Go to full page →

மீட்கப்பட்டவர்கள் நித்திய வாழ்வில் அடையும் பலன் என்ன?, டிசம்பர் 31 Mar 729

“நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.” - சங்கீதம் 91:16. Mar 729.1

தேவனால் மீட்கப்பட்டோர் படிப்பதற்காக, பரலோகப் பொக்கிஷங்கள் எல்லாம் திறந்திருக்கும், அவர்கள் மரணக்கட்டுகளிலிருந்து விடுதலை பெற்றவர்களாக, தூரமான உலகங்களுக்கும் களைப்பின்றி பறந்து திரிவர். இந்த உலகங்கள் தான் மனிதனின் சாபத்தைக்கண்டு வருந்தியவைகளும், ஒரு பாவி மனந்திரும்பிய செய்தியைக்கேட்டு மகிழ்ந்தவைகளுமாகும். சொல்லமுடியாத களிப்போடு, இப்பூமியின் மக்கள், விழுந்துபோகாத ஜீவங்களின் ஞானத்திலும், மகிழ்ச்சியிலும் பிரவேசிப்பார்கள். தேவனுடைய கரத்தின் கிரியைகளை, காலங்காலங்களும் தியானித்ததின் விளைவாக ஏற்பட்ட, தெளிந்த அறிவாகிய பொக்கிஷத்தைப் பங்கிட்டுக்கொள்வார்கள். தெய்வீக சிம்மாசனத்தைச் சுற்றி, தங்களுக்குக் குறிக்கப்பட்ட பாதையில் ஓடுகின்ற, தேவனுடைய மகிமையான படைப்பாகிய, சூரியங்களையும் நட்சத்திரங்களையும் அதன் அமைப்புகளையும், மங்காத பார்வையோடு பிரமித்து நோக்குவார்கள். சிறியவற்றிலிருந்து, பெரியவைவரை அனைத்தின்மேலும் படைத்தவரின் நாமம் எழுதப்பட்டிருக்கும்; அவருடைய வல்லமையின் ஐசுவரியம் வெளிப்பட்டிருக்கும். Mar 729.2

நித்தியத்தின் ஆண்டுகள் ஒவ்வொன்றாக உருண்டோட, தேவனைப்பற்றியும், கிறிஸ்துவைப்பற்றியும் அதிகமதிகமான-மகிமையான வெளிப்பாடுகள் வந்துகொண்டேயிருக்கும். அறிவு பெருகிக்கொண்டே செல்வதுபோல, அன்பும், பயபக்தியும், மகிழ்சியும் பெருகும். தேவனைப்பற்றிய அறிவு மனிதனுக்கு வளருகின்றபொழுது, மேலும் அதிகமதிகமாக, அவருடைய குணாதிசயங்களை எண்ணி பிரமிப்பான். நீட்பின் ஐசுவரியத்தையும் சாத்தானுடனான மாபெரும் போராட்டத்தில் அவர் அடைந்த வியப்பூட்டும் சாதனைகளையும், அவர்களுக்கு முன்பாக இயேசுவானவர் திறந்து வெளிப்படுத்தும்பொழுது, மீட்கப்பட்டோரின் இதயங்கள் ஆண்டவருக்கு உண்மயாகச் சேவைக்கவேண்டுமென்று அவர்களை உந்த, ஆனந்தக்களிப்போடு, அவர்கள் தங்களின் பொன்னாலான சுரமண்டலங்களை மீட்டி, ஆயிரம் பதினாயிரமான தங்கள் குரல்களை ஒருங்கிணைத்து மாபெரும் துதியின் கீதத்தை எழும்பப்பண்ணுவார்கள். Mar 729.3

“அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடக்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக” என்று சொல்லக்கேட்டேன் - வெளி. 5:13. Mar 730.1

மாபெரும் போராட்டம் முடிவடைந்தது! பாவமும் பாவிகளும் இனி இருக்கமாட்டார்கள்! அண்டசராசரம் முழுவதும் தூய்மை அடைந்துவிட்டது! பரந்து விரிந்த படைப்பு முழுவதிலும் மகிழ்ச்சியும் ஒருமைப்பாடும் நாடித்துடிப்புபோல ஒரே சீராக விளங்கும். எல்லையில்லா விண்வெளி எங்கும் சிருஷ்டி கர்த்தாவாகிய அவரிடமிருந்து ஜீவனும், ஒளியும், மகிழ்ச்சியும் புறப்பட்டு பாய்ந்தோடும். நுண்ணிய அணுவிலிருந்து, மிகப் பெரிய உலகம் வரை உயிருள்ளவை, உயிரற்றவை அனைத்தும் தங்கள் பூரண மகிழ்ச்சியிலும் அழகிலும் தேவன் அன்பாயிருக்கிறார் என்பதைப் பறைசாற்றுகிறது. ⋆ Mar 730.2

வாக்குத்தத்த வசனம்: Mar 730.3

“இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.” -வெளிப்படுத்தல் 22:12. Mar 730.4