Go to full page →

தேவனுடைய ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு கிரீடம்!, அக்டோபர் 29 Mar 603

“சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு, கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணுன ஜீவகிரீடத்தைப் பெறுவான்.” - யாக்கோபு 1:12. Mar 603.1

திரள் கூட்டமான தூதர்கள், மகிமையுள்ள கிரீடங்களை, ஒவ்வொரு பரிசுத்தவானுக்கும் கொடுக்கப்படப்போகிற, அவர்கள் பேரெழுதப்பட்ட கிரீடங்களை, நகரத்திலிருந்து எடுத்துவருவதை நான் கண்டேன். இயேசு கிரீடங்களைக்கேட்டபொழுது, தூதர்கள் அவரிடம் அவைகளைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். இனிமையான இயேசு, தமது வலது கரத்தினால் அவைகளைத் தமது மக்களுடைய சிரசுகளுன்மேல் வைத்தார். அதுபோலவே தூதர்கள் சுரமண்டலங்களையும் எடுத்துவந்தனர். இயேசு அவைகளையும் தமது பரிசுத்தவாங்களுக்குக் கொடுத்தார். அதிகாரமுள்ள தூதர்கள்தங்களது சுரமண்டலத்தை முதலாவது மீட்ட, நன்றியோடு மகிழ்ச்சியான துதியுடன் ஒவ்வொரு குரலும் தொனித்தது. எல்லாருடைய கரங்களும் மிகத் தேர்ந்த கரங்களைப்போல, சுரமண்டலங்களை வாசிக்க, பூரணமான-மிக இரம்மியமான இசை அங்கே இழைந்தோடியது... Mar 603.2

அந்த நகரத்திலுள்ளே, கண்களுக்குவிருந்தளிக்கும் அத்தனையும் இருந்தன. அனைத்து பக்கங்களிலும் மகிமையின் நிறைவை அவர்கள் கண்டார்கள்; பின்பு, இயேசு மீட்க்கப்பட்ட பரிசுத்தவாங்களை நோக்கிப்பார்த்தார். அவர்களது முகங்கள் மகிமையால் பிரகாசித்தன. அவர்களை அன்போடு நோக்கிப்பார்த்து அவரது கீதம்போன்ற இனிய குரலில்: “என் ஆத்தும வருத்தத்தின் பலனைக்கண்டு நான் திருப்தியடைந்தேன். இந்த மகிமையின் ஐசுவரியம் நித்தியத்திற்கும் நீங்கள் அனுபவிக்கவே. உங்கள் வருத்தமெல்லாம் முடிந்தது. இனி மரணமில்லை, வருத்தமில்லை, அழுகையில்லை, வேதனையும் இனி உண்டாகாது” என்றார்... Mar 603.3

அதன் பின்பு, ஜீவ விருட்சத்தின் அருகிலே இயேசு தமது மக்களை நடத்திச்செல்வதை நான் கண்டேன்...ஜீவ விருட்சத்தின் மீது மிகவும் அழகான பழம் காணப்பட்டது. அதைப் பரிசுத்தவான்கள் தாராளமாகப் பறித்துப் புசிக்கலாம். நகரத்திலே மிகவும் மகிமையான சிங்காசனம் ஒன்று இருந்தது. அதிலிருந்து பளிங்கைப்போல தெளிவான ஜீவநதி புறப்பட்டது. அந்தன் இரு பக்கங்களிலும் ஜீவ விருட்சம் இருந்தது; அதோடு அதன் இரு கரைகளிலும் கனிதரும் மற்ற அழகிய மரங்களும் இருந்தன... Mar 604.1

பரலோகத்தை வார்த்தைகளால் விவரிக்கவேண்டுமானால், எந்த ஒரு மொழியும் போதாது. அந்தக் காட்சிகள் என்முன் வந்தபொழுது, நான் ஆச்சர்யத்தில் மூழ்கிப்போனேன். மிஞ்சுகிற அதின் மகிமையினாலும், காந்தியினாலும் கவரப்பட்ட நான், என் எழுதுகோலைக் கீழே வைத்துவிட்டு: ” ஆ, என்ன அன்பு! என்ன ஆச்சர்யமான அன்பு” என்று வியந்தேன். முகவும் நேர்த்தியான மொழியும்கூட, பரலோகத்தின் மகிமையையும் இரட்சகருடைய இணையற்ற அன்பின் ஆழங்களையும் விவரிக்க முடியாது.⋆ Mar 604.2

வாக்குத்தத்த வசனம்: Mar 604.3

“எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.” - 1 கொரிந்தியர் 2:9. Mar 604.4