Go to full page →

எலியாவைப்பற்றிய தீர்க்கதரிசனம்!, ஜனவரி 14 Mar 27

“இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்... அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடதிற்கும் திருப்புவான். “ - மல்கியா 4:5,6. Mar 27.1

கிறிஸ்துவின் முதலாம் வருகைக்காக, வழியை ஆயத்தம் பண்ணத்தக்கதாக, எலியாவின் ஆவியோடு வந்த யோவான் ஸ்நாகனைப்போல், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக வழியை ஆயத்தஞ்செய்பவர்கள், உத்தமமான எலியாவின் பெயரால் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். Mar 27.2

யோவான் ஸ்நாகனின் ஊழியமும் கடைசி நாட்களில் செய்பவர்களது ஊழியமும் உணர்வற்ற நிலையிலிருக்கும் மக்களை தட்டி எழுப்பத்தக்கதாக இருக்கும்; இவர்கள் எலியாவின் ஆவியும் வல்லமையும் உடையவர்களாக புறப்பட்டுச்செல்வார்கள். அநேக வகைகளில் இந்த இரு கூட்டத்தாரும் ஒன்றுபோலவே காணப்படுகிறார்கள், இப்படிப்பட்ட வகையான வேலை தான் இந்தக் காலத்தில் செய்யப்பட வேண்டியதான அவரது வேலையாகும். இந்த உலகத்தை நீதியோடு நியாயந்தீர்க்க கிறிஸ்து இரண்டாம் முறை வரவேண்டியதிருக்கிறது. Mar 27.3

இவ்வுலக இன்ப வாழ்க்கையினின்றும் நண்பர்களிடமிருந்தும் யோவான் விலகி இருந்தார். மிக எளிய முறையில் ஒட்டக மயிராய் வைத்து நெய்யப்பட்ட உடையைத் தரித்துக் கொண்டிருந்தார். இக் காரியமானது, யூத ஆசாரியார்களுடைய, மற்றும் பொதுவாக அங்குமுள்ள மக்களுடைய வீண் ஆடம்பத்திற்கும் பகட்டிற்கும் ஒரு நிலையான கண்டனம் போன்று காணப்பட்டது. காய்கறி, வெட்டுக் கிளி (ஒரு மரத்தின் காய்) மற்றும் காட்டுத் தேன் அவரது உணவாக இருந்தது. இது எங்கணும் பரவலாகக் காணப்பட்ட பெருந் திண்டிற்கும் இன்சுவை உணவில் திளைத்திருக்கும் பழக்கத்திற்கும் எதிரான ஓர் கடிந்துகொள்ளுதலாயிருந்தது.. ஒரு மாபெரும் சீர்திருத்தம் என்று பொருளானது எங்கணும் கிளர்ந்தெழவேண்டும். பொதுமக்களின் உள்ளங்கள் அசைக்கப்பட வேண்டும். தேவனுடைய மக்களை விக்கிரக வணக்கத்திலிருந்தும் பெருந்திண்டியிலிருந்தும், உடைகள் மற்றும் ஊதாரித்தனமாகச் செலவுசெய்யும் காரியங்களினின்றும் விலகுவதற்கான தூதுடன் அனைத்துக் காரியங்களிலும் இச்சை அடக்கத்தோடு இருக்கவேண்டுமென்ற செய்தியும் சேர்த்துக் கொடுக்கப்பட வேண்டும். Mar 27.4

சீர்கெட்டுப்போன இந்தக் காலத்தில், ஊதாரித்தனமாக, ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பழக்கத்தோடு வாழ்கின்ற இத்தகைய மக்களின் வாழ்க்கைக்கு மாறாக, தேவன் சிறப்பாக ஆசீர்வதித்து நடத்திகின்ற, நீதியின் வழியில் செல்லுகின்ற மக்களிடத்தில் எதிர்பார்க்கப்படும் சுயத்தை ஒறுத்தல், தாழ்மை, இச்சையடக்கம் ஆகிய குணங்கள் மேற்கூறப்பட்டவர்களின் முன்னிலையில் வைக்கப்பட வேண்டும். எப்படி கரமானது உடலோடு ஒட்டிக் கொண்டிருக்கிறதோ அதேபோன்று, அவ்வளவு மிக நெருக்கமாக, உடல்நலம் பற்றிய சீர்திருத்தமானது, மூன்றாம் தூதனின் தூதோடு இணைக்கப் பட்டிருக்க வேண்டுமென்று தேவன் எனக்குக் காட்டியிருக்கிறார். Mar 28.1

எப்படி யோவான் ஸ்நாகன்... மக்களின் கவனத்தை பத்துக் கட்டளைகளின் பக்கம் ஈர்த்தாரோ, அதுபோன்று, நிச்சயமான ஒரு தொனியோடு, நாம் இந்தத் தூதைக் கொடுக்க வேண்டும். “த௫ஹெவநுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத் தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது.” எலியா தீர்க்கதரிசியும் யோவான் ஸ்நாகனும் எத்தகைய தனிச் சிறப்புள்ள ஊக்கத்தோடு செய்தியைக் கொடுத்தார்களோ அதேபோன்று இரண்டாம் வருகைக்கு வழியை ஆயத்தம்பண்ண நாமும் முயற்சிக்க வேண்டும்.⋆ Mar 28.2

வாக்குத்தத்த வசனம்: Mar 28.3

“அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்பொழுதே நான் கேட்பேன்.” - ஏசாயா 65:24. Mar 28.4