Go to full page →

வரும் காலங்களில் ஓய்வுநாள் ஆசரிப்பு!, டிசம்பர் 29 Mar 725

“நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது: மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.” - ஏசாயா 66:22,23. Mar 725.1

ஆதியிலே சிருஷ்டிப்பின் கிரியைகளை முடித்துவிட்டு பிதாவும், குமாரனும் ஓய்வுநாளிலே ஓய்ந்திருந்தனர். “வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்த” பொழுது (ஆதி. 2:1), சிருஷ்டிகரும் பரலோகவாசிகளும் அந்த மகிமையான காட்சியின் தியானத்தில் களிகூர்ந்தனர். “விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே...” - யோபு 38:7. “உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித்தீருங்காலங்கள்...” (அப்போஸ்தலர் 3:21) வருமளவும், சிருஷ்டிப்பின் ஓய்வுநாள், யோசேப்பின் கல்லறையில் இயேசு ஓய்வெடுத்த அந்த நாள், மாறாமல் களிகூரும் நாளாகவும், ஓய்வுகொள்ளும் நாளாகவும் விளங்கும். பரலோகமும் பூமியும் இணைந்து, “ஓய்வுநாள் தோறும்” இரட்சிக்கப்பட்ட ஜாதிகள் தேவனையும் ஆட்டுக்குட்ட்யானவரையும் மகிழ்ச்சியோடு பணிந்து தொழுதுகொள்வார்கள். Mar 725.2

இரட்சிக்கப்பட்ட ஜாதிகள் பரலோகப் பிரமாணங்களைத் தவிர வேறு பிரமாணங்களை அறியமாட்டார்கள். துதித்தல், நன்றி செலுத்துதலின் உடைகளைத் தரித்தவர்களாக, அனைவரும் மகிழ்ச்சியோடு ஓரே குடும்பமாக ஐக்கியத்தோடு காணப்படுவர். இந்தக் காட்சியால், விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடும்; தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரிப்பார்கள்... Mar 725.3

“அப்பொழுது மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.”; “கர்த்தருடைய மகிமை வெளிப்படும் மாம்சமான யாவரும் அதைக் காண்பார்கள்.” “கர்த்தராகிய ஆண்டவர், தேசங்கள் அனைத்திற்க்கும் முன்பாக நீதியையும், துதித்தலையும் எழும்பப்பண்ணுவார்”; “அந்த நாளில் சேனைகளின் கர்த்தர், தமது ஜனத்தில் மீதியானவர்களுக்கு, மகிமையின் கிரீடமும், அலங்காரமான முடியுமாயிருப்பார்.” ஏசாயா 66:23, 28:5. Mar 726.1

பூமியும் வானங்களும் நிலைத்து நிற்குமளவும், ஓய்வுநாளும் தொடர்ந்து சிருஷ்டிகரின் வல்லமைக்கு ஒரு அடையாளமாக விளங்கும். ஏதேன் மீண்டும் இப்பூமியில் மலரும்பொழுது, தேவனின் பரிசுத்த ஓய்வுநாள் சூரியனுக்கு கீழே எல்லாராலும் கனப்படுத்தப்படும். “ஓய்வுநாள் தோறும்” மகிமையான புதிய பூமியில் வாசம்பண்ணுகிற யாவரும், “எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்” - ஏசாயா 66:23.⋆ Mar 726.2

வாக்குத்தத்த வசனம்: Mar 726.3

“...ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நிய புத்திரர் அனைவரையும், நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெப வீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்...” -ஏசாயா 56:6,7. Mar 726.4