Go to full page →

தனித்தன்மையோடு வித்தியாசமானவராக இருக்க உங்களுக்குத் துணிவு உண்டா? பிப்ரவரி 12 Mar 85

“நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், இராஜரீகமான ஆசாரியகூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.” - 1 பேதுரு 2.9 Mar 85.1

“மனுஷகுமாரன் சீக்கிரம் வானத்தின் மேகத்தில் வரவிருக்கிறார்” என்கிற எச்சரிக்கை பலருக்கு நன்கு அறியப்பட்ட ஒரு பழங்கதையாக இருக்கிறது. அவர்கள் காத்திருத்தலையும் எதிர்நோக்கியிருத்தலையும் விட்டுவிட்டனர். அவர்கள் இதயத்தின் எண்ணமாகிய, “என் ஆண்டவன் வர நாட்செல்லும்” என்ற சொற்றொடரானது அவர்கள் சுயநலத்தையும் வாழ்க்கையில் அவர்களால் செயல்படுத்தப்படுகிற இவ்வுலக ஆவியையும் வெளிப்படுத்துகிறது... Mar 85.2

சுயநலம், இவ்வுலகிற்குரிய பழக்கவழக்கங்களின் ஆவி, நோவாவின் நாட்களில் இருந்ததுபோல, நமது நாட்களிலும் இருக்கிறது. தேவனுடைய பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்ளும் பலர், தாங்கள் கூறுவது பொய் என்பதுபோல, உலகிற்கு அடுத்த காரியங்களில் மிகவும் அதிகமாகப் பின்பற்றிப் போகிறார்கள். மேலும் தங்கள் கிருபையின் காலம் முடியும் வரைக்கும் “திட்டமிடுதலும், கட்டிடங்களை எழுப்பவும், வாங்கவும், விற்கவும், புசித்தும், குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும்” கிருபையின் கால முடிவின் கடைசி நொடிப்பொழுதுவரை இப்படியேதான் செயல்பட்டுகொண்டு இருப்பார்கள். நமது சொந்த மக்கள் பலரின் நிலையும் இதுதான்.... Mar 85.3

நம் மத்தியிலுள்ள ஆவிக்குரிய நிலையில் காணப்படும் குறவை நான் காணும்பொழுது, எனது ஆத்துமா பாரத்தால் நிறைகிறது. இவ்வுலகின் நாகரீகப் பழக்கவழக்கங்கள், பெருமை, பொழுதுபோக்கில் நாட்டம், கண்காட்சி, உடை, வீடு, நிலம், ஆகியவைகளிலுள்ள ஆடம்பரம் போன்ற காரியங்கள் தேவனுடைய பொக்கிஷத்தைக் கொள்ளையிட்டு, உலகிற்கு சத்திய ஒளியை அனுப்புவதற்குரிய வழிவகைகளை தங்கள் சுய மகிழ்ச்சிக்காகத் திருப்பிவிடுகின்றன... Mar 85.4

ஒளியின் பிள்ளைகளும் பகலின் பிள்ளைகளுமாகிய இவர்களைச் சுற்றிலும், அநீதியின் ஊழியக்கார்களைச் சூழ்ந்திருக்கும் இருளும் இரவின் நிழலும் காணப்படக்கூடாது. மாறாக, ஒளியைப் பிடித்திருப்பவர்கள் விசுவாசத்துடன் நிலைநின்று, தங்கள் கடமையை நிறைவேற்றும் வண்ணம், தேவனிடமிருந்து ஒளியைப் பெற்று, அதை இருளில் இருப்பவர்கள்மீது பிரகாசிப்பிக்க வேண்டும். தேவன் தமது பிள்ளைகள் தங்கள் நேர்மையைப் பாதுகாத்துக் கொள்ளவும், இறையுணர்வு இல்லாதவர்களைப்போன்று பாவனை செய்யாமலிருக்கவும் வேண்டுகிறார். Mar 86.1

கிறிஸ்தவர்கள் தங்களை, “அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குப் பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும்...” இருப்பார்கள். இந்த ஒளி, மங்காமல் நிறைவான அந்த நாள் வரும்மட்டும் அதிகமதிகமாகப் பிரகாசிக்க வேண்டும்... “கர்த்தர் சமீபமாயிருக்கிறார்; நீங்களும் ஆயத்தமாயிருங்கள்” என்று நம் காதில் தொனித்துக் கொண்டே இருக்கும் வியப்பான சத்தியமானது, நாம் அந்த தூதை முதன் முதலில் கேட்டதைக் காட்டிலும், இப்பொழுது அந்த சத்தியமானது எவ்விததிலும் குறைவுபட்டுக் காணப்படவில்லை; குறைந்த உண்மையுள்ளதாகவும் இருக்கவில்லை.⋆ Mar 86.2

வாக்குத்தத்த வசனம்: Mar 86.3

“....விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அனுபவிப்பார்கள்.” - ஏசாயா 65:22. Mar 86.4