Go to full page →

கிறிஸ்தவ பூரணத்துவத்தின் உயரத்தை எட்டிப்பிடித்தல்!, ஆகஸ்டு 6 Mar 435

“நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச்செய்ய வல்லவராகிய அவருக்கு…” - எபேசியர் 3:20. Mar 435.1

தேவனை உங்களது பெலனாக வைத்துக்கொள்வீர்களானால், மிகவும் அதைரியமூட்டும் சூழ்நிலைகளுக்கடியிலும், கிறிஸ்தவ பரிபூரணத்துவத்தின் நிறைவை அடைவது சாத்தியமே என்பதை போதிய அளவு சிந்திக்காதிருந்தாலுங்கூட, அத்தகைய பரிபூரணத்துவத்தின் நிறைவை மிகவும் ஏராளமாகப் பெற்றுக்கொள்ளலாம். உங்களது சிந்தனைகள் உயர்வடையலாம். உங்களது நாட்டங்கள் மேன்மை உடையவைகளாகவும், சத்தியத்தைப்பற்றிய உள்ளார்ந்த சிந்தனைகளும் செயலுக்கான நோக்கங்களும் தெளிவாக இருக்கலாம்; அவை கீழ்த்தரமான நோக்கங்களினின்று உங்களை உயர்த்தும். Mar 435.2

குணத்தின் பூரணத்துவத்தை அடைவதற்காக சிந்தனை, செயல் ஆகிய இரண்டுமே அவசியமாகும். உலகத்தோடு தொடர்புகொள்ளத்தக்கதாக நீங்கள் கொண்டுவரப்படும்போது, மனிதரின் பாராட்டுதலை ஆர்வத்தோடு நாடாமலும், அவர்களது நன்மதிப்பிற்காக (அவர்கள் என்ன நினைத்துக்கொள்வார்களென்றெண்ணி) வாழாதபடியும், நீங்கள் கவனமாக இருக்கவேண்டும்…தாழ்மை என்னும் கிருபையைப் பேணி வளர்க்க வேண்டும். உங்களது உதவியற்ற ஆத்துமாக்களை, கிறிஸ்துவின்மீது பற்றிக்கொண்டிருக்கும்படியாகச் செய்யவேண்டும்… உலகப்பிரகாரமான பற்றுடைய திரளான மக்கள் மத்தியிலுள்ள குழப்பத்திற்கும் சோதனைகளுக்குமிடையில் ஆத்துமாவின் சுதந்திரத்தை பூரண இனிமையோடு காத்துக்கொள்ளலாம். Mar 435.3

ஒவ்வொரு நாளும் தேவனோடு ஆன்மீகஉறவு கொள்வீர்களானால், அவர் என்ன தகுதியை வைத்திருக்கிறாரோ அதை நீங்கள் மனிதருக்குக் கொடுப்பீர்கள். துன்பம் அனுபவிக்கின்ற மானிட இனத்தை ஆசீர்வதிப்பதற்காக, உங்கள்மீது வைக்கப்பட்டிருக்கும் கடமைகளை விருப்பத்தோடு ஏற்றுக்கொள்ள முன்வருவீர்கள். நீங்கள் உங்களுக்குச் சொந்தமானவர் அல்ல; உங்களது மேம்பாடான விருப்பங்கள், உங்களது வாழ்க்கையின் மிக உயர்ந்த சேவைகள் மீது உங்களது ஆண்டவருக்கு பரிசுத்தமான உரிமைகள் இருக்கின்றன. உங்கள் சரீரத்தில், உங்கள் ஆன்மாவில் அவரது சொந்த மேன்மைக்காகவும் மகிமைக்காகவும் உங்களது திறமைகளை முழு அளவிற்குப் பயன்படுத்துவதற்கு அவருக்கு உரிமையிருக்கிறது. எத்தகைய சிலுவைகளானாலும் நீங்கள் சுமக்கவேண்டுமென்று கோரப்படுமானால், ஒரு முறுமுறுப்புமின்றி நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்… Mar 435.4

அநேகர் தேவனற்றவர்களாக-நம்பிக்கையற்றவர்களாக-இந்த உலகில் வாழ்கிறார்கள். அவர்கள் சாத்தானின் உபாய தந்திரங்களால் அடிமைப்படுத்தப்பட்டு, குற்றமுள்ளவர்களாகவும், கேடு நிறைந்தவர்களாகவும், இழிந்த-தரக்குறைவான- பண்புடையவர்களாகவும் இருக்கிறார்கள்; ஆனால், இப்படிப்பட்டவர்களை மீட்பதற்காகத் தான் பரலோகத்தினின்று கிறிஸ்து இறங்கி வந்தார். நமது மிகவும் மேன்மையான பரிவு, இரக்கம், தளரா முயற்சி ஆகியவைகளைப் பெற்றுக்கொள்ள அவர்கள் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள்; ஏனெனில், அவர்கள் அழிவின் விளிம்பிலே இருக்கிறார்கள். நிறைவேற்றப்படாத விருப்பங்களாலும், ஒழுங்கு குலைந்த இச்சைகளாலும், தங்களது சொந்த மனச்சாட்சியின் கண்டனங்களாலும் துன்பம் அனுபவிக்கிறார்கள். துயர்மிகுந்த வார்த்தையின் ஒவ்வொரு பொருளின்படியும் வேதனை அனுபவிக்கிறார்கள். இந்த உலக வாழ்க்கையில் பிடியை இழந்துகொண்டிருக்கிறார்கள். வரப்போகும் வாழ்க்கையைக்குறித்து எதிர்பார்க்க அவர்களுக்கு எதுவுமில்லை. Mar 436.1

உங்களுக்கு ஊழியஞ்செய்வதற்கு முக்கியமான பணித்தளம் ஒன்றிருக்கிறது. நீங்கள் சுறுசுறுப்பாகவும் விழிப்புடையவர்களாகவும் எஜமானின் அழைப்பிற்கு முற்றிலுமாகக் கீழ்ப்படிய வேண்டும்.⋆ Mar 436.2

வாக்குத்தத்த வசனம்: Mar 436.3

“…அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். - எபிரெயர் 2:18. Mar 436.4