Go to full page →

பாவத்தின் ஒரேயொரு ஞாபகச் சின்னம்!, டிசம்பர் 6 Mar 679

“இதோ, நீதிமனுக்கு பூமியில் சரிகட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.” - நீதிமொழிகள் 11:31. Mar 679.1

துன்மார்க்கர் தங்களுக்கான சரிகட்டுதலை (தண்டனைகளை) பூமியிலே பெற்றுகொள்கிறார்கள்-நீதிமொழிகள் 11:31... “அவர்கள் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களை சுட்டெரிக்கும்... என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” -மல்கியா 4:1. சிலர் ஒரு நொடிப்பொழுதிலே அழிக்கப்படுவதுபோல அழிந்துபோகிறார்கள்; ஆனால், மற்றவர்களோ பல நாட்கள் வேதனைப்படுகிறார்கள். “தங்கள் கிரியைக்குத்தக்கதாக” அனைவரும் தண்டிக்கப்படுகிறார்கள். நீதிமாங்களின் பாவம் சாத்தான்மேல் சுமத்தப்படும். பரலோகத்தில் தான் செய்த கலகத்திற்காக மட்டுமல்லாது, தேவப்பிள்ளைகளை செய்யவைத்த அனைத்துப் பாவங்களுக்காகவும் சாத்தான் பாடுபடவேண்டும். அவனால் ஏமாற்றப்பட்டவர்கள் அனுபவிக்கும் தண்டனையைவிட, சாத்தானுக்கான தண்டனை மிகவும் அதிகமாக இருக்கும். அவனுடைய வஞ்சங்களால் விழுந்தவர்கள் அனைவரும் அழிந்துபோனபின்னருங்கூட, சாத்தான் மேலும் உயிரோடு இருந்து, வேதனையை அனுபவிக்க வேண்டும். சுத்திகரிக்கும் அக்கினியில் இறுதியாக துன்மார்க்கர் முற்றிலுமாக-வேரும் கொப்பும் இல்லாமல், அழிக்கப்படுவார்கள். வேர்-சாத்தான், கொப்புகள்-அவனைப் பின்பற்றியவர்கள். Mar 679.2

சாத்தானும் அவனுடன் சேர்ந்து தேவனுக்கு விரோதமாகக் கலகஞ்செய்தவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்... “துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.” - சங்கீதம் 37:10; “இராதவர்களைப்போல் இருப்பார்கள். - ஒபதியா 1:16. Mar 679.3

தேவ நீதியானது திருப்தியடைகிறது. பரிசுத்தவான்களும் தேவ தூதர் சேனையும் உரத்த சத்தமாக: “ஆமென்” என்றார். Mar 680.1

தேவனின் நியாயந்தீர்க்கும் அக்கினியால் இப்பூமி சூழப்பட்டு இருக்கும் தருணத்தில், நீதிமான்கள் பரிசுத்தப் பட்டணத்திலே பாதுகாப்போடு தங்கியிருக்கிறார்கள். “முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை” - வெளி. 20:6. துன்மார்க்கருக்கு பட்சிக்கிற அக்கினியாக இருக்கும் தேவன், தம்முடைய பிள்ளைகளுக்கு “சூரியனும் கேடகமுமாவார்” -சங்கீதம் 84:11. Mar 680.2

துன்மார்க்கரைப் பட்சிக்கும் அக்கினி, பூமியைச் சுத்திகரிக்கும்; சாபத்தின் ஒவ்வொரு சுவடும் அழிக்கப்பட்டாயிற்று. மீட்கப்பட்டவர்களின் முன்பாக, பாவத்தின் பயங்கர விளைவுகளை உணர்த்த, நித்தியகாலமாக எரிந்துகொண்டிருக்கும் நரகம் இருக்கப்போவது இல்லை. Mar 680.3

ஒன்றே ஒன்று, பாவத்தின் கோரத்தை ஞாபகப்படுத்திக்கொண்டேயிருக்கும்; ஆம், நம் மீட்பர் என்றென்றைக்குமாகச் சிலுவையின் தழும்புகளைச் சுமந்துகொண்டிருப்பார்... Mar 680.4

பாவத்தால் இழக்கப்பட்ட அனைத்தும் மீட்கப்பட்டாயிற்று... மீட்கப்பட்டவர்கள் இந்த பூமியைச் சுதந்தரிப்பதின்மூலம், தேவன் பூமியைச் சிருஷ்டித்ததின் உண்மையான நோக்கம் நிறைவேறுதலை அடைந்தது. “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” - சங்கீதம் 37:29.⋆ Mar 680.5

வாக்குத்தத்த வசனம்: Mar 680.6

“சாந்தகுணமுள்ளவர்கள் பாகியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.” - மத்தேயு 5:5. Mar 680.7