள்ளது. கிறிஸ்துவின்மூலமாக மீட்பின் பாதையைச் சுட்டிக் காட்டுகிறது. உயர்வான -மேன்மையான-வாழ்விற்கு அவர்களது வழிகாட்டியாக இருக்கின்றது. அவர்களது கற்பனைத் திறனானது, போலியான தன்மையுள்ள, பரபரப்பூட்டும் கதைகளால் தவறான, நிலையை அடைந்திராவிட்டால், தாங்கள் ஆராய்ந்துபடித்து புத்தகங்களிலே இதுவே மிகவும் ஆர்வமூட்டக்கூடிய புத்தகமென்று அவர்கள் அனைவரும் அழுத்தந்திருத்தமாகக் கூறுவார்கள். இரண்டாம் வருகையிலே உங்களது சாவிர்கேதுவான சரீரத்தை மாற்றவும், தமது மிகவும் மேன்மையான சரீரத்திற்கேற்றபடி அவைகளை வடிவமைக்கவும் வேண்டுமென்று ஆண்டவரை நோக்கிப்பார்த்துக்கொண்டிருக்கின்ற நீங்கள், மிகவும் உயர்ந்த செயற்பாடுடையவர்களாக வெளிவர வேண்டும். இதுவரை நீங்கள் செய்ததைவிட, மிக உயர்ந்த நோக்குநிலையினின்று நீங்கள் உழைக்க வேண்டும். இல்லாவிடில், சாவாமை என்னும் அந்த இறுதித் தொடுதலைப் பெற்றுக்கொள்ளும் கூட்டத்தின் எண்ணிக்கையில் உள்ளவராக நீங்கள் இருக்கமுடியாது.⋆ Mar 270.1

வாக்குத்தத்த வசனம்: Mar 270.2

“கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.” - சங்கீதம் 121:7. Mar 270.3