Go to full page →

பதில் கொடுப்பதற்கு ஆயத்தமாயிருத்தல்!, பிப்ரவரி 6 Mar 73

“கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாக இருங்கள்.” - 1 பேதுரு 3:15 Mar 73.1

நிகழ்கால சத்தியத்தைக்குறித்த அறிவு தங்களுக்கு இருக்கிறது என்று சொல்லிக்கொள்ளும் பலர், தாங்கள் நம்புகிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களென்று எனக்குக் கண்பிக்கப்பட்டது. தங்கள் விசுவசத்திற்கான ஆதாரங்களை அவர்கள் புரிந்துகொள்ளுவதில்லை. தற்போதைய பணிகளை அவர்கள் சரியாக மதிப்பிடவில்லை; இப்பொழுது, மற்றவர்களுக்கு பிரசங்கித்துக்கொண்டிருப்பவர்கள், இக்கட்டுக்காலத்தில் தாங்கள் கொண்டிருக்கும் நிலையில் சோதிக்கப்பட்டு, பல காரியங்களுக்கு திருப்திகரமான பதிலளிக்கமுடியாத நிலையிலிருப்பதைக் கண்டுகொள்வார்கள். அவர்கள் இவ்வாறு சோதிக்கப்படும்வரை, தங்களது மாபெரும் அறியாமையை உணர்ந்துகொள்ளமாட்டார்கள். தாங்கள் நம்புகின்றதைப் புரிந்திகொண்டிருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள் பலர் சபையில் இருக்கின்றனர்; ஆனால், முரண்பாடு தோன்றும்வரைக்கும் தங்களது சுய பெலவீனத்தைப்பற்றி அறியாதிருக்கிறார்கள். தங்களைப்போன்ற விசுவசமுடையவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டவர்களாக தனித்துநின்று, தங்கள் நம்பிக்கையை விளக்கவேண்டிய கட்டாயம் வரும்போது, தாங்கள் சத்தியம் என்று ஏற்றுக்கொண்ட கொள்கைகள் எவ்வளவு குழப்பமுடையவைகள் எனக் கண்டு ஆச்சரியமைவார்கள்... Mar 73.2

தேவன் தமது மக்களை எழுப்புவார். மற்ற வழிகள் தோல்வியுறும்பொழுது, முரண்பட்ட கோட்பாடுகள் அவர்களுக்கு மத்தியில் தோன்றி அவர்களைச் சலித்து, கோதுமையினின்று பதரைப் பிரித்தெடுக்கும். தமது வார்த்தையை நம்பும் அனைவரையும் தேவன் நித்திரையினின்று எழுப்புவார். இந்தக் காலத்திற்கேற்ற விலையுயர்ந்த ஒளி வந்தது... சத்தியத்தைக்குறித்த சில யூகங்களிலும், சரியன விளக்கமில்லாத கொள்கைகளிலும் விசுவசிகள் ஓய்ந்துவிடக்கூடது. சோதனைக் காலத்தில் அவர்கள் தங்கள் விசுவசத்திற்கு பதிலளிக்குமாறு விசாரணை மன்றத்திற்குக் கொண்டுசெல்லப்படும்போது, அடக்கத்தோடும் அச்சதோடும் அவர்கள் தங்களுக்குள்ள நம்பிக்கைக்குக் காரணம் தரக்கூடிய வகையில், அவர்களது விசுவாசம் தேவ வார்தையின்மேல் திடமாகக் காணப்பட வேண்டும். Mar 73.3

கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் தங்கள் விசுவசத்திற்கென்று இக்கட்டிற்கு உட்படும்போது, ஒரு பிரசங்கத்தை ஆயத்தப்படுத்த வேண்டுவதில்லை. அவர்கள் தேவ வார்த்தையின் சத்தியத்தை பொக்கிஷமாக இதயத்தில் இருத்தி, கிறிஸ்து கற்பித்தவைகளை உட்கொண்டு, ஜெபத்தினால் தங்கள் விசுவசத்தைப் பெலப்படுத்தி, அவைகளால் ஒவ்வொருனாளும் ஆயத்தப்படவேண்டும். பின்பு, அவர்கள் இக்கட்டிற்குட்படும்போது, அவர்கள் பேசவேண்டிய, வேட்போரின் இருதயம்வரை ஊடுருவிச்செல்லக்கூடிய, மெய்யான சத்தியத்தை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு நினைப்பூட்டுவார். Mar 74.1

அவர்கள் வேதத்தை ஊக்கமாகத்தேடி ஆராய்ந்து பெற்றுக்கொண்டாவைகளை, தேவைப்படும் வேளையில், ஒரு மின்னலைப்போல தேவன் நினைப்பூட்டுவார்.⋆ Mar 74.2

வாக்குத்தத்த வசனம்: Mar 74.3

“என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்தஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” - யோவான் 14:26. Mar 74.4