Go to full page →

நிறுக்கப்படும் நேரம்!, பிப்ரவரி 3 Mar 67

“...கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ?” - 1 சாமுவேல் 2:3. Mar 67.1

தேவனுடைய மக்கலில், குறிப்பாக இளைஞர்களது எண்ணங்களையும் விருப்பங்களையும் நிறுத்தக்கூடிய தராசை கையில் பிடித்தவனாக ஒரு தேவதூதன் நிற்கிறதைக் கண்டிருக்கிறேன். அந்தத் தராசின் ஒரு பக்கத்தில் பரத்தைநோக்கிய சிந்தைகளும், விருப்பங்களும் அடுத்த பக்கத்தில் இவ்வுலகை நோக்கிய சிந்தைகளும் விருப்பங்களும் வைக்கப்பட்டன, அந்தத் தராசில் கதைப் புத்தகங்கள் வாசித்தலும், ஆடை மற்றும் ஆடம்பர எண்ணங்களும், வீணான செயல்களும், பெருமை முதலிய னைத்தும் வைக்கப்பட்டன. ஆ! எத்தகைய ஒரு பயங்கரமான நேரம் அது! உலகிற்கு மரித்தவர்களும் தேவனுக்கென்று பிழைத்தவர்களுமென்று உரிமைகோரி, அவரது பிள்ளைகளென்று சொல்லிக் கொள்ளுகிறவர்களின் சிந்தைகளை நிருத்தவர்களாக தராசுடன் தேவதூதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். இவ்வுலக சிந்தைகள், வீண்செயல், பெருமை ஆகியவைகள் வைக்கப்பட்ட தராசின் பக்கம் பாரத்திற்கு மேல் பாரம் அதிகமாகி, தாங்கமுடியாமல் சீக்கிரம் கீழே சென்றது. பரலோக வாஞ்சைக்குரிய எண்ணங்கள் வைக்கப்பட்ட பக்கமோ, முந்தினது எவ்வளவு சீக்கிரம் கீழே சென்றதோ அவ்வளவு சீக்கிரமாகவே மேலே சென்றது. ஆ! அது எவ்வளவு இலேசானதாக இருந்தது. நான் கண்ட காட்சியை அப்படியே என்னால் கூறிவிட முடியும்; ஆனால், அந்தத் தூதன் தேவ மக்களின் விருப்பங்களையும் எண்ணங்களையும் நிறுத்திக் கொண்டிருக்கும், காட்சியை நான் கண்டபோது, என் மனதில் பதிந்த, பயபக்தியுடன் கூடிய ஆழ்ந்த உணர்ச்சியை என்னால் ஒருபோதும் விவரிக்க இயலாது. “இப்படிப்பட்டோர் மோட்சத்திற்குள் பிரவேசிக்க முடியுமா? ஒருக்காலும் முடியவே முடியாது. அவர்கள் இப்பொழுது கொண்டிருக்கும் நம்பிக்கை வீண். அவர்கள் சீக்கிரம் மனந்திரும்பி, இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டாலொழிய அவர்கள் அழிந்துபோவார்கள் என்று கூறுவாயாக” என்று அந்த தூதன் கூறினான். Mar 67.2

பலர் தங்கலித் தாங்களே - தங்கள் மத்தியில் வாழும் மற்றவர்களது வாழ்க்கையோடு ஒப்பிட்டு, மதிப்பீடு செய்கிறதை நான் கண்டேன். அது அப்படி இருக்கக்கூடாது. கிறிஸ்துவைத் தவிர வேறொருவரும் நமக்கு உதாரணமாகக் கொடுக்கப்படவில்லை. நமது வாழ்க்கை அமைப்பின் உண்மையான மாதிரி கிறிஸ்துவே. அவரைப் பிரதிபலிப்பதில் சிறந்து விளங்க ஒவ்வொருவரும் முற்படவேண்டும். Mar 68.1

சுயத்தை வெறுத்தல் அல்லது தியாகம் என்பதையோ அல்லது சத்தியத்தினிமித்தம் துன்பப்படுவது என்பதையோ சிலர் இன்னும் அறியவில்லை என்பதையும் நான் கண்டேன். ஒருவரும் தியாகஞ் செய்யாமல், பரலோகத்திற்குள் பிரவேசிக்கமாட்டார்கள். சுயத்தை வெறுக்கும் ஆவியும், தியாக மனப்பான்மையின் ஆவியும் நம்மால் நேஜார நேசிக்கப்பட வேண்டும். சிலர் தனகளையும் தங்களது சொந்த சரீரங்களையும் தேவனுக்கென்று அவரது பலிபீடத்தில் தியாகபலியாக ஒப்புக் கொடுக்கவில்லை. தேவனுடைய ஊழியத்தைக் குறித்து அக்கறையின்றி, பலர் தங்களுக்கு உடனே தோன்றும் பரபரப்போடு மனக்கிளர்ச்சிகளுக்கு இடங்கொடுத்து, பசியார்வங்களைத் திருப்திசெய்து, தங்கள் சுயவிருப்பத்தை நிறைவேற்றுதல் ஆகியவற்றில் திளைக்கின்றனர். நித்திய ஜீவனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய ஆயத்தமாயிருப்பவர்கள் அதைப் பெற்றுக் கொள்வார்கள். நித்திய ஜீவனுக்காகப் பாடுபடுதல், சுயத்தைச் சிலுவையில் அறிதல், ஒவ்வொரு விக்கிரகத்தையும் தியாகஞ் செய்தல் ஆகியவைகள் ஏற்புடைய தகுதிவாய்ந்தவைகளாகும். இவையனைத்திலும் அதிகமான - எல்லையற்ற - நித்திய - மகிமையானது, இவ்வுலக சுகங்கள் அனைத்தையும் மறைத்து, அவைகள் எல்லாவற்றையும் விழுங்கிவிடும்.⋆ Mar 68.2

வாக்குத்தத்தம் வசனம்: Mar 68.3

“தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்து வைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.” - சங்கீதம் 27:5. Mar 68.4