Go to full page →

நித்திரையிலிருந்த பரிசுத்தவான்களின் வெற்றி!, அக்டோபர் 19 Mar 583

“இதைக்குறித்து நீங்கள் ஆச்சர்யப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தை கேட்க்குங்காலம் வரும்.; அப்போழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.” - யோவான் 5:28,29. Mar 583.1

ஜீவனளிக்கிற ஆண்டவர், கிரயத்தால் கொள்ளப்பட்ட தமக்கு உடைமையானவர்களை முதலாம் உயிர்த்தெழுதலிலே வெளியே வரும்படி அழைப்பார். இந்த வெற்றியின் மணிவேளைவரையிலும், கடைசி எக்காளம் தினித்து நித்திய வெற்றியை அடையத்தக்கதாக, அந்த மாபெரும் சேனை உயிர்த்தெழுந்து வெளியே வரும்வரை, ஒவ்வொரு பரிசுத்தவானும் விலையுயர்ந்த பொக்கிஷத்தைப்போல் பாதுகாக்கப்படுவார்கள். அவர்களுடைய பெயர்களெல்லாம் தேவனுக்குத் தெரியும். அவர்கள் உயிரோடிருந்தபோது, அவர்களுக்குள்ளே இருந்த இரட்ச்சகரின் வல்லமையினாலும், அவர்கள் தெய்வீக சாயலுக்கு பங்காளிகளாக இருந்ததினாலும், அவர்கள் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டார்கள். Mar 583.2

“பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும்” என்று கிறிஸ்து கூறினார். அந்தக் குரல் மரித்தோர் அடக்கம்பண்ணப்பட்டிருகிற அனைத்து கல்லறைகளிலேயும் எதிரொலிக்கும். இயேசுவிலே நித்திரை செய்கின்ற ஒவ்வொரு பரிசுத்தவானும் விழித்தெழும்பி, அவனது சிறைக்கூடத்தைவிட்டு (மரணம்) வெளியேறுவான். பின்பு, கிறிஸ்த்துவின், நீதியினாலே நாம் பெற்றுக்கொண்ட குணத்தின் ஒழுக்கனிலையானது, உண்மையான மேன்மைக்கும் மிக உயர்வான தகுதியிம் நிலைக்கும் நம்மைக் கூட்டிச்சேர்க்கும். Mar 583.3

உயிர்த்தெழுதலின் காலையிலே, மரித்த பரிசுத்தவாங்களின் வெற்றி மகிமையுள்ளதாயிருக்கும்... கல்லறைகளிலுருந்து புறப்படுகிற அனைவரையுயும் ஜீவனுக்கு அதிபதியானவர் சாவாமை என்னும் கிரீடத்தைச்சூட்டி மகிழ்விப்பார். Mar 583.4

உயிர்த்தெழுந்த சேனையின் திரள் அங்கே நிற்கின்றது. அவர்கள் மரணமடையுமுன் அவர்களுடைய கடைசி நினைவு மரணத்தையும் அதின் வேதனைகளையும்பற்றியதாக இருந்தது. கல்லறையைக்குறித்த நினைவோடு தான் மரித்தார்கள். ஆனால் இப்பொழுதோ, மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயமெங்கே? என்று கூறி ஆர்ப்பரித்தார்கள். சாவாமையைப் பூரணமாகத்தரித்த அவர்கள் அங்கே நின்று, பின்னர் தங்களது ஆண்டவரை ஆகாயத்தில் சந்திக்கத்தக்கதாக மேலெழும்பிச்செல்லுகிறார்கள்... அவர்களின் இருமருங்கிலும் தூதர்கள் கூட்டம் நிற்கின்றது... பின்பு பரலோக தூதர்களால் அமைந்த பாடல்குழு இசைக்குறியீட்டைக் கொடுத்தவுடன், இருபக்கங்களிலும் கூட்டமாக நின்ற தூதர்கள் அந்தப் பாடலைப் பாட, பீமியிலே இருக்கும்போது, பாடிக்கொண்டே இருந்ததைப்போன்று, மீட்கப்பட்டவர்களும் சரளமாக அதைப் பாடத்தொடங்குகின்றனர். ஆ! அது எத்தகைய இனிமையான இசை!... இசைந்திராத ஒரு தோனியும் அந்தப் பாடலில் கேட்கப்படவில்லை. தொனித்த ஒவ்வொரு சத்தமும், அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் பாத்திரமுள்ளவர் என்று கூறியறிவித்தது. அவர் தமது ஆட்தும வருத்தத்திம் பலனைக் காண்கிறார்-கண்டு திருப்த்தியடைகிறார்.⋆ Mar 584.1

வாக்குத்தத்த வசனம்: Mar 584.2

“பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்னுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.” - ஏசாயா 31:5. Mar 584.3