Go to full page →

மிருகத்திற்கான சொரூபம் எவ்வாறு படிப்படியாக உருவெடுக்கின்றது?, ஜூன் 10 Mar 321

“அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச் சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.” - வெளிப்படுத்தல் 13:12. Mar 321.1

அமெரிக்க ஐக்கிய நாடுகள் (U.S.A) மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கத்தக்கதாக, மார்க்கசம்பந்தமான வல்லமையானது, உள்நாட்டு அரசாங்கத்தை அடக்கியாள வேண்டும். சபை தனது சொந்த நோக்கத்தை நிறைவேற்றத்தக்கதாக, சபையினால் அரசாங்கத்தின் அதிகாரம் பயன்படுத்தப்படும்... Mar 321.2

மிருகத்தின் சொரூபமானது விழுந்துபோன புரோட்டஸ்டாண்டு அமைப்பைச் சுட்டிக்காட்டுகின்றது. புரோட்டஸ்டாண்டு சபைகள் தங்களது சமயக் கொள்கைகளை செயல்படுத்துவதற்காக, உள்நாட்டு அரசாங்க உதவியை நாடும்போது, இந்த நிகழ்வு உருவாகும்... Mar 321.3

ஞாயிறு ஆசரிப்பு, சட்டத்தின்மூலமாக நடைமுறைப்படுத்தப்படும்பொழுது, உண்மையான ஓய்வுநாள்பற்றிய கடமையானது உலகிற்கு அறிவுறுத்தப்படும்; பின்னர், யாரெல்லாம் ரோமாபுரியின் உயர்மட்ட அதிகாரத்தைத்தவிர, வேறு எந்த அதிகாரத்தையும் கொண்டிராத கொள்கைக்கு, கீழ்ப்படிவதற்காக, தேவனுடைய கட்டளைகளை மீறுகிறார்களோ, அந்த நபர்கள் தேவனுக்கும் மேலாக, ரோமன் கத்தோலிக்க சபையைக் கனம்பண்ணுகிறார்கள்! ரோமாபுரியால் வகுத்து ஒழுங்குசெய்யப்பட்ட அமைப்பு முறையை நடைமுறைப்படுத்தும் வல்லமைக்கும் ரோமாபுரிக்கும் அத்தகைய நபர் வணக்கம் செலுத்துகிறார். அவர் மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறார். தேவன் தமது அதிகாரத்தின் அடையாளம் என்று உறுதியாகத் தெரிவித்திருக்கின்ற, அந்த அமைப்பை மனிதர் தள்ளிப்போட்டு, அதற்குப் பதிலாக, ரோமாபுரி தனது உயர் அதிகாரத்திற்கு அடையாளமாகத் தெரிந்துக்கொண்ட நாளைக் கனப்படுத்தும்பொழுது, அவர் தாம் ரோமாபுரிக்கு விசுவாசமாக இருப்பதற்கான அடையாளத்தை அதன்மூலம் ஏற்றுக்கொண்டு, இந்த முக்கியக் காரியமானது, இவ்வாறு மக்களுக்கு முன்பாகத் தெளிவாக வைக்கப்படும்வரை இப்படி நடைபெறாது; மேலும், தேவனுடைய கட்டளைகளுக்கும் மனிதர்களுடைய கட்டளைகளுக்குமிடையே எதைத் தெரிந்துகொள்வது என்ற நிலைக்குக் கொண்டுவரப்படுகிறார்கள். தேவனுடைய கட்டளைகளைத் தொடர்ந்து மீறுகிறவர்கள், “மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக்கொள்வார்கள்.” Mar 321.4

இந்தப் போராட்டம் என்ற முக்கியமான காரியத்தில் கிறிஸ்துவ உலகம் தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்கிறவர்கள், மற்றும் மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கி, அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவர்கள் என்று இரண்டு மாபெரும் வகுப்புகளாக பிரிக்கப்படும். சபையும் அரசாங்கமும் தங்களது சக்திகளை இணைத்து, மிருகத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளத்தக்கதாக, “அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள்” (வெளிப்படுத்தல் 13:16) ஆகியோரைக் கட்டாயப்படுத்தும்; எனினும், தேவனுடைய மக்கள் அதைப் பெற்றுக்கொள்ளமாட்டார்கள். பத்மு தீவின் தீர்க்கதரிசி: “அன்றியும், அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங் கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு, அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன். அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடினார்கள்” (வெளிப்படுத்தல் 15:2,3) என்ற காட்சியைத் தரிசனமாகக் கண்டார்.⋆ Mar 322.1

வாக்குத்தத்த வசனம்: Mar 322.2

“கர்த்தர் தமது எயனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.” - சங்கீதம் 29:11. Mar 322.3