Go to full page →

ஒய்வுநாளின் முக்கியத்துவமும் மகிமையும்!, ஆகஸ்டு 25 Mar 473

“அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.” - ஏசாயா 58:14. Mar 473.1

ஓய்வுநாளிலே எங்களுக்கு ஒரு இனிமையான-மகிமையான நேரமிருந்தது…அவர் நமக்கு வழங்கியிருக்கும் ஏராளமான நன்மைகளுக்காக நாம் களிகூர்ந்து, அவரை மகிமைப்படுத்துவதற்காக நாம் உண்டாக்கப்பட்டோம்…நான் தரிசனத்திலே எடுத்துக் கொள்ளப்பட்டேன்… Mar 473.2

ஓய்வுநாளின் முக்கியத்துவம்பற்றி மிகவும் குறைவாகவே உணர்ந்திருக்கிறோம்-புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை நான் கண்டேன். இன்னும் எந்த அளவிற்கு அதன் முக்கியத்துவம் பற்றியும் மகிமைபற்றியும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்-அறிந்துகொள்ளவேண்டும் என்பதையும் நான் கண்டேன். பூமியின் உயர்ந்த இடங்களில் ஏறியிருந்து, யாக்கோபின் சுதந்தரத்தால் போஷிக்கப்படுதல் என்றால் என்ன என்பதை நான் அறியவில்லை என்று கண்டேன்; ஆனால், அந்த இளைப்பாறுதலும் பின்மாரியும் அவரது பிரசன்னத்தினின்றும் அவரது வல்லமையின் மகிமையினின்றும் வெளிப்படும்போது, அதன்பிறகு, யாக்கோபின் சுதந்தரத்தால் போஷிக்கப்படுதலும், உயர்ந்த இடங்களில் ஏறியிருப்பதும் என்ன என்பதை அறிந்து கொள்வோம். அதன்பிறகு, ஓய்வுநாளின் முக்கியத்துவத்தையும் அதன் மகிமையையும் மிகவும் அதிகமாகக் காண்போம்; ஆனால், தேவனது குரலால் நம்மோடு சமாதான உடன்படிக்கைசெய்யப்பட்டு, புதிய எருசலேமின் முத்து வாசல்கள் திறக்கப்பட்டு, அதின் மின்னுகின்ற தங்கக் கீல்களில் அந்த வாசல்கள் பின்னாகச் செல்லும்பொழுது, அதிலே நுழைகின்ற மானிடரின் காதுகளிலே என்றும் விழுந்திராத கீதத்தைவிட இனிமையான, இயேசுவின் மகிழ்ச்சியான-சந்தோஷமான குரல் கேட்கப்படும்வரை, அதின் அனைத்து முக்கியத்துவத்திலும், மகிமையிலும் அந்த ஓய்வுநாளைக் காணமாட்டோம். நாம் தேவனுடைய கற்பனைகளை கைக்கொண்டதால், அந்த பட்டணத்திற்குள் செல்ல, முழு உரிமையையும் பெற்றிருந்தோம் என்பதைக் கண்டேன். பரலோகம், இனிய பரலோகம், எங்களது வீடாக இருந்தது! Mar 473.3

கற்பலகைகளிலே தேவனுடைய விரலால் எழுதப்பட்ட அந்தக் கட்டளைகளைக் நான் கண்டேன். ஒரு கற்பலகையிலே நான்கும் அடுத்ததில் ஆறும் இருந்தன. முதல் கற்பலகையில் உள்ள நான்கும் அடுத்த கற்பலகையிலுள்ள ஆறைவிட ஜொலித்தன; ஆனால், அந்த நான்காம் கற்பனையாகிய ஓய்வு நாள் கற்பனை மற்ற எல்லாக் கற்பனைகளையும்விட ஜொலித்தது; ஏனெனில், தேவனுடைய பரிசுத்த நாமத்தின் மேன்மைக்காக, அது தனியாகப் பிரித்து வைக்கப்பட்டிருந்தது. பரிசுத்த ஓய்வுநாள் மகிமையாகக் காணப்பட்டது. ஒரு மகிமையின் ஒளிவட்டம் அதைச் சுற்றிலும் காணப்பட்டது. ஓய்வுநாள் கற்பனையானது, சிலுவையில் அடிக்கப்படவில்லை என்பதை நான் கண்டேன். அது அடிக்கப்பட்டிருந்தால், மற்றுமுள்ள ஒன்பது கற்பனைகளும் அடிக்கப்பட்டிருக்கும். நான்காம் கற்பனையையும் சேர்த்து அனைத்தையும் மீறுவதற்கு நமக்குச் சுதந்தரம் இருக்கும். அவிசுவாசிகளுக்கும் உண்மையான இஸ்ரவேலருக்குமிடையே பிரிக்கும் சுவராக ஓய்வுநாள் இருக்கும் என்பதை நான் கண்டேன். ஓய்வுநாள் எனப்படும் முக்கியமான பொருள்தான் காத்துக் கொண்டிருக்கும் அருமையான தேவனுடைய பரிசுத்தவான்களின் இதயங்களை இணைக்கக்கூடியதாக இருக்கும்.⋆ Mar 474.1

வாக்குத்தத்த வசனம்: Mar 474.2

“ஓய்வுநாளை பரிசுத்தக்குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற… அனைவரையும் நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து, என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்.” - ஏசாயா 56:6. Mar 474.3