Go to full page →

உன் தேவனைச் சந்திக்க நீ ஆயத்தபடு!, செப்டம்பர் 3 Mar 491

“ஆகையால் இஸ்ரவேலே, இந்தப் பிரகாரமாக உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப் போகிறபடியினால் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.” - ஆமோஸ் 4:12. Mar 491.1

இக்கட்டுக்காலத்திலே, தேவனுடைய சமூகத்திலே, மகா பிரதான ஆசாரியரில்லாமல் ஜீவிக்கவேண்டுமே; அதற்கு எப்படிப்பட்ட ஆயத்தத்தோடிருக்க வேண்டும் என்பதை அநேகர் நன்கு உணராமல் இருக்கிறார்கள். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையைப் பெறுகிறவர்களும், இக்கட்டுக்காலத்திலே பாதுகாக்கப்படப்போகிறவர்களும் இயேசுவை முழுமையாகப் பிரதிபலிக்க வேண்டும். Mar 491.2

அவர்களுடைய அங்கி கறையற்றதாகவும், அவர்கள் குணம் தெளிக்கப்பட்ட இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்பட்டதாகவுமிருக்க வேண்டும். தேவனுடய கிருபையினாலும், தங்களுடைய எச்சரிக்கை உள்ள முயற்சியினாலும், தீமையோடு நடந்த போராட்டத்திலே வெற்றிகொண்டவர்களாயிருக்க வேண்டும். நுட்ப நியாய விசாரணை பரலோகத்திலே நடைபெற்றுக்கொண்டிருக்கிற நேரத்திலே, மனம் வருந்தி, மனதிருப்புகிற விசுவாசிகளின் பாவங்கள் ஆசரிப்பு கூடாரத்திலிருந்து நீக்கப்படுகிற காலத்திலே, விசேஷமான சுத்திகரிப்பின் பணி — இப்பூமியிலே தேவனுடைய மக்களின் மத்தியிலே நடைபெற வேண்டும். Mar 491.3

மிகவும் தேவையான ஆயத்தத்தைப் புறக்கணிக்கிற அநேகரை நான் கண்டேன். கர்த்தருடைய நாளிலே அவர் முன்பாக ஜீவிக்கவும், பரிசுத்தவாங்களோடு சேர்ந்து நிற்கவும் தகுதியாகும்படிக்கு, “பின்மாரியை” — அதாவது “இளைப்பாறுதலின்” வேளையை எதிர்பார்த்திருக்கிறதை நான் கண்டேன். ஆ! இக்கட்டுக்காலத்திலே அடைக்கலமின்றி இருந்த அநேகரை நான் கண்டேன். அவர்கள் தேவையான ஆயத்தத்தை அலட்சியஞ்ச்செய்து விட்டார்கள்; எனவே, ஒரு பரிசுத்த தேவனுடைய சமூகத்தில் வாழ்வதற்கு அனைவரும் தங்களை தகுதியாக்கிக்கொள்ளத்தக்கதான அந்தப் பின்மாரியை அவர்களால் பெறமுடியவில்லை. Mar 491.4

தீர்க்கதரிசிகளால் செதுக்கப்பட்ட தங்களை ஒப்புக்கொடாதவர்களும், முழு சத்தியத்திற்கும் கீழ்படிந்து தங்கள் உண்மயிலே அப்படி இல்லாதிருந்தும் தங்கள் நிலைதான் மேன்மையுள்ளதாயிருக்கிறது என்று நம்பியிருக்கிறவர்களும், வாதைகள் ஊற்றப்படும் காலம் வரைக்கும் அப்படியே இருப்பார்கள்; பின்புதான், தாங்கள் செதுக்கப்படவும் வடிவாக அமைக்கப்படவும் வேண்டிய நிலையில் இருப்பதை அறிவார்கள்... Mar 492.1

தங்களுடைய பாவநிலை, பெருமை, சுயநலம், உலக ஆசை, தவறான ஒவ்வொரு வார்த்தை, செயல் இவற்றின்மேலெல்லாம் பங்கடைய முடியாது; எனவே, நாம் ஆண்டவரை நெருங்கிவந்து, அவருடைய நாளின் போராட்டத்திலே நிற்கத்தக்கதாக- நம்மைத் தகுதியாக்குகிற- ஆயத்தத்தை ஊக்கமுடன் தேடவேண்டியது அவசியம். தேவன் பரிசுத்தமானவர் என்பதையும், பரிசுத்தமானவர் என்பதையும், பரிசுத்தவான்கள் தவிர வேறொருவரும் அவர் சமூகத்தில் வாசம் பண்ண முடியாது என்பதையும், நாம் அனைவரும் நினவுகூறக்கடவோம்.⋆ Mar 492.2

வாக்குத்தத்த வசனம்: Mar 492.3

உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலது கையைப்பிடித்து: “பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன்” என்று சொல்லுகிறேன். -ஏசாயா 41:13. Mar 492.4