Go to full page →

கண் காணவுமில்லை! காது கேட்கவுமில்லை!!, நவம்பர் 12 Mar 631

“...தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. ” - 1 கொரிந்தியர் 2:9. Mar 631.1

“உண்மையாகவே தேவனை நேசிக்கிற பிள்ளைகள், மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாகயிருக்கும்படி தங்களுக்கு அவர் கொடுத்த தாலந்துகளை மேம்படுத்திக்கொள்ள விரும்புவார்கள். எதிர்காலத்தில் அவர்களை அனுமதிக்கத்தக்கதாக பரலோகத்தின் வாசல்கள் விரிவாகத் திறக்கும். “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவைகளே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற இராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்” (மத். 25:34) என்று மகிமையின் இராஜா தமது மிக இனிமையான-கீதம்போன்ற-குரலில் கூறுவதை அவர்கள் காதுகள் கேட்கும்; இவ்வாறாக, கிறிஸ்து அவர்களுக்காக ஆயத்தம் பண்ணிக்கொண்டிருக்கிற வாசஸ்தலங்களுக்கு மீட்கப்பட்டவர்கள் வரவேற்கப்படுவார்கள். அங்கே அவர்களுக்கு பூமியின் பொல்லாத மக்கள் துணையாக இருக்கமாட்டார்கள்; மாறாக, பூமியிலே தெய்வீக ஒத்தாசையோடு பூரணமாக குணங்களை அமைத்துக்கொண்டவர்கள் துணைசெய்வார்கள். பாவ சுபாவம் ஒவ்வொன்றும், குறைகள் ஒவ்வொன்றும் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே நீக்கப்பட்டுவிட்டன. நடுப்பகல்வரை ஒளிரும் சூரியனுடைய பிரகாசத்திலும் சிறந்த அவரது மகிமையின் பிரகாசமும் மேன்மையும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரது குணத்தின் பரிபூரணமும் அவரது ஒழுக்கத்தின் அழகு நிலையும் அவர்கள் மூலமாக ஜொலிக்கிறது. அவர்களது இந்த வெளித்தோற்றத்தைக் காட்டிலும், இந்தக் குணமானது மிகவும் தகுதியுடையதாகக் காணப்படுகிறது. அந்த மாபெரும் வெள்ளைச் சிங்காசனத்திற்கு முன்பாக, குற்றமற்றவர்களாகக் காணப்படுகிற அவர்கள், தூதர்களுடைய சிறப்புரிமைகளிலும் மேன்மையிலும் பங்குகொண்டவர்களாக நிற்கிறார்கள். Mar 631.2

“தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” (1 கொரிந்தியர் 2:9). அவனுடையதாகப்போகிற மேன்மையான சுதந்தரத்தைப் பார்க்கும்பொழுது, “மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்” (மத்தேயு 16:26). அவன் ஒருவேளை வருமையிளிருக்கலாம்; என்றாலும், உலகத்தால் ஒரு போதும் அவனுக்கு வழங்கக்கூடாத சொத்தும் மேன்மையும் அவனில் உடையவனாகயிருக்கிறான். பாவத்திலிருந்து கழுவிச் சுத்திகரிக்கப்பட்ட ஆத்துமாவானது, அதின் அனைத்து மேன்மையான வல்லமைகளோடும் தேவனுடைய சேவைக்காக அர்ப்பணிக்கப்படும் பொழுது, உன்னதமான ஒரு தகுதியைப் பெற்றுக்கொள்கிறது. Mar 632.1

ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் வீட்டிலே என்றுமாக குடியிருந்து, சரீர, மன, ஆத்துமத்திலே, பாவத்தினுடைய சாபத்தின் இருண்ட சுவடுகளையல்ல, தன்னை உண்டாக்கினவரின் பரிபூரண சாயலைப் பெற்றுக்கொண்டு, ஞானத்திலும், அறிவிலும், பரிசுத்தத்திலும் நித்திய நித்தியமாக முன்னேறி, எப்போதும் புதிய ஆச்சரியங்களையும் புதிய மகிமைகளையும் கண்டுபிடித்து, காரியங்களை அறிந்து--மகிழ்ந்து--நேசிக்கும்--திறனை எப்பொழுதும் பெருக்கிக்கொண்டு அனுபவிக்க, நமக்கும் அப்பால் பெற்றுக்கொள்ளக் கூடிய எல்லையற்ற மகிழ்ச்சியும், அன்பும், ஞானமும் மேலும் இருக்கிறதென்று அறியவேண்டும்; இத்தகைய குறிக்கோளே கிறிஸ்தவனின் நம்பிக்கையைச் சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கிறது.⋆ Mar 632.2

வாக்குத்தத்த வசனம்: Mar 632.3

“இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடு போஜனம்பண்ணுவான்.” - வெளிப்படுத்தல் 3:20. Mar 632.4