Go to full page →

இங்கே விக்கிரகங்கள் ஏதாவது இருக்கின்றனவா?, பிப்ரவரி 9 Mar 79

“பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக...” - யோவான் 5.21. Mar 79.1

தேவனுடைய உண்மையான ஒவ்வொரு பிள்ளையும் கோதுமையைப்போல புடைக்கப்படுவார்கள் அவ்வாறு புடைக்கப்படும்போது, தேவனுடமிருந்து நம்மைத் திசைதிருப்பக்கூடிய, இனிமையாகத் தோன்றுகின்ற ஒவ்வொரு சிற்றின்பமும் தியாகம் செய்யப்பட வேண்டும். பல குடும்பங்களில் அலமாரிகளும், நிலைகளும், மேசைகளும், அலங்காரப் பொருட்களும், படங்களாலும் நிறைந்துள்ளன... இவ்வாறு, தேவன்மேலும் பரலோகத்தின்மேலும் இருக்கவேண்டிய நம் சிந்தை, சாதாரணக் காரியங்களுக்குக் கொண்டுவரப்படுகிறது. இது விக்கிரக ஆராதனையின் ஒருவகையல்லவா? இவ்வாறு செலவிடப்பட்ட பணங்கள் மனிதனின் ஆசிர்வாதத்திற்கும், பசியுள்ளோர்க்கு ஆகாரம் கொடுக்கவும் பயன்படுத்தலாம் அல்லவா? அவரது காரியங்களைத் துரிதப்படுத்தவும், பூமியில் அவரது இராஜ்யத்தை ஸ்தாபிக்கவுந்தக்கதாக அவைகளை கர்த்தருடைய பொக்கிஷ அறையில் வைக்கலாம் அல்லவா? Mar 79.2

இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காரியமாகும். உங்களை விக்கிரக ஆராதனையின் பாவத்திலிருந்து காத்துக் கொள்ள, இது உங்களை வலியுறுத்துவதாக இருக்கிறது. “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்” என்னும் இஸ்ரவேலின் பரிசுத்தரால் சொல்லப்பட்ட இவ்வார்த்தைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் ஆசீர்வதிக்க்ப்படுவீர்கள். தங்கள் வீடுகளை நிறைத்துள்ள தேவையல்லாத அலங்கரிப்புகளுக்காக, தங்கள் நேரத்தையும் சிந்தனையும் செலவிட்டு, தேவையில்லாத கவலைகளையும் மன உளைச்சல்களையும் பலர் வருவித்துக்கொள்கிறார்கள். எந்த நோக்கத்தின்படி பார்த்தாலும், அது விக்கிரக ஆராதனைதான்! இவைகள் மேலுள்ள ஈடுபாட்டிலிருந்து விடுபட்டு வருமாறு எழுப்பப்படுவதற்கு, தேவ வல்லமை அவசியமாகிறது. Mar 79.3

இதயத்தை ஆராய்கிறவர், தம் மக்கள் எல்லாவகை விக்கிரக ஆராதனைகளிலும் வெற்றிசிறக்க வாஞ்சிக்கிறார். வீணான அலங்காரப் பொருட்களால் நிறைந்துள்ள மேசைகள், ஆசீர்வதிக்கப் பட்ட ஜீவ புத்தகமாகிய தேவனுடைய வார்த்தையினால் நிறைக்கப் படட்டும். நிகழ்கால சத்தியத்திற்கடுத்தவைகளைக்குறித்து உங்கள் மனதை தெளிவிக்கக்கூடிய நூல்களை வாங்குவதற்கென்று உங்கள் பொருளைச் செலவிடுங்கள்... எண்ணிலடங்கா ஞானம், அன்பு ஆகிய பொக்கிஷங்களைப்போல, கர்த்தரது வார்த்தையை பற்றிக் கொள்ளுங்கள்; பரலோகத்திற்குச் செல்லும் வழியைச் சுட்டிக்காட்டும் வழிகாட்டி அதுவே... Mar 80.1

ஆ! ஜெப சிந்தையோடுகூடிய இதயமுள்ளவர்களாகவும், தேவனிடம் சரணடைந்த ஆவியுள்ளவர்களாகவும் நீங்கள் வேதத்தை ஆராய்ந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்கள் இதயங்களை எரிகின்ற மெழுகுவர்த்தியைக்கொண்டு ஆராய்ந்து, தேவனிடமிருந்து உங்கள் மனதைத் திசைதிருப்பும் உலகப் பழக்கவழக்கங்களுடன் உங்களை இணைக்கும் மிகவும் மென்மையான நூல்களையும் (Thread) அகற்றிப்போட்டால், எவ்வளவு நன்றாக இருக்கும்! தேவனிடமிருந்து உங்கள் சிந்தனையையும் பிணைப்பையும் பின்னிழுக்கும் ஒவ்வொரு செய்கையும் வெளிப்படுத்திக் காட்டும்படி அவரிடம் கெஞ்சி மன்றாடுங்கள். தேவன் மனிதனுக்கு தமது பரிசுத்த பிரமாணத்தை, குணத்தை அளக்கும் அளவுகோலாக கொடுத்துள்ளார். இந்தப் பிரமாணத்தின்மூலமாக, உங்கள் குணத்தில் காணப்படுகின்ற ஒவ்வொரு குறையையும் கண்டறிந்து, அதை நீங்கள் மேற்கொள்ளலாம். ஒவ்வொரு விக்கிரகத்திடமிருந்தும் உங்களைப் பிரித்து, சத்தியம், கிருபை என்னும் தங்கச் சங்கிலியால், தேவனது சிம்மாசனத்துடன் உங்களை நீங்களே இணைத்துக்கொள்ளலாம்.⋆ Mar 80.2

வாக்குத்தத்த வசனம்: Mar 80.3

“இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்” - மத்தேயு 5:8 Mar 80.4