Go to full page →

சபை தூய்மையாக்கப்படுதல்!, ஜூலை 15 Mar 391

” அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச்சுத்திகரித்து அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய்க் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.” — மல்கியா 3:3. Mar 391.1

மாபெரும் வஞ்சகனின் அற்புதஞ்செய்யும் வல்லமையானது, மேலும் அதிகத் தீர்மானமாக வெளிப்படவேண்டிய வேளை நம்மீது வந்துவிட்டது. அவனது ஏமாற்றங்கள் அவைகளின் வஞ்சிக்கும் கவர்ச்சியோடு பெருகும். அவைகள் குழப்பமடையச்செய்து, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றிப் போடும். அந்தகாரத்தின் பிரபு அவனுடைய தீயதூதர்களோடு இணைந்து, கிறிஸ்தவ உலகத்தின்மீது கிரியைசெய்துகொண்டிருக்கிறான். கிறிஸ்துவின் பெயரைச் சொல்லுகிறவர்களை இருளின் கொடியின்கீழ் நிற்க்கும்படித் தூண்டிவிடுகிறான். தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக் கொள்கிறவர்களோடு யுத்தஞ்செய்யும்படியாகத் தூண்டுகிறான். Mar 391.2

தேவ மக்களின் கரத்தில், மிருகத்தின் முத்திரையை வைப்பதற்காக, மருளவிழுந்துபோன சபை, பூமியிலுள்ள சாத்தானிய வல்லமைகளோடு இணையும். தேவனுடைய பிள்ளைகள் மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கவேண்டுமென்றும், அவர்கள்மீது ஆதிக்கஞ்செலுத்தும் தேவனுடைய பிரமாணத்திற்கு உத்தமமாக இருப்பதை, அவர்கள் விட்டொழிக்கவேண்டுமென்று, மேலும் பாப்பானருக்கு வணக்கஞ்செலுத்தவேண்டுமென்றும் கட்டாயப்படுத்த முயற்சிகள் செய்யப்படும்; அப்பொழுது தான் மனிதரின் ஆத்துமாக்களைச் சோதிக்கின்ற காலம் வரும். மருளவிழுந்துபோன சபைகளின் கூட்டுறவு அமைப்பானது, தேவனுக்கு விசுவாசமாக இருக்கும் குடிமக்கள் யேகோவாவின் பிரமாணத்தைக் கைவிட்டுவிடவேண்டும் என்றும் அவரது வார்த்தையின் சத்தியத்தை ஏற்க மறுக்கவேண்டுமென்றும் கோரிக்கை வைக்கும். அப்பொழுது பொன்னிலிருந்து களிம்பு அகற்றப்படும். யார் தேவ பக்தியுடையவர்கள், யார் உத்தமமும் உண்மையுமானவர்கள் என்றும், யார் விசுவாசம்ற்றவர்கள், களிம்பு, வெறும் தகரம் என்பதும் வெளிப்படையாகத் தெரியும். தேவனது காற்றாடியில் எத்தகைய உமிப்படலமும் அடித்துச்செல்லப்பட்டுப்போய்விடும்! இப்பொழுது நமது கண்கள் இருந்தும், தேவனுடைய காற்றாடி உமியைப் பறக்கடித்து வெளியேற்றும்; கிரிஸ்துவிலே மையங் கொண்டிராத அனைவரும், அந்த நாளின் கடுமையான சோதனைகளிலும் பரீட்சைகளிலலும் நிற்கமுடியாது. கிறிஸ்துவின் நீதியினால் தரிப்பிக்கப்பட்டிருக்கும் அனைவரும் சத்தியத்திற்கும் கடமைக்கும் உறுதியாக நிற்பார்கள். தங்களது சொந்த நீதியிலே நம்பிக்கை கொண்டவர்கள், இருளின் பிரபுவின் கறுப்புக் கொடியின்கீழ் அணிவகுத்து நிற்பார்கள். அதன் பிறகு கிறிஸ்துவிற்கா அல்லது பேலியாளிற்கா? யாருக்காக அவர்களது தெரிந்தெடுப்பு என்பது கண்டறியப்படும். Mar 391.3

சுயத்தின்மீது நம்பிக்கையற்றிருந்தவர்கள் தாங்கள் வைக்கப்பட்டிருந்த சூழ்நிலையிலே, புகழுக்கு ஏற்படும் அவமானத்தையும் சந்திக்க தைரியமின்றிப்போனவர்கள், இறுதியிலே பகிரங்கமாக தாங்கள் கிறிஸ்துவிற்கும், அவரது பிரமானத்திற்கும் உறுதியாக நிற்பதாக அறிவிக்கிறார்கள்; அதேசமயத்தில், செழிப்பாக வளர்ந்த மரங்களைப்போலத் தோற்றங்கொடுத்திருந்தவர்கள், கனியற்றவர்களாகக் காணப்பட்டு, தீமையைச் செய்வதற்காக திரள்கூட்டத்தோடு சேர்ந்து, மருளவிழுகையின் அடையாளத்தை தங்களது நெற்றியிலாவது கையிலாவது பெற்றுக்கொள்வார்கள்.⋆ Mar 392.1

வாக்குத்தத்த வசனம்: Mar 392.2

” இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.” - லூக்கா 10:19. Mar 392.3