Go to full page →

ஆட்டுக்குட்டியானவரிம் உக்கிர கோபம்!, அக்டோபர் 14 Mar 573

“பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள்யாவரும், சுயாதீனர் யாவரும் பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு, பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக் கொள்ளுங்கள்” என்றார்கள். - வெளிப்படுத்தல் 6:15-17. Mar 573.1

பரிகாசத்தோடுகூடிய எக்களிப்புகள் நின்றுபோயின. பொய் உதடுகள் அமைதியடையும்படி செய்யப்பட்டது. “அமளியாய் யுத்தம் பண்ணுகிற வீரருடைய ஆயதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்ட உடுப்பும் அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும்.” (ஏசாயா 9:5) அவர்களுடைய ஆரவாரம் ஓய்கிறது. ஜெபவிண்ணப்பங்களின் குரலும் அழுகையின் புலம்பலின் சத்தத்தையும் தவிர வேறு எதுவும் கேட்கப்படவில்லை. சற்று முன்வரை கேலிசெய்துகொண்டிருந்த உதடுகளினின்று அழுகை பீறிட்டு வருகிறது. “அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது. யார் நிலை நிற்கக்கூடும்?” தாங்கள் நிந்தித்து உதறித்தள்ளினவருடைய முகத்தைப் பார்க்கக்கூடாதபடி, மலைகளும் பர்வதங்களும் தங்கள் மேல் விழுந்து மூடிக்கொள்ள வேண்டும் என்று துன்மார்க்கர் ஜெபிக்கிறார்கள். Mar 573.2

மரித்தோருடைய காதுகளில் ஊடுருவிச் செல்லுகின்ற அந்தக் குரல் எத்தனைமுறை தங்களிடம் துயரத்தோடு, மென்மையாகப் பேசி, மனந்திரும்புவதற்கு தங்களை அழைத்திருக்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள். அன்பான ஒரு நண்பனைப்போல, ஒரு சகோதரனைப்போல, ஒரு மீட்பரைப்போல, எத்தனைமுறை அவர் உருக்கமாகக் கெஞ்சிமன்றாடியதை அவர்கள் கேட்டிருக்கிறார்கள். “உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும்?” (எசேக். 33:11) என்று நெடுநாளாகத் தங்களோடு மன்றாடிக்கொண்டிருந்த அந்த சத்தமே, சத்தியத்தை உதறினவர்களைக் கடிந்துகொள்ளுகிற-குற்றப்படுத்துகிற-வார்த்தையாக இருக்கும். அது அவர்களுக்கு வழிப்போக்கனுடைய சத்தத்தைப் போலல்லவா இருந்தது! “நான் கூட்பிட்டும், நீங்கள், கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை. என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்து கொள்ளுதலை வெறுத்தீர்கள்” நீதி. 1:24,25) என்று இயேசு சொல்லுகிறார். புறக்கணித்த எச்சரிப்புகள், மறுத்துவிட்ட அழைப்புகள், உதாசீனப்படுத்தின சிறப்புரிமைகள்… இவைகளைப்பற்றின மறக்கமுடியாத நினைவுகளை, அவருடைய சத்தம் அவர்கள் நினைவிற்குக் கொண்டுவருகிறது. Mar 573.3

சத்தியத்தை மறுக்கிற ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், அவர்களுடைய மனசாட்சி விழிப்படைகிற வேளைகள் உண்டு. மாய்மாலமான வாழ்க்கையைக்குறித்து சித்திரவதைசெய்கின்ற நினைவுகள் மீண்டும் அவர்களது உள்ளத்தில் கொண்டுவரப்படும் வேளைகளும் உண்டு; ஆத்துமாவானது வீணான கவலைகளால் நச்சரிக்கப்படுகிறது. “ஆபத்து சூறாவளிபோல் நேரிடும்” (நீதிமொழிகள் 1:27). அந்த நாளிலே ஏற்படுகின்ற மன வேதனையோடு ஒப்பிடும்பொழுது, இந்த வேதனைகளெல்லாம் ஒன்றுமில்லை! கிறிஸ்துவையும் அவருடைய மெய்யான மக்களையும் அழிக்க தேடினவர்கள், இப்பொழிதோ, அவர்களுக்குக் கொடுக்கப்படும் மகிமையைக் காண்பார்கள்.⋆ Mar 574.1

வாக்குத்தத்த வசனம்: Mar 574.2

“சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.” - சங்கீதம் 25:9. Mar 574.3